அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

30 Jul

காதல் மட்டுமே…இளவயது இலவசம்…பகுதி-10

Posted in காதல், தொடர்கதை on 30.07.10


காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 01
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 02
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 03
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 04
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 05
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 06
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 07
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 08
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 09

விலாசம் கையில் இருந்தாலும் ஏனோ முன் இருந்த வேகம் இப்போது இல்லை…நாட்கள் நகர்ந்தன…என் கணிபொறி படிப்பு முடியும் தருவாயில் இருந்தது…அந்த நேரம் நண்பர்களில் ஒருவன் கணிபொறி வாங்கி விற்பதில் உள்ள சூட்சமங்களை கற்று கொண்டான் அதனால் நண்பர்களிடம் அவனுக்கென்று ஒரு செல்வாக்கு உருவானது.

என் நண்பனின் மனதில் எதிர்கால திட்டம் ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது…அதில் என்னையும் இழுப்பதில் அவன் வெற்றிக் கொண்டான். சரியாக கணிப்பொறி படிப்பு முடிய அந்த மையத்தில் படித்த மூன்று நண்பர்களை சேர்த்துக் கொண்டு ஒரு கணிப்பொறி வாங்கி விற்கும் நிறுவனத்தை அவன் அமைக்க ஆரம்பித்தான்…எதிர்பார்த்த அளவிற்கு பணம் திரட்ட முடியாததால் என்னையும் ஒரு பங்குதாரனாக்க அழைப்பு விடுத்தான்.

கணிப்பொறி படிப்பு முடித்து சில நிறுவனங்களில் ஏறி இறங்கி எந்த வேலையும் கிடைக்காததால் அந்த அழைப்பை தட்டி கழிக்க முடியவில்லை.

பல கதைகளை சொல்லி வீட்டில் பணத்தை பிடுங்கினேன்…ஒரு நல்ல நாளில் எங்கள் நிறுவனம் இனிதே ஆரம்பம் ஆனது. நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனம் ஆதலால் எப்போதும் நண்பர்கள் கூட்டம் நிரம்பி வழியும்…ஆரம்ப நாட்களில் அரட்டைகளாகவே கழிந்தன பொழுதுகள்…அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில விற்பனைகள் நடந்தன அதுவும் நிறுவனத்தை நடத்தும் செலவுகளுக்கே சரியாய் இருந்தது.

அந்த சமயத்தில் தான் அகவி(pager) பயன்பாட்டுக்கு வந்தது. ஆளுக்கொரு அகவியை வைத்துக் கொண்டு நங்கள் நடத்திய கூத்துகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை…வெளிப் பார்வைக்கு நாங்கள் எல்லாம் தொழில் அதிபர்கள் உள்ளுக்குள் என்ன நடந்தது என்பது என் கூட்டாளிகளுக்கும் எனக்கும் தான் தெரியும்…நாங்கள் செய்த அலும்பல்கள் என்ன சொல்ல…பெற்றோர்களின் பணத்தை கொட்டி ஒரு நிறுவனத்தை எப்படி நடத்தக் கூடாது என்பதை நான் அங்கு கற்றுக் கொண்டேன்.

தொடரும்…


tags: , ,

View Comments

  • http://konjamvettipechu.blogspot.com/ chitra solomon

    …பெற்றோர்களின் பணத்தை கொட்டி ஒரு நிறுவனத்தை எப்படி நடத்தக் கூடாது என்பதை நான் அங்கு கற்றுக் கொண்டேன்.

    …. A well learnt lesson with parents’ money. :-(

  • ராசாராசாசோழன்

    Chitra…. இப்பொழுதாவது ஒத்துக்கொள்ளவிட்டால்…எப்படிங்க…நல்ல வேலை நான் பதிவு எழுதுறது அவங்களுக்கு தெரியாது…

  • http://www.jnkavithaikal.blogspot.com/ jenosh jeyam

    அவள் தான்…ஒரு வருடம் கழிந்தும் மனதில் அழியாத அவள் உருவம்… அதே அழகு முகம்…சிரித்த முகம்…

    எப்டி ஒரு வருடம் உயிரோடு இருந்தீர்கள்

  • ராசாராசாசோழன்

    jenosh jeyam…. அந்த நாட்கள் மிக கொடுமையான நாட்கள்…அன்று மனதை கட்டுபடுத்த முடிந்ததால் தான் இன்று இந்த பதிவே எழுத முடிகிறது…

  • http://konjamvettipechu.blogspot.com/ chitra solomon

    …பெற்றோர்களின் பணத்தை கொட்டி ஒரு நிறுவனத்தை எப்படி நடத்தக் கூடாது என்பதை நான் அங்கு கற்றுக் கொண்டேன்.

    …. A well learnt lesson with parents’ money. :-(

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker