அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

02 Jul

அடுத்த பயணத்தில்…

Posted in கவிதை, காதல் on 02.07.10


நீண்ட தூக்கம்
விழித்து எழுந்தபோது
நீ என்னருகில்…
நிஜம் தானா
என்று
தொட்டுப் பார்த்தேன்…
உடனே
கலைந்து விட்டாய்…
என் கனவையும் சேர்த்து…


நேற்று தரை இறங்கிய
விமானத்தில்
இன்னும்
நான்
பயணிக்கிறேன்…
நீ
இல்லா
வெறுமையை
விலக்கிக் கொள்ள…


ஏ கண்ணாடி மலரே
நேற்று
நீ
பேசிய வார்த்தையெல்லாம்
எழுத்துக்களாய்
மாறி
நான்
உன்னை சுற்றுவது போல்
என்னை
சுற்றிக் கொண்டிருக்கின்றன…


அடுத்த பயணத்தில்
நிச்சயம்
என் காதலை
சொல்வேன்…
நீ அருகில் இல்லாவிட்டால்…



tags:

View Comments

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker