அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

21 Jul

உன் அருகாமை இன்றி…

Posted in கவிதை, காதல் on 21.07.10

திறக்காத கதவு

வழியே

வருகின்ற காற்றைப்

போல

உன்

இடைப்  பிடித்து

தழுவிய

தருணங்கள்

நினைவுகளின்

ஊடாக

வழியேடுத்து

வந்து

வருத்துகிறது…

நீ

கட்டிய

புடவையும்

காய்ந்து

விழுந்த

காதோர

ரோசாப் பூவும்

உன்

அருகாமை

இன்றி

வதங்கிக்  கிடக்கின்றன…

மஞ்சள் மலரே!

நீ

நடந்து வர…

உன்

பாதையெங்கும்

என்

கவிதைகள்

கால் கடுக்க

காத்திருக்கும்….

உன்

கோபம்

அவை அறியா…

தமிழின்

வல்லினத்தை

பயன்படுத்தி

அவைகளை வையாதே…

உன்

கோப வசவுக்காய்

முற்றத்தில்

நான் இருப்பேன்…

என் காதலியே…


tags: ,

View Comments

  • http://mathinilaa.blogspot.com nilaamathy

    உன்கோபம்அவை அறியா…

    தமிழின்வல்லினத்தைபயன்படுத்தி

    அவைகளை வையாதே…….

    ……. சுவை மிக்க தமிழ் …….அழகான் உணர்வுகள்.காலமெலாம் உங்கள் காதல் வாழ்க.

  • http://mathinilaa.blogspot.com nilaamathy

    உன்கோபம்அவை அறியா…

    தமிழின்வல்லினத்தைபயன்படுத்தி

    அவைகளை வையாதே…….

    ……. சுவை மிக்க தமிழ் …….அழகான் உணர்வுகள்.காலமெலாம் உங்கள் காதல் வாழ்க.

  • http://saravanakumarpages.blogspot.com செ.சரவணக்குமார்

    நல்லாயிருக்கு ராசராசசோழன்..

  • http://saravanakumarpages.blogspot.com செ.சரவணக்குமார்

    நல்லாயிருக்கு ராசராசசோழன்..

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker