காதல் மட்டுமே…இளவயது இலவசம்…பகுதி-10


காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 01
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 02
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 03
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 04
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 05
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 06
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 07
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 08
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 09

விலாசம் கையில் இருந்தாலும் ஏனோ முன் இருந்த வேகம் இப்போது இல்லை…நாட்கள் நகர்ந்தன…என் கணிபொறி படிப்பு முடியும் தருவாயில் இருந்தது…அந்த நேரம் நண்பர்களில் ஒருவன் கணிபொறி வாங்கி விற்பதில் உள்ள சூட்சமங்களை கற்று கொண்டான் அதனால் நண்பர்களிடம் அவனுக்கென்று ஒரு செல்வாக்கு உருவானது.

என் நண்பனின் மனதில் எதிர்கால திட்டம் ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது…அதில் என்னையும் இழுப்பதில் அவன் வெற்றிக் கொண்டான். சரியாக கணிப்பொறி படிப்பு முடிய அந்த மையத்தில் படித்த மூன்று நண்பர்களை சேர்த்துக் கொண்டு ஒரு கணிப்பொறி வாங்கி விற்கும் நிறுவனத்தை அவன் அமைக்க ஆரம்பித்தான்…எதிர்பார்த்த அளவிற்கு பணம் திரட்ட முடியாததால் என்னையும் ஒரு பங்குதாரனாக்க அழைப்பு விடுத்தான்.

கணிப்பொறி படிப்பு முடித்து சில நிறுவனங்களில் ஏறி இறங்கி எந்த வேலையும் கிடைக்காததால் அந்த அழைப்பை தட்டி கழிக்க முடியவில்லை.

பல கதைகளை சொல்லி வீட்டில் பணத்தை பிடுங்கினேன்…ஒரு நல்ல நாளில் எங்கள் நிறுவனம் இனிதே ஆரம்பம் ஆனது. நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனம் ஆதலால் எப்போதும் நண்பர்கள் கூட்டம் நிரம்பி வழியும்…ஆரம்ப நாட்களில் அரட்டைகளாகவே கழிந்தன பொழுதுகள்…அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில விற்பனைகள் நடந்தன அதுவும் நிறுவனத்தை நடத்தும் செலவுகளுக்கே சரியாய் இருந்தது.

அந்த சமயத்தில் தான் அகவி(pager) பயன்பாட்டுக்கு வந்தது. ஆளுக்கொரு அகவியை வைத்துக் கொண்டு நங்கள் நடத்திய கூத்துகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை…வெளிப் பார்வைக்கு நாங்கள் எல்லாம் தொழில் அதிபர்கள் உள்ளுக்குள் என்ன நடந்தது என்பது என் கூட்டாளிகளுக்கும் எனக்கும் தான் தெரியும்…நாங்கள் செய்த அலும்பல்கள் என்ன சொல்ல…பெற்றோர்களின் பணத்தை கொட்டி ஒரு நிறுவனத்தை எப்படி நடத்தக் கூடாது என்பதை நான் அங்கு கற்றுக் கொண்டேன்.

தொடரும்…

மனதில் நீந்துகிறாய்…

July 29, 2010 by · 2 Comments
Filed under: கவிதை, காதல் 


நீட்டிய கைகளை
மடக்கினாய்
உன் இனிய பொழுதுகள்
என்னுள் பிரவாகம் எடுத்தது…

நேரம் போகாத நிமிடங்கள்
உன் நேசத்தில்
கரைகிறது.

மலர்ந்தும் மலராததுமாக
அந்த ஒரு நொடியில்
பூவாய் பூக்கிறாய்…

உன் விழி திறந்து
காதல் வெப்பம்
நீக்கமற பரப்புகிறாய்…

தத்தி நீந்தும்
மீன் குஞ்சாய்
என் இமையில்
வழுக்கி
மனதில் நீந்துகிறாய்…

போர்க்குற்றம்… நல்ல நகைச்சுவை…

நடக்கும் சம்பவங்களை பார்த்தால் எந்த நாடுகளுக்கும் போர்க்குற்றத்தை பற்றி பேசாவோ விசாரிப்பதற்கு கோரிக்கை வைக்கவோ எந்த தகுதியும் இல்லை போல் தெரிகிறது…

அமெரிக்காவின், ஆப்கானிஸ்தான் மீதான போரில் மறைக்கப்பட்ட பல மனிதவுரிமை குற்றங்கள் சமீபத்தில் ஒரு இணையதளத்தில்( http://wardiary.wikileaks.org ) கசிந்த ராணுவ கோப்புகளில் பக்கம் பக்கமாக புதைந்து உள்ளது. கிட்டதட்ட 92,000 கோப்புகள் அத்தனையும் மனித உயிர்களை எதையோ போல் நினைத்து அமெரிக்க கூட்டு படைகள் நடத்திய கொடுமைகள்…

இதில் என்ன கொடுமை என்றால் அவர்களுக்கே தெரியாது எத்தனை அப்பாவி மனித உயிர்கள் பறிக்கப்பட்டது என்கின்ற விடயம். ராணுவ கோப்புகள் 2004 இருந்து 2010 வரையான காலகட்டத்தில் நடந்த பல நிகழ்வுகளை தவறுதலாக நடந்ததாக வகைப்படுத்தி உள்ளது. இதை விட மோசமான விடயம் இந்த ராணுவ ரகசியம் வெளியானதால் தங்கள் படைகளுக்கு என்ன வகையான தொல்லை ஏற்படும் என்பதே அவர்களுடைய இப்போதைய பெரிய கவலை…அமெரிக்க தலைவர்கள் கொடுக்கும் பேட்டிகளில் இருந்து தெரிய வரும் விடயமும் இது தான். ஒரு அமெரிக்கன் இறந்தால் ரத்த கண்ணீர் விடும் இவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த எதிரி உலகின் எந்த மூளையில் இருந்தாலும் கொடூரக் கரங்களால் கொன்று குவிக்க தயங்குவதில்லை.

இவர்களின் ரத்த பசிக்கு முக்கிய காரணம் தங்கள் ஆயுதங்களை சோதனை செய்யும் ஆய்வுக்கூடங்களாக எதிரி நாடுகளின் மக்களை நினைப்பதே. இவர்களிடம் போய் ஈழத்தின் போர்குற்றம் பற்றி பேசினால் என்ன கிடைக்கும்…

உலக வல்லாதிக்க சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடம் இருந்து நழுவிக் கொண்டிருக்கிறது. ஐரோபியர்கள் இத்தனை காலம் போட்டுவந்த ஆமாம் சாமியை இனி யோசித்து தான் செய்வார்கள். கூடவே இருக்கின்ற கூட்டமைப்பு நாடுகளையும் ஏமாற்றி வெற்றி என்பதை யோசித்து கூட பார்க்க முடியாத இந்த போரினால் என்ன பயன்…பல லட்சம் மனித உயிர்களை அழித்தது தான் மிச்சம்.

அமெரிக்க இராணுவத்தின் “பிடி அல்லது கொல்” என்கின்ற சித்தாந்தம் அவர்களால் தீவிரவாதி என்று சொல்லப்படுகிறவர்களுக்கு மட்டுமல்ல…அந்த நாடுகளில் வாழும் அப்பாவிகளுக்கும் சேர்த்தே…

கஷ்டமும் நஷ்டமும் நமக்குத்தான்…

வல்லான் வகுத்ததே சட்டம்…இது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படும் உண்மை. பதிவர் சவுக்கு கைதும் உமாசங்கர் அவர்களின் தற்காலிக இடைநீக்கமும் உண்மைகளை எப்படியெல்லாம் அதிகாரம் படைத்தோர் அவலத்திற்கு தள்ளுகின்றனர் என்பதிற்கு எடுத்துகாட்டு.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

-ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

மேலே குறிப்பிட்டுள்ள திருக்குறள் விளக்கவுரையை எழுதியது யாரும் இல்லை நமது முதல்வர் கருணாநிதி தான்…அவர் தமிழனிடம் இருந்து எவ்வளவு தூரம் சென்றுவிட்டார் என்பது அவரது விளக்கவுரைக்கும் அவரது செயலுக்கும் உள்ள தூரத்திலேயே தெளிவாக விளங்கும்.

சவுக்கு அவர்களின் பதிவை படித்தேன்…திரைபடங்களில் காட்டப்படும் அரசியல் வன்முறைகளுக்கும் நேரில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒரு சிறு வித்தியாசம் கூட இல்லை. எப்படி அதிகாரம் படைத்தவர்கள் துணிந்து விட்டார்களோ அவர்களுக்கு சற்றும் குறையாமல் நாங்கள் இருக்கிறோம்…என்று தங்கள் துணிவை காட்டிய பதிவர் சவுக்கு அவர்களையும் உமாசங்கர் அவர்களையும் நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். இருக்கும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்புகளை கூட தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு அதிகாரம் படைத்தவர்களின் பதவி சுகம் அவர்கள் கண்ணை மறைக்கிறது.

அதிகம் பேர் படித்து விட்டால் அறியாமை விலகி விடும் என்று மக்களுக்காக வாழ்ந்த சில தலைவர்கள் அதிக பள்ளிக் கூடங்களை காட்டினார்கள்…அவை எல்லாம் வெறும் பணம் செய்யும் கூட்டத்தை தான் வெளியேற்றி இருக்கிறது…பணத்தை தாண்டி சிந்திபவர்கள் வெகு சிலரே…இவர்கள் பணம் செய்வதை பற்றி குறை கூறவில்லை.. ஆனால் சமூகத்தை பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பதைத் தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இவர்கள் அடிமைகளாய் வாழ பழகிக் கொண்டு…சமூகத்தை சீர்திருத்த நினைபவர்களையும் வன்முறையாளனாய் சித்தரிக்க தயங்குவது இல்லை.

அதிகாரம் படைத்தவனும் நம்மில் ஒருவன் தான்…என்று என்றைக்கு உணர்கிறோமோ…அன்று தான் ஒரு சிறந்த சனநாயக நாட்டில் வாழ்வதாக அர்த்தம்…இல்லாவிட்டால்…ஆட்சி அதிகாரத்தில் அன்று வெள்ளையன் இன்று நம்மவன்…கஷ்டமும் நஷ்டமும் மாற்றமில்லாமல் எப்போதும் போல் தொடரத்தான் செய்யும்.

என்ன பிரச்சனை…

காங். கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புவோர் மதுரைக்கு வரலாம்-இளங்கோவன்

இவர் சொல்லும் இந்த வார்த்தையிலேயே தன் கட்சிக்கு இருக்கும் கோஷ்டி பலத்தை மெய்பிக்கிறார்…இவர் இங்கு அழைப்பது பொதுமக்களை அல்ல…இது தான் இவர் அறியாமை…என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறிக் கொட்டுவது.

ஆளும் கூட்டணியோட ஒத்து ஊதிக்கொண்டு தமிழக காங்கிரஸ் காலம் தள்ளிக் கொண்டிருகிறது. இதில் அடிகடி இளங்கோவன் மட்டும் எங்களுக்கு பதவி தரவில்லை… நாங்கள் முப்பத்தி ஆறு பேர் இருந்து என்ன புண்ணியம்…காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம்..அது இதுவென்று காது வழியாக ரத்தம் வரும் அளவிற்கு மேடையில் பேசுகிறார், அறிக்கை விடுகிறார்.

சமீபத்தில் அவரது ஒரு வாசகம் தங்க எழுத்துகளில் பொறிக்கப்படவேண்டும்…தி.மு,க ஆட்சியின் சாதனைகள் வரும் தேர்தலில் தெரியும் என்றிருக்கிறார். ஆளும் கட்சியுடன் இருந்து கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் பேசும் பேச்சுக்கள் பதவி ஒன்றை மட்டுமே குறிகோளாக செயல்படுவது போல் உள்ளது. நீர்த்து போன காங்கிரஸ் மற்றும் திராவிட கொள்கைகள் இனி எந்த வகையிலும் தமிழனை உயர்த்தாது. அது திண்ணம்.

அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமிக்கு அடுத்த வாரிசு இளங்கோவன் என்பது போல் உள்ளது அவரது பேச்சுக்களும் செயல்பாடுகளும் ஒரு நல்ல பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த இவர் திடமான சிந்தனை…திடமான பேச்சு என்றில்லாதிருப்பது என்னவென்று சொல்வது…

ப.சிதம்பரம் தோற்றதாக அறிவித்துவிட்டு சில மணி நேரங்களில் சில ஓட்டுக்களில் வெற்றி பெற்றதாக அறிவித்ததில் இருந்தே காங்கிரஸ் எந்த அளவிற்கு துணியும் சனநாயக கடமையை நிறைவேற்றுவதில் என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் காமராஜர் ஆட்சி என்று காதில் பூ சுற்றுவதை இளங்கோவன் நிறுத்திக் கொள்வது நல்லது.

வெளிச்சம் குன்றிய மனங்கள்…

July 26, 2010 by · 3 Comments
Filed under: கவிதை 


நெடு நாளைய
கனவு ஒன்று
காகித கப்பலில்
பயணம் செய்ய
என்
மனதை ஏற்றினேன்
ஒரு
மழைப் பொழுதில்…
நீர்த் துளி
பல பட்டு
மூழ்கும்
வேளையில்
என்
மனதை
எடுத்துவிட்டேன்..
என்
கப்பல்
மூழ்கியது…
என்
கண் எதிரே

வெளிச்சம் குன்றிய
இரவுகள்
வஞ்சகரின்
மனங்களை போல்
இருள் பரப்பியது
என்
காகித கப்பல்
மட்டும்
எப்படியோ
கரை சேர்ந்தது…
கலங்கரை விளக்கின்றி
வெறும் காகிதமாய்….

இனி
தடுக்க
வழியில்லை…
ஒரு
மரக்கப்பல்
செய்திடுவேன்…
என்
பயணத்தில்
மழை வந்தால்…
என்
மனதை
நனைத்திடுவேன்…
நெஞ்சத்தில்
துணிவு உண்டு
யார் தடுப்பார்
என் பயணத்தை…

எனக்கு வந்த மிரட்டல்கள்…

நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமாக வந்த பல நண்பர்களின் கருத்துகள்…கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளது…முதலமைச்சர்,எதிர் கட்சி தலைவர்…யாராக இருந்தாலும் மக்கள் மறுத்தால் நாளை நடுத்தெருவில் தான் அவர்கள் அதிகாரமும், மரியாதையும்… நான் மிக கவனமுடன் எழுதிய பதிவு அது தனி நபர் தாக்குதல் இன்றி அவர்கள் செய்யும் செயல்களை மட்டும் தான் விமர்சித்திருந்தேன்…

தாக்குதல் தொடுக்கப்பட்ட பதிவுகள்….

ஜெ – தேர்தல் – முதல்வர்
மாண்புமிகு முதல்வர் அவர்களே எப்போது திருந்துவீர்
இட ஒதுக்கீடு…ஓட்டு போடுங்க சாமி

கணினி பயன்பாடு தெரிந்தவர்…பின்னூட்டமிடுகிறார்..என்றால்…படித்தும் இவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்?

என் எழுத்துகள் யார் மிரட்டினாலும்…தலை வணங்கி போகாது என்பதை இந்த பதிவின் மூலம் என் எழுத்துகளை எதிரியாக நினைக்கும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்…

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

-தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.

( பி.கு – வந்த பின்னூட்டங்களின் தரம் கருதி மட்டறுத்துவிட்டேன்.  )

மதராசபட்டினம் – ராசராசசோழன் பார்வையில்…

ஹாலிவுட் படங்களின் பிரம்மாண்டம்… பார்வையாளனை ஆக்கிரமிக்கும் கதைக்களம்…இயக்குனர் விஜய்யை கண்டிப்பாக பாராட்டவேண்டும். ஒரு சில தமிழ் இயக்குனர்கள் தான் இன்றைய தமிழ் திரைப்படங்களை தூக்கி நிறுத்துகின்றனர் அவர்களின் வரிசையில் நாம் விஜய்யையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆர்யாவின் நடிப்பு மிளிர்கிறது..ஆனால் இந்த படத்தில் காதநாயகிக்கு தான் அதிக வேலை…அதை கன கச்சிதமாக செய்துள்ளார் ஏமி ஜாக்சன். பல இடங்கள் டைட்டானிக் படத்தை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை…வரை முறை இல்லாமல் எடுக்கப்படும் மற்ற தமிழ் படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் இதை குறையாக சொல்வதில் அர்த்தமில்லை.

சென்னையை பற்றிய ஏக்கம் நிச்சயமாய் வரும் சென்னைவாசிகளுக்கு மற்றும் சென்னையை தெரிந்தவர்களுக்கு. எப்படி இருந்த இடத்தை எப்படி கொடுமையாக மாற்றியுள்ளனர்…ஒரு அழகான நதியை… பெயர் சொன்னாலே மூக்கை மூடும் நிலைமைக்கு தள்ளியுள்ளனர் அதிகாரத்தில் இருந்தவர்களும் அறியாமை சனங்களும்…

தனியாக நகைச்சுவையை இணைக்காத இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்…கதையோடு பொருந்தி வரும் வாத்தியார் கதாபாத்திரம் ஆங்கிலம் கற்று தரும் இடங்கள் நாம் மனதார சிரிக்கலாம். புகைப்படத்திற்கு ஆசைப்பட்டு ஹனீஃபா வந்து போகும் ஆரம்பக் காட்சிகள் நல்ல நகைசுவை.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரைபடத்தில் தாலியை ஒரு முக்கிய பொருளாக காட்டியுள்ளனர் அதனால் எந்த சலிப்பும் வரவில்லை. இடைவேளையை அச்சு அசல் டைட்டானிக்கில் வருவதை போல் காட்டி இருப்பதை தவிர்த்திருக்கலாம்.

நாசர் குஸ்தி வாத்தியராக மிக நேர்த்தியாக நடித்துள்ளார்…சில இடங்களில் அவருக்கும் வெள்ளையர்களால் தீவிரவாதிகளாய் சித்தரிக்கப்படுபவர்களுக்கும் உள்ள தொடர்பு குழப்புகிறது…

வில்லன் நடிகர் நமக்கு கோபம் வரும் அளவிற்கு நடித்துள்ளார்…அவருக்கு பாராட்டுகள்…

வாழ்வா சாவா என்கின்ற கதாநாயகி , நாயகனின் போராட்டத்தை இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் நடைபெறுவதாக காட்டவேண்டும் என்கின்ற இயக்குனரின் எண்ணத்திற்கே…இந்தக் குறள் தான் ஞாபகம் வருகிறது

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

-செய்ய வேண்டியதை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை, அதை கையில் எடுத்த ஒருவனின் மன உறுதியை அடிப்படையாகக் கொண்டது. மற்றவை எல்லாம் துணைப் பொருட்கள்தான்.

படத்தின் இறுதி காட்சிகளில் பார்வையாளனை காட்சிகளின் பிரமாண்டத்தில் கட்டிப் போடுகிறார் இயக்குனர்…சுதந்திர தினத்தை கண்டதை போல் ஒரு உணர்வு…நம்மை அறியாமல் நம் மனதிற்குள் நுழைகிறது…

இந்த படத்தில் உள்ள குறைகளை சொல்வது சுலபம்…விட்டு விடுவோம்…அவை இந்த படம் மட்டும் இல்லை எல்லா தமிழ் படங்களிலும் உள்ள குறைகள் தான்.

இட ஒதுக்கீடு…ஓட்டு போடுங்க சாமி…

உயர் ஜாதி ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு-மத்திய அரசு திட்டம்

இட ஒதுக்கீடு என்பதே உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை குறைக்கத்தான் வந்தது… மத்திய அரசின் இந்த திட்டம் மேலோட்டமாக நல்ல திட்டம் போல தெரிந்தாலும்( ஏழைகள் என்று சொல்லிவிட்டனரே ) இதனால் ஏற்படப் போகும் விளைவுகள்…பயனாளர்கள்…ஒரு பெரிய குழப்பம் தான். ஆனால் இனி வேறு வழியில்லை எவ்வளவு நாள் தான் சிறுபான்மையினர்…ஒடுக்கப்பட்டவர்களின்… பாதுகாலவர்கள் போல் வேடம் போட முடியும். அதிகாரம் கையில் இருப்பதால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது ஒன்றும் சிரமம் இல்லை. கருணாநிதி போன்றோர் சத்தம் எழுப்பினால் இருக்கவே இருக்கின்றது மத்திய அமைச்சர் பதவி…அவர் குடும்பத்தில் நேற்று பிறந்த குழந்தைக்கு இன்று முன்பதிவு செய்து விடலாம் சோனியா காந்தியிடம்.

மாயாவதி சத்தம் போட்டால் அவர் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தினால் அவர் இருக்கும் இடம் தெரியாது…ராகுல் காந்தியை அழைத்து விருந்து கூட கொடுப்பார் விசாரணையின் காலத்தை கடத்த.

லாலு , முலாயம் சிங்….ஒடுக்கப்பட்டவர்களின் நலன் காக்கும்(?) தலைவர்கள்… பட்டியல் நீளம் தான்…இவர்களுக்கும் காங்கிரஸ்,பிஜேபி தலைவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்… ஓடுக்கப்பட்டவர்கள் இவர்களை நம்புவது மட்டும் தான்…மற்றபடி வேறொன்றும் இல்லை…அச்சு அசல் அவர்கள் செய்யும் அத்தனை அயோக்கிய தனங்களையும் இவர்களும் எந்த வித வித்தியாசமும் இன்றி செய்கிறார்கள். சொல்ல மறந்து விட்டேன் இந்த நீண்ட பட்டியலில் உள்ள முக்கால்வாசி தலைவர்கள் மீது பல தரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. சொல்லத் தேவை இல்லை எப்படி இந்த திட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றும் என்று.

ஆடும் வரை ஆடுங்கள்…

உமாசங்கர் சஸ்பெண்ட் ஆக போலி சாதி சான்றிதழ் காரணம்…

இது எப்படி இருக்கிறது என்றால்… தயாநிதி மாறனை வைத்து விளையாடியது தான் ஞாபகம் வருகிறது…ஆனால் உமாசங்கர் அவர்கள் குடும்ப உறுப்பினர் இல்லையே…

ஆடும் வரை ஆடுங்கள் இன்று உங்கள் காட்டில் மழை…தூக்கி ஏறியப்படும் போது கண்டிப்பாய் வலிக்கும்…நல்லதும் பிடிக்காது நல்லது செய்பவர்களையும் பிடிக்காது..பேசுபவர்களையும் பிடிக்காது இவர்களை எதிர்த்து எழுதுபவர்களையும் பிடிக்காது…

நண்பர் K.R.P செந்தில் சொன்னது போல் நாம் ஓட்டுக்காக பணத்தை வாங்க ஆரம்பித்த பிறகு இதற்கு எல்லாம் எதற்க்கு கவலை பட வேண்டும்…

வாழ்க கலைஞர்..வளர்க அவரது குடும்ப உறவுகள்…

நமக்கு அடுத்த பிரச்சனை தயாராக உள்ளது… அதுதாங்க… பணம் பண்ணுவது….எந்த வழியில வரும்னு சிந்திப்போம். மத்த விடயம் எல்லாம் எதுக்கு…. மக்கள் ஊமையாக இருக்கும் வரை அவர்கள் பாடு கொண்டாட்டம் தான்.

ஜெ – தேர்தல் – முதல்வர்…

சில நாட்களாய் வருகின்ற செய்திகளை(அறிக்கைகளை) பார்க்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது. நான், நிறைய பள்ளி மாணவர்களை பார்த்திருக்கிறேன் வருடம் முழுவதும் ஆட்டம் பாட்டம் என்று இருந்து விட்டு தேர்வு நேரத்தில் விழுந்து விழுந்து படிப்பார்கள். தேர்வு அறையில் அவர்கள் படும் பாடு நல்ல வேடிக்கை தான். அந்த நிலையை ஒத்து இருக்கிறது ஜெ-வின் சமீபத்திய அறிக்கைகளும் போரட்டங்களும்.


அவரது அறிக்கையில் உள்ள சில பகுதிகள்:

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத் தள்ளிய இலங்கை போர் ஓர் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.

வீடுகளை இழந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள், இலங்கை ராணுவ முகாம்களில் முள் கம்பிகளால் ஆன வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்குள்ள இளைஞர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேக முத்திரையுடன் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இன்று கூட மீதமுள்ள மற்றவர்களின் கதி என்ன வாயிற்று என்பது நிச்சயமற்ற நிலையில் தான் இருக்கிறது.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளுக்கும், அவமானங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க தந்தையர்களும், கணவர்களும், சகோதரர்களும் இல்லாத சூழ்நிலையில், இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில், வெட்ட வெளியில், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைமைக்கும், குளிக்க வேண்டிய நிலைமைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தப் பெண்களில் பலர் உணவிற்காக ராணுவ வீரர்களின் சிற்றின்பத்திற்கு இறையாகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.


இந்த விடயங்கள் எதுவுமே இவருக்கு இத்தனை நாட்கள் தெரியாத இல்லை சமயம் வரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காத்திருந்தாரா… இன்னும் சிலநாட்களில் நம் தமிழக அரசியல்வாதிகளுக்கு தமிழ் தேசிய சுரம் பிடித்துவிடும்… தேர்தல் முடியும் வரை அவர்கள் நடத்தபோகும் தமிழ் தேசிய நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல… இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் கிடையாது.

ஜெ. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சருக்கு பிறகு மக்கள் கவனிக்கும் முதல் தலைவர் ஆனால் அவரது செயல் பாடுகள்,அறிக்கைகள்,போரட்டங்கள் எல்லாம் சட்டசபை தேர்தலையும், முதலமைச்சர் நாற்காலியை மனதில் கொண்டே முடிவு செய்யப்படுகின்றன. நான் மீண்டும் மீண்டும் தமிழீழத்தை பற்றி எழுதுவதாக யாரும் எண்ணாதீர்கள் நாம் செய்த மிகப் பெரிய தவறு ஈழத்தை காப்பாற்றாமல் விட்டது ஈழ மக்களை குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் கதறவிட்டது. இன்று அந்த மிக மோசமான நிகழ்வை ஊருகாய் போன்று இவர் பயன்படுத்த நினைப்பது மிக மிக வேதனையான விடயம்.

இந்நேரம், இந்த அறிக்கைக்கு நிச்சயம் பதில் அறிக்கை தயாராய் இருக்கும் அறிவாலயத்தில், வேறு என்ன செய்ய முடியும் அவர்களால் குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு அஞ்சி சண்டை சச்சரவுகளில் அமைதியனவர்களை பார்திருக்கிறோம் நம் தலைவரோ அவர்களின் பதவிகளுக்காக ரத்தமும் சதையுமாய் வீழ்ந்த ஈழ மக்களின் சண்டையை வேடிக்கை பார்த்தவர்.

யார் வேண்டுமானாலும் ஆட்சியை பிடியுங்கள்…நடத்துங்கள்…தயவு செய்து தமிழர்களை பற்றியோ…தமிழ் மொழியை பற்றியோ… தாங்கள் தான் அதை காப்பற்ற வந்த கடவுளாக அப்பாவி தமிழர்களை ஏமாற்றாதீர்கள்…திராவிடத்தில் தொலைந்த தமிழினத்தை கொஞ்சமேனும் வளரவிடுங்கள்.

தமிழனை தூக்கிய சிங்களவன்…

என்ன அதிசயம் என்கிறீர்களா…நடந்தது உண்மையாக இன்றைய மட்டைப்பந்து விளையாட்டில்…என்ன தான் தமிழனை அழித்தாலும் தடுத்தாலும்  இன்னொரு முரளிதரன் இலங்கைக்கு கிடைப்பது அரிது…

எந்த வகையில் தடுத்தாலும் திறமை இருந்தால் வெளிச்சதிற்கு வரலாம் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு…

ஒரு தமிழன் இல்லை தமிழ் சமுதாயத்தையே… இந்த உலகம் தூக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை…

வாழ்த்துக்கள் முரளிதரன்….

உன் அருகாமை இன்றி…

July 21, 2010 by · 4 Comments
Filed under: கவிதை, காதல் 

திறக்காத கதவு

வழியே

வருகின்ற காற்றைப்

போல

உன்

இடைப்  பிடித்து

தழுவிய

தருணங்கள்

நினைவுகளின்

ஊடாக

வழியேடுத்து

வந்து

வருத்துகிறது…

நீ

கட்டிய

புடவையும்

காய்ந்து

விழுந்த

காதோர

ரோசாப் பூவும்

உன்

அருகாமை

இன்றி

வதங்கிக்  கிடக்கின்றன…

மஞ்சள் மலரே!

நீ

நடந்து வர…

உன்

பாதையெங்கும்

என்

கவிதைகள்

கால் கடுக்க

காத்திருக்கும்….

உன்

கோபம்

அவை அறியா…

தமிழின்

வல்லினத்தை

பயன்படுத்தி

அவைகளை வையாதே…

உன்

கோப வசவுக்காய்

முற்றத்தில்

நான் இருப்பேன்…

என் காதலியே…

வெட்கமாய் இருக்கிறது…ஏன் இப்படி…

வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தாள் அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு.

ஒரு துரதிர்ஷ்டவசமான அழைப்பு…

அருமைத் தமிழர்களே… இன்னும் எத்தனை நாட்கள் நாம் இப்படி இருக்கப்போகிறோம்… தமிழர்கள் என்றால் தேசியம் பேசுவார்கள்… தேசம் கேட்பவர்கள்…பயங்கரவாதிகள்…என்று ஒரு மேகவலயம் நம்மை சுற்றி இருக்கும் இந்த காலகட்டத்தில் பதவியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு தமிழினத்தின் ஒரு கூட்டத்தை நோக்கி இப்படி ஒரு அழைப்பு விடப்படுகிறது இது எந்த விதத்தில் நியாயம் என்பது அவருக்கு தான் வெளிச்சம்…

அன்புமணிக்கு முதல் அமைச்சர் பதவி கொடுத்துவிட்டால் என்ன மாற்றம் நிகழப் போகிறது…

வெளிமாநிலங்களுக்கு மின்சாரத்தை சத்தமில்லாமல் கொடுத்து விட்டு…போராடித்  தண்ணீர் வாங்குவதை…மாற்றப் போகிறாரா…

அது நிச்சயம் நடக்கப்  போவதில்லை….

ஏற்கனவே ஒற்றுமை இல்லாமல் சிதறிப் போய்…இந்திய காங்கிரசும்…இலங்கை ராஜபக்ஷேவும் விளையாடும் மைதானம் ஆகிவிட்டது தமிழ் சமுதாயம்…இதில் இன்னொரு விரிசலை ஏன் இவர் வெற்று பதவி சுகத்திற்காக செய்ய நினைக்கிறார்…

ஆக மொத்தம் தமிழனை ஒன்று சேர்க்கும் எந்த ஒரு தலைவனும் இன்று இல்லை…வெறும் அறிக்கை தலைவர்களையும்,அரசியல் வியாபாரிகளையும் வைத்துக்கொண்டு நாம் கூச்சல் போட்டு கொண்டிருக்கிறோம்…

அரசியல் கட்சிகள் போடும் எலும்புத்துண்டுகளுக்கு அந்தந்த கட்சியின் தொண்டர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்…அவர்களும் சாமான்ய மக்கள் தான் என்பதை அவர்கள் மறந்து வெகு காலம் ஆகிவிட்டது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

-செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்

மிகவும் கவனமாக தமிழர்கள் இருக்கவேண்டிய கால கட்டத்தில்…தமிழின தலைவர்கள்(? அப்படி தான் சொல்கிறார்கள் ) அதுபற்றி யோசிப்பார்களா…

களவாணி – ராசராசசோழன் பார்வையில்…

இந்த படத்தை பற்றி ஒரு வரியில் சொல்வதென்றால் “புதிய மொந்தையில் பழைய கள்”

தஞ்சை மாவட்டத்தில் கதை களம் அமைத்த இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும்…அசல் தமிழ் படத்திற்கு இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது…

இயல்பான நடிப்பால் விமல் அசத்துகிறார்…அவர் செய்யும் ஒவ்வொரு களவாணித்தனங்களும் ரசிக்கும்படி இருக்கிறது…ஓவியா பற்றி சொல்லவேண்டுமானால் கொஞ்சம் ஏமாற்றமே.. இன்னும் சற்று நன்றாக நடித்து இருக்கலாம் ஆனால் அழகாக இருக்கிறார்… காட்சிக்கு அழகு சேர்க்கிறார்.


விமல் “கஞ்சா கருப்பை” வைத்து செய்யும் குறும்புத்தனங்கள் சிரித்து சிரித்து வயிறு வலித்துவிடும் வகை…

வில்லன் நடிகர் நல்ல தேர்வு ஆனால் இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் கொடுத்த அழுத்தம் போக போக குறைந்து வீணாக்கப்பட்டு இருக்கிறது…காதாநாயகனுக்கும் அதே நிலை தான்…

ஒளிப்பதிவு அருமை…இசை…பாடல்…இருக்கிறதா என்ன இந்த படத்தில்…அங்கங்கு வரும் கிராமிய பாடலை தவிர…அந்த பாடலை பாடியவரின் குரல் மனதை தொடுகிறது…

தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தூர தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு கண்டிப்பாய் இந்தப் படம் ஊருக்கு சென்றுவந்த திருப்தியை கொடுக்கும்…

எனது விடுமுறை நாளை நல்ல படம் பார்த்து கழித்த திருப்தியை இந்த படம் எனக்கு தந்தது…

இனியதமிழில்…திட்ட வார்த்தை இல்லை…

ambulance

108 ஆம்புலன்சுக்கு பொய் தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை! – இது செய்தி

இதை போன்று ஒரு செய்தி வருகிறது என்றால் அந்த வக்கிரம் நிறைந்த மனவளர்ச்சி குன்றிய மனிதர்களை பற்றி என்ன சொல்ல…உயிர் காக்கும் கடமையை செய்கிற ஒரு உன்னதமான சேவையை இப்படி பொய் தகவல் கொடுக்க எப்படி தான் மனம் வருகிறதோ…நான் நேசிக்கும் தமிழில் திட்ட மனம் வரவில்லை…ஆனால் என் கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

உபயோகம் இல்லாவிட்டாலும் உபத்திரம் கொடுக்ககூடாது என்பது சிறு வயதில் இருந்து பெற்றோர்களாலும் மற்றும் பெரியவர்களாலும் நமக்கு சொல்லப்பட்ட மந்திரம்…அந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு இது சொல்லித் தரப்படவில்லையா…

நமது அரசாங்கங்கள் நல்லது செய்வதே பெரிய விடயம் அதையும் இப்படி சோதிக்க எண்ணுபவர்களுக்கு என்ன வகையான மனதை இயற்கை படைத்திருக்கும்.

தவறு என்பது தெரிந்து செய்வது…இந்த அரைகுறை மனிதர்களை காவல்துறை அடையாளம் காணவேண்டும்…குடிநீருக்காக…சாலை மறியல் செய்பவர்களை காட்டுமிரண்டிகளாய் அடிப்பதை விட இவர்களை போன்ற மனிதர்களை அடையாளம் காட்டுவதே சமுகத்திற்கு செய்யும் நன்மையாகும்.

( பின்குறிப்பு: இனியதமிழ் திரட்டிக்கும் இந்த தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது )

கனவு என்பது…

July 17, 2010 by · 4 Comments
Filed under: கவிதை 

எங்கும்

பனிப்பொலிவு…

மெல்லிய

காற்றின் ஓசை…

உடல் நடுக்கும்

அதிகாலைக் குளிர்…

சயனத்திருக்கும்

மலராத  மொட்டுகள்…

உதறித் தள்ளுங்கள்

உங்கள்

கவலைகளை

அவை காற்றுவெளியில்

அலையட்டும்

அனாதைகளாய்…

நினைவு பறித்து

சில நிமிடம்

உடலை

சிந்திக்க விடுங்கள்…

நீர் பிடித்த

புது

விதையாய்

உங்கள் உள்ளங்கள்

துளிர்விடட்டும்

நிரம்பட்டும்

இனிய தருணங்களாய்…

கனவு என்பது

கண்களுக்குள் இல்லை…

நீண்ட இரவுக்குள்

ஒளிந்திருக்கும்

இனம் புரியா

கவிதை அது…

பல சமயம்

பொழுது புலர்ந்தும்

நினைவு துகள்களில்

இடப்பெயர்ச்சி

செய்யும்

இனிய தருணங்களாய்…

தரம் கெட்ட மனிதர்கள் 5% சதவிகிதம்…

நித்யானந்தாவுக்கு தங்கச் செருப்பு காணிக்கை! பக்தைகள் பாதயாத்திரை – இது செய்தி…

என்ன சொல்றதுன்னு தெரியல மொத்ததுல புத்திக்கெட்ட சனங்கள், இவர்கள் எல்லாம் படித்து என்ன பிரேசனம்…

ஊழலில் சிறை சென்ற அரசியல்வாதிகள்…

பஞ்சமா பாதகமான படுகொலையை அரங்கேற்றிய சமய தலைவர்கள்…

விளையாட்டை தேசியத்தின் பெயரால் அவமானப்  படுத்தியவர்கள்…

தன் இனம் அழித்தவனுடன் கொஞ்சிக்  குலாவியவர்கள்…

இன்னும் எத்தனை..எத்தனை தரம் கெட்ட மனித புழுக்கள்…

மொத்த மக்கள்தொகை சதவிகிதத்தில் 5 சதவிகிதம் கூட இல்லாத இவர்கள் தான் இன்று நம் பொழுதுகளை தீர்மானிக்கிறார்கள்…

நாம் பேசும் அதிக விடயங்களில் இவர்கள் தான் ஆக்கிரமிக்கிறார்கள்….நமக்கு தெரியாமலே…

சற்று யோசித்து பாருங்கள்… இந்த மனப்பகுவதிலேயே நம் மனது…வளர்ந்தது…வளரப்போகிறது…இது எங்கு போய் சேர்க்கும் நம் புதிய தலைமுறையை…

நம் சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவுகளும் மேலை நாடுகளை பின்பற்றுவதிலேயே குறியாய் இருக்கிறது…வெளி உலகிற்கு எப்படி இருந்தாலும் அந்தந்த  நாடுகளில் உயிருக்கு உத்தரவாதம் மிக மிக குறைவு…காரணம் அனைவரின் கையிலும் துப்பாக்கி…

எங்கோ கேள்விபட்ட ஒரு விடயம்… ஒரு நாட்டின் தொலைகாட்சியில், அன்றைய செய்திகளில் முதலில் சொல்லப்படுவது அந்த நாட்டிற்கு பயன் தரும் நல்ல விடயங்களே, செய்தியின் இறுதியில் தான் விபத்து,கொலை,களவு போன்ற விடயங்கள்….அவர்களின் அணுகுமுறையை பாருங்கள்…

பார்வையாளர்களின் வரவை அதிகரிக்க அல்லது தக்க வைக்க நித்யானந்தாவின் செய்தியை பரபரப்பாக ஒளிபரப்பியதை என்னவென்று சொல்வது…இவர்களிடத்தில் எதை எதிர்பார்ப்பது…

“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்”

-தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை

உண்மை வள்ளுவரே…உண்மை…உண்மை…

இந்திய நாடு…ஜனநாயக நாடு…நாங்கள் வைத்தது தான் சட்டம்…

July 16, 2010 by · 4 Comments
Filed under: அரசியல் 

இந்திய நாடு என்று பெயர் ஆனால் இந்தி பேசுபவர்களுக்கு தான் இங்கு மதிப்பு. இது வெளிநாட்டிலும் பரவியுள்ளது. இந்தியன் என்று சொன்னாலே தலைப்பாகை கட்டினவன் என்கின்ற போக்கு தான் வெளிநாட்டினர் மத்தியில் இருக்கிறது. நேற்று வெளியிடப்பட்ட இந்திய ரூபாயின் குறியீடில் சமஸ்கிருத மொழியின் தாக்கம் நிரம்பி வழிகிறது.

நான் வேற்றுமையை விதைப்பதாக யாரும் எண்ண வேண்டாம். எந்த வகையிலும் தென் இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டை மதிக்கும் வகையில் காரியங்கள் நடை பெறவில்லை என்பதே என் ஆதங்கம். தனித்  தனியே இருந்திருந்தால் ஒரு நாட்டிற்கு இருக்கும் மதிப்பே வேறு, அவ்வாறு இல்லாமல் ஒரே நாடு என்ற பக்குவத்தில் இருக்கும் மாநிலத்திற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையை  என்னவென்று சொல்வது.

மத்தியில் அவர்கள் துணை இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்கின்ற ஒரே காரணத்திற்காக, இன்று தமிழகத்தை தன் குடும்பமாக பார்க்கும் கருணாநிதி, அவர்கள் போடும் தாளத்திற்கு தமிழகத்தை ஆடவைக்கிறார். “பல தேசிய இனங்களின் கொட்டடி” என்று இந்தியாவை சொல்வார்கள்…நாம் அப்படி தான் நடத்த படுகிறோம்… பணம் படைத்த நேரு தான் நம் முதல் பிரதமர்… அன்று உயரேப்  போன அதிகாரம் இன்று வரை கீழே வரவில்லை.

செய்வதை எல்லாம் செய்து விட்டு வேற்றுமையில் ஒற்றுமை என்று கபட நாடகம் அருமையாக நடக்கிறது.  அவர்கள் சொல்வது இது போல் தான் இருக்கிறது “இந்திய நாடு…ஜனநாயக நாடு…நாங்கள் வைத்தது தான் சட்டம்…

பல சிறுபான்மை இனத்தை, பணம் மற்றும் அதிகாரம் படைத்த ஒரு பெரும்பான்மை இனம் ஆண்டாண்டு காலமாய் ஆட்டி வைத்துக் கொண்டிருகிறது.

சிங்களவனோடு செய்யப்போகும் வியாபாரத்திற்காக தமிழனின் உயிரை அவர்கள் நினைப்பது…சொல்வதற்கே வாய் கூசுகிறது…

நான் அறியாத வயதில் இருந்து கேட்டுக் கொண்டிருகிறேன்…இலங்கை பிரசனையை…இவர்களால் மாநிலத்திற்குள்ளும் ஒற்றுமையை கொண்டு வர முடியவில்லை…அண்டை நாடுகளுடனும் ஒரு நல்லுறவை ஏற்படுத்த முடியவில்லை ஆனால் ஆட்சி மட்டும் அவர்கள் கையில் இருந்து கொண்டிருக்க வேண்டும்…

மக்கள் போராட்டத்தின்…அடிநாதமாய்…இவர்கள் எடுக்கும் முடிவுகள் அமைந்து  கொண்டிருகின்றன…தூக்கி ஏறியப்படும் வரை யாரும் நிகழ்வுகளை உணர்வதில்லை…

( பின்குறிப்பு: இந்த குறியீட்டை வடிவமைத்தவர் ஒரு தமிழர்…வெட்கக்கேடு …)

இலக்கில்லா பயணம்…

July 15, 2010 by · Leave a Comment
Filed under: கவிதை 

நிழலுக்கு ஒதுங்கி

நின்றேன்

அது

வெயில் காலமில்லை…

குடையுடன்

நடந்து வந்தேன்

அது

மாரிக் காலமில்லை…

கால் இடறி

தரையில்

விழுந்தேன்…

சற்றே

நிழல் கலைந்தேன்…

நிமிடங்களை பொசுக்கி

என்

கவலைகள் பசியாறின…

ஆனால்

வயிற்றுப்  பசி

மட்டும்

மணி மணியாய்

கழுத்தை நெறிக்க…

எதுவும்

நடக்கவில்லை…

நான் மட்டும்

நடக்கின்றேன்…

வாசல்கள்  கடக்கின்றேன்…

இலக்கில்லா பயணம்…

ஒவ்வொரு நிறுத்தமும்

உறுத்தியது… மனதை

இது ஒரு

இலக்கில்லா பயணம்…

Next Page »