மனஇறுக்கம்…
நிமிடங்கள்….
கலக்க இருள்
கொஞ்சம் நஞ்சம் அல்ல…
உணர்வுகளை காயப்படுத்தி…
நம்மவர்கள் ராசராசன், பூலித்தேவன்
அனைவரையும் இது
இப்படிதான்
செய்திருக்குமோ….
ரணங்களை தாங்கி..
நொடிகளில் சுவசிப்பவர்கள்…
இல்லாத துயரங்களில்
மனதை தைக்க…
இருக்கும் நிமிடங்களை
இழக்க தயாரில்லை..
பழனி பாத யாத்திரை…பயணம்… கொஞ்சம் காமெடி கூட… பயணம்-2
கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே…
காந்தி தேசமே….உனக்கு கண் இல்லையா…
காந்தி தேசமே….உனக்கு கண் இல்லையா…சிங்களவனே…உனக்கு நெஞ்சில் ஈரமில்லையா
மனதை பாதித்த ஈழத்து கவிதை…
http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html
நேற்றைய அவளுடைய சாவு
எனக்கு
வேதனையைத் தரவில்லை
மரத்துப் போய்விட்ட
உணர்வுகளுக்குள்
அதிர்ந்துப் போதல்
எப்படி நிகழும்?
அன்பான என் தமிழச்சிகளே,
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?
ஆகவே, வாருங்கள்
உடைகளை கழற்றி
உங்களை
நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்.
என் அம்மாவே
உன்னையும் தான்!
சமாதானத்திற்காய் போரிடும்?
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள்
யோனிகளைத் திறவுங்கள்…
பாவம்,
அவர்களின் வக்கீரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்?
வீரர்களே வாருங்கள்
உங்கள் வக்கிரங்களைத்
தீர்த்துக் கொள்ளுங்கள்.
என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா நின்று விடாதீர்!
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.
ஆகவே,
வெடி வைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி,
அள்ளிப் புதையுங்கள்.
இனிமேல் எம்மினம்
தளிர் விடமுடியாதபடி.
சிங்களச் சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு இப்போது தேவையில்லை.
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 06
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 01
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 02
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 03
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 04
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 05
நேற்று நடந்த விடயங்களை மனது அசைபோட துவங்கியது உள்ளுக்குள் ஓடிய காதல் நிகழ்வுகள் அந்த அதிகாலையில் யாருமற்ற தனிமையில் ரம்மியமாக இருந்தது. நேற்று நடந்தது…இதுதான்… எங்கோ ஒரு மூலையில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத இடத்தில் அமர்ந்து கணிப்பொறியில் “C” மொழியில் ஒரு பாடத்தினை பழகிக்கொண்டிருந்தேன் ஆய்வு கூடத்தில். இதில் நண்பர்களுக்குள் போட்டி வேறு யார் முதலில் முடிப்பது என்று.. அன்று ஏனோ அவள் தாமதமாக வந்திருக்கிறாள் வந்தவள் என்னை காணத வெறுப்பில் கணிபொறி ஆய்வு கூடத்தின் வாசலில் நான் உள்ளே இருப்பது கூட தெரியாமல் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்திருக்கிறாள். பிறகு என்ன நினைத்தலோ ஆய்வு கூடத்தின் உள்ளே வந்தவள் சரியாக வேலை செய்யாத ஒரு கணிப்பொறியில் அமர்த்து எதோ செய்துகொண்டிருந்தால்… அந்த நிமிடம் தான் நான் அவளை பார்த்தேன் அன்று என்னவோ தெரியவில்லை ஆய்வு கூடம் நிரம்பி வழிந்தது மாணவ மாணவிகளால். அவள் வெறுப்பின் உச்சியில் இருந்தது அவள் முகத்தில் கண்ணாடியாக பிரதிபலித்தது. நான் அவளை நோக்கி கையை நீட்டியது தான் தாமதம்… திரும்பி ஒரு முறை முறைத்தாள்…இதயம் வலித்தது…நொறுங்கிப்போனேன்…
என்னுடன் உட்கார்திருந்த மூன்று நண்பர்களை நகர சொல்லி அவளை நோக்கி வந்தேன்… அவளை நெருங்கி அவள் பெயரை சொல்லி அழைத்தேன்… தவறு என்னுடையது தான் அவள் இல்லாமல் நான் என்றுமே ஆய்வு கூடத்தில் நுழைந்தது இல்லை ஆனால் அன்று நண்பர்களுக்கிடையே நடந்த போட்டி என்னை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டது. அவள் பேசவில்லை நான் அருகில் அமர்ந்தேன்…எப்பவும் அவள் அருகில் உட்காரும் போது இருப்பதை விட இன்று என் உணர்வுகள் மேலோங்க ஆரம்பித்துவிட்டது…அவளிடம் இருந்து வந்த வாசமா…இல்லை அவளை காயபடுத்திவிட்டோம் என்கின்ற குற்றஉணர்ச்சியா எதுவென்று புலப்படவில்லை.
கணிபொறியில் இணைத்துள்ள விசைப்பலகை ஒழுங்காக இணைக்கபடாமல் இருந்ததால் அது சரியாக வேலை செய்யவில்லை. அதை சரி செய்தேன் ஆனால் சரியாகவில்லை…கணிப்பொறியுடன் நான் போட்டுகொண்டிருக்கும் சண்டையை அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை…ஒரு வழியாய் அதை சரிசெய்து கொடுத்துவிட்டு “sorry” என்றேன்.. ஒரு பதிலும் இல்லை…
அவளுடைய கோபத்தில் எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது “மன்னிக்கமாட்டாயா உன் மனமிரங்கி”… ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை… முதல் முதலாக என் மேல் கோபப்படுகிறாள்… கோபத்தில் அவள் முகத்தை பார்த்தபொழுது எனக்கு கோபம் வரவில்லை…எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை அந்த உணர்வுகளை… முயற்சிக்கிறேன்.
உன் கோபத்தில் நான்
சாந்த நிலவாகி போனேன்…
உன் மனச்சூடு தாங்காமல்
முகிலாய் முகிழ்ந்தேன்…
இனியவளே!!! என் இயல்பை மாற்றிவிடாதே…
உன் சுவாசக்காற்றின் வாயுத்துகள்கள்…
என் விலாசம் தேடி வந்து இம்சிக்கின்றன
தொடரும்…
எல்லை இல்லா… தரூர்…
ஐபிஎல் ஊழலில் சிக்கி பதவியிழந்த தரூருக்குப் புதுப் பதவி – கவிதை பிறந்த காரணம்
நெஞ்சு பொறுக்குதில்லை…
தப்பு செய்தால்…அறியாமல்…
மன்னிக்கலாம்…
இவரோ தவறு செய்திருக்கிறார்…தெரிந்தே…
இவர்கள் எப்போதுமே சரியாக…
தண்டிக்கபடுவதிலை…
இவர்கள் தண்டனையை அனுபவிப்பது… கழிப்பது…
பொது சனங்களே.
ஊழல் புகார்…பதவி இழப்பு…புது பதவி…
கட்சியில் இருப்பதால் இவர்கள்… எல்லாம் கடந்தவர்கள்…
ஆமாம்.. எல்லை இல்லா ஊழல்…எல்லை இல்லா பதவி…
எல்லை இல்லா அதிகாரம்…எல்லை இல்லா பணம்…
மக்களை நிறுத்திவிடுகின்றனர்…வறுமையின் எல்லையில்…
பி.கு. மேலே உள்ள படம் இந்தியாவின் ஊழல் பற்றிய அகவரிசை(Index).
காங்கிராஸ் ஆதரவு இல்லாமல்….
காங்கிராஸ் ஆதரவு இல்லாமல்…. திராவிட கட்சிகள் வெல்ல முடியாது-கார்த்திக்சிதம்பரம் ஒரு கட்சில ஒம்பத்திரெண்டு தலைவரு… இந்த லட்சணத்தில… பல காலமா திராவிட கட்சி மேல சவாரி பண்ணியே அரசியல் நடத்தியாச்சு… ஆட்சிக்கு வந்து மட்டும் என்ன கிழிக்கபோறீங்க… கருணாநிதியும் ஜெவும் மிச்சம் வைத்திருக்கிற… இருக்கா இல்லையானு தெரியல… அதையும் கொள்ளை அடிப்பீங்க… ஒங்களுக்கு என்ன சார் குறைச்சல் இளவரசன் கணக்கா வாழ்க்கை வாழ்றீங்க…இந்தியாவே… உங்களுக்கு சொந்தம்… கொஞ்சம் நஞ்சம் தமிழருக்கு இருந்த உணர்ச்சியையும் திராவிட இனம்னு கருணாநிதி போட்ட வேசத்தில இன்னைக்கு வரைக்கும் யாரும் எழுந்திருக்க முடியல…
பழனி பாத யாத்திரை…பயணம்… கொஞ்சம் காமெடி கூட…











