இதை போன்று ஒரு செய்தி வருகிறது என்றால் அந்த வக்கிரம் நிறைந்த மனவளர்ச்சி குன்றிய மனிதர்களை பற்றி என்ன சொல்ல…உயிர் காக்கும் கடமையை செய்கிற ஒரு உன்னதமான சேவையை இப்படி பொய் தகவல் கொடுக்க எப்படி தான் மனம் வருகிறதோ…நான் நேசிக்கும் தமிழில் திட்ட மனம் வரவில்லை…ஆனால் என் கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
உபயோகம் இல்லாவிட்டாலும் உபத்திரம் கொடுக்ககூடாது என்பது சிறு வயதில் இருந்து பெற்றோர்களாலும் மற்றும் பெரியவர்களாலும் நமக்கு சொல்லப்பட்ட மந்திரம்…அந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு இது சொல்லித் தரப்படவில்லையா…
நமது அரசாங்கங்கள் நல்லது செய்வதே பெரிய விடயம் அதையும் இப்படி சோதிக்க எண்ணுபவர்களுக்கு என்ன வகையான மனதை இயற்கை படைத்திருக்கும்.
தவறு என்பது தெரிந்து செய்வது…இந்த அரைகுறை மனிதர்களை காவல்துறை அடையாளம் காணவேண்டும்…குடிநீருக்காக…சாலை மறியல் செய்பவர்களை காட்டுமிரண்டிகளாய் அடிப்பதை விட இவர்களை போன்ற மனிதர்களை அடையாளம் காட்டுவதே சமுகத்திற்கு செய்யும் நன்மையாகும்.
( பின்குறிப்பு: இனியதமிழ் திரட்டிக்கும் இந்த தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது )


