என்ன பிரச்சனை…

காங். கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புவோர் மதுரைக்கு வரலாம்-இளங்கோவன்

இவர் சொல்லும் இந்த வார்த்தையிலேயே தன் கட்சிக்கு இருக்கும் கோஷ்டி பலத்தை மெய்பிக்கிறார்…இவர் இங்கு அழைப்பது பொதுமக்களை அல்ல…இது தான் இவர் அறியாமை…என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறிக் கொட்டுவது.

ஆளும் கூட்டணியோட ஒத்து ஊதிக்கொண்டு தமிழக காங்கிரஸ் காலம் தள்ளிக் கொண்டிருகிறது. இதில் அடிகடி இளங்கோவன் மட்டும் எங்களுக்கு பதவி தரவில்லை… நாங்கள் முப்பத்தி ஆறு பேர் இருந்து என்ன புண்ணியம்…காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம்..அது இதுவென்று காது வழியாக ரத்தம் வரும் அளவிற்கு மேடையில் பேசுகிறார், அறிக்கை விடுகிறார்.

சமீபத்தில் அவரது ஒரு வாசகம் தங்க எழுத்துகளில் பொறிக்கப்படவேண்டும்…தி.மு,க ஆட்சியின் சாதனைகள் வரும் தேர்தலில் தெரியும் என்றிருக்கிறார். ஆளும் கட்சியுடன் இருந்து கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் பேசும் பேச்சுக்கள் பதவி ஒன்றை மட்டுமே குறிகோளாக செயல்படுவது போல் உள்ளது. நீர்த்து போன காங்கிரஸ் மற்றும் திராவிட கொள்கைகள் இனி எந்த வகையிலும் தமிழனை உயர்த்தாது. அது திண்ணம்.

அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமிக்கு அடுத்த வாரிசு இளங்கோவன் என்பது போல் உள்ளது அவரது பேச்சுக்களும் செயல்பாடுகளும் ஒரு நல்ல பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த இவர் திடமான சிந்தனை…திடமான பேச்சு என்றில்லாதிருப்பது என்னவென்று சொல்வது…

ப.சிதம்பரம் தோற்றதாக அறிவித்துவிட்டு சில மணி நேரங்களில் சில ஓட்டுக்களில் வெற்றி பெற்றதாக அறிவித்ததில் இருந்தே காங்கிரஸ் எந்த அளவிற்கு துணியும் சனநாயக கடமையை நிறைவேற்றுவதில் என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் காமராஜர் ஆட்சி என்று காதில் பூ சுற்றுவதை இளங்கோவன் நிறுத்திக் கொள்வது நல்லது.

Comments

  • http://www.mkrpost.blogspot.com mkrpost

    செயல் மிக்க தலைவராக காணப்பட்ட இள்ன்கோவன் சில நேரங்களில் நிதானமன்றி செயல்படுவதாக காணப்படுகிறது

  • http://www.mkrpost.blogspot.com mkrpost

    செயல் மிக்க தலைவராக காணப்பட்ட இள்ன்கோவன் சில நேரங்களில் நிதானமன்றி செயல்படுவதாக காணப்படுகிறது

  • sathir

    இளங்கோவன் ஒரு அரைவேக்காடு அரசியல்வாதி….
    சிலநேரங்களில்…சுப்பிரமணியம் சாமி என்கின்ற அரைவேகாட்டுக்கும்
    இதற்கும் கடும் போட்டி நிலவும் யார் பெரிய அரை வேக்காடு என்று..

  • sathir

    இளங்கோவன் ஒரு அரைவேக்காடு அரசியல்வாதி….
    சிலநேரங்களில்…சுப்பிரமணியம் சாமி என்கின்ற அரைவேகாட்டுக்கும்
    இதற்கும் கடும் போட்டி நிலவும் யார் பெரிய அரை வேக்காடு என்று..