ஜெ – தேர்தல் – முதல்வர்…
Filed under: அனுபவம், அரசியல், ஈழம், கட்டுரை, தமிழகம், தமிழீழம், மனிதாபிமானம்
சில நாட்களாய் வருகின்ற செய்திகளை(அறிக்கைகளை) பார்க்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது. நான், நிறைய பள்ளி மாணவர்களை பார்த்திருக்கிறேன் வருடம் முழுவதும் ஆட்டம் பாட்டம் என்று இருந்து விட்டு தேர்வு நேரத்தில் விழுந்து விழுந்து படிப்பார்கள். தேர்வு அறையில் அவர்கள் படும் பாடு நல்ல வேடிக்கை தான். அந்த நிலையை ஒத்து இருக்கிறது ஜெ-வின் சமீபத்திய அறிக்கைகளும் போரட்டங்களும்.
அவரது அறிக்கையில் உள்ள சில பகுதிகள்:
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத் தள்ளிய இலங்கை போர் ஓர் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.
வீடுகளை இழந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள், இலங்கை ராணுவ முகாம்களில் முள் கம்பிகளால் ஆன வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்குள்ள இளைஞர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேக முத்திரையுடன் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இன்று கூட மீதமுள்ள மற்றவர்களின் கதி என்ன வாயிற்று என்பது நிச்சயமற்ற நிலையில் தான் இருக்கிறது.
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளுக்கும், அவமானங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க தந்தையர்களும், கணவர்களும், சகோதரர்களும் இல்லாத சூழ்நிலையில், இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில், வெட்ட வெளியில், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைமைக்கும், குளிக்க வேண்டிய நிலைமைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தப் பெண்களில் பலர் உணவிற்காக ராணுவ வீரர்களின் சிற்றின்பத்திற்கு இறையாகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த விடயங்கள் எதுவுமே இவருக்கு இத்தனை நாட்கள் தெரியாத இல்லை சமயம் வரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காத்திருந்தாரா… இன்னும் சிலநாட்களில் நம் தமிழக அரசியல்வாதிகளுக்கு தமிழ் தேசிய சுரம் பிடித்துவிடும்… தேர்தல் முடியும் வரை அவர்கள் நடத்தபோகும் தமிழ் தேசிய நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல… இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் கிடையாது.
ஜெ. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சருக்கு பிறகு மக்கள் கவனிக்கும் முதல் தலைவர் ஆனால் அவரது செயல் பாடுகள்,அறிக்கைகள்,போரட்டங்கள் எல்லாம் சட்டசபை தேர்தலையும், முதலமைச்சர் நாற்காலியை மனதில் கொண்டே முடிவு செய்யப்படுகின்றன. நான் மீண்டும் மீண்டும் தமிழீழத்தை பற்றி எழுதுவதாக யாரும் எண்ணாதீர்கள் நாம் செய்த மிகப் பெரிய தவறு ஈழத்தை காப்பாற்றாமல் விட்டது ஈழ மக்களை குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் கதறவிட்டது. இன்று அந்த மிக மோசமான நிகழ்வை ஊருகாய் போன்று இவர் பயன்படுத்த நினைப்பது மிக மிக வேதனையான விடயம்.
இந்நேரம், இந்த அறிக்கைக்கு நிச்சயம் பதில் அறிக்கை தயாராய் இருக்கும் அறிவாலயத்தில், வேறு என்ன செய்ய முடியும் அவர்களால் குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு அஞ்சி சண்டை சச்சரவுகளில் அமைதியனவர்களை பார்திருக்கிறோம் நம் தலைவரோ அவர்களின் பதவிகளுக்காக ரத்தமும் சதையுமாய் வீழ்ந்த ஈழ மக்களின் சண்டையை வேடிக்கை பார்த்தவர்.
யார் வேண்டுமானாலும் ஆட்சியை பிடியுங்கள்…நடத்துங்கள்…தயவு செய்து தமிழர்களை பற்றியோ…தமிழ் மொழியை பற்றியோ… தாங்கள் தான் அதை காப்பற்ற வந்த கடவுளாக அப்பாவி தமிழர்களை ஏமாற்றாதீர்கள்…திராவிடத்தில் தொலைந்த தமிழினத்தை கொஞ்சமேனும் வளரவிடுங்கள்.
Comments
-
http://www.krpsenthil.blogspot.com krpsenthil
-
http://www.krpsenthil.blogspot.com krpsenthil
-
ராசாராசாசோழன்
-
http://news popshankar@in.com
-
http://yahoo Er,L.C.NATHAN




