அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

28 Jul

போர்க்குற்றம்… நல்ல நகைச்சுவை…

Posted in அமெரிக்கா, அரசியல், கட்டுரை, போர்க்குற்றம், மனிதாபிமானம் on 28.07.10

நடக்கும் சம்பவங்களை பார்த்தால் எந்த நாடுகளுக்கும் போர்க்குற்றத்தை பற்றி பேசாவோ விசாரிப்பதற்கு கோரிக்கை வைக்கவோ எந்த தகுதியும் இல்லை போல் தெரிகிறது…

அமெரிக்காவின், ஆப்கானிஸ்தான் மீதான போரில் மறைக்கப்பட்ட பல மனிதவுரிமை குற்றங்கள் சமீபத்தில் ஒரு இணையதளத்தில்( http://wardiary.wikileaks.org ) கசிந்த ராணுவ கோப்புகளில் பக்கம் பக்கமாக புதைந்து உள்ளது. கிட்டதட்ட 92,000 கோப்புகள் அத்தனையும் மனித உயிர்களை எதையோ போல் நினைத்து அமெரிக்க கூட்டு படைகள் நடத்திய கொடுமைகள்…

இதில் என்ன கொடுமை என்றால் அவர்களுக்கே தெரியாது எத்தனை அப்பாவி மனித உயிர்கள் பறிக்கப்பட்டது என்கின்ற விடயம். ராணுவ கோப்புகள் 2004 இருந்து 2010 வரையான காலகட்டத்தில் நடந்த பல நிகழ்வுகளை தவறுதலாக நடந்ததாக வகைப்படுத்தி உள்ளது. இதை விட மோசமான விடயம் இந்த ராணுவ ரகசியம் வெளியானதால் தங்கள் படைகளுக்கு என்ன வகையான தொல்லை ஏற்படும் என்பதே அவர்களுடைய இப்போதைய பெரிய கவலை…அமெரிக்க தலைவர்கள் கொடுக்கும் பேட்டிகளில் இருந்து தெரிய வரும் விடயமும் இது தான். ஒரு அமெரிக்கன் இறந்தால் ரத்த கண்ணீர் விடும் இவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த எதிரி உலகின் எந்த மூளையில் இருந்தாலும் கொடூரக் கரங்களால் கொன்று குவிக்க தயங்குவதில்லை.

இவர்களின் ரத்த பசிக்கு முக்கிய காரணம் தங்கள் ஆயுதங்களை சோதனை செய்யும் ஆய்வுக்கூடங்களாக எதிரி நாடுகளின் மக்களை நினைப்பதே. இவர்களிடம் போய் ஈழத்தின் போர்குற்றம் பற்றி பேசினால் என்ன கிடைக்கும்…

உலக வல்லாதிக்க சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடம் இருந்து நழுவிக் கொண்டிருக்கிறது. ஐரோபியர்கள் இத்தனை காலம் போட்டுவந்த ஆமாம் சாமியை இனி யோசித்து தான் செய்வார்கள். கூடவே இருக்கின்ற கூட்டமைப்பு நாடுகளையும் ஏமாற்றி வெற்றி என்பதை யோசித்து கூட பார்க்க முடியாத இந்த போரினால் என்ன பயன்…பல லட்சம் மனித உயிர்களை அழித்தது தான் மிச்சம்.

அமெரிக்க இராணுவத்தின் “பிடி அல்லது கொல்” என்கின்ற சித்தாந்தம் அவர்களால் தீவிரவாதி என்று சொல்லப்படுகிறவர்களுக்கு மட்டுமல்ல…அந்த நாடுகளில் வாழும் அப்பாவிகளுக்கும் சேர்த்தே…


tags: , , ,

View Comments

  • http://stopforshop.blogspot.com/ kdchozhan

    Nice to see this but no one worry about it because we cannot do anything because we are in small country when compare with them.

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker