100-வது பதிவு -ராசராசசோழன்

எப்படி இது சாத்தியமானது என்று எனக்கே தெரியவில்லை. வாசகர்கள் நீங்கள் கொடுத்த உற்சாகம் தான் இந்த மைல்கல்லை நான் தொட சாத்தியமானது. எழுத ஆரம்பித்த புதிதில் சீக்கிரம் வெற்றிப்படியை தொட்டு விடவேண்டும் என்று எழுதி தள்ளினேன். என்னுடைய சில பதிவுகளை இப்போது நான் படிக்கும் பொழுது மனதிற்குள் சிரித்து கொள்வேன்…எப்படி வாசகர்கள் பொறுத்துக் கொண்டார்கள் என்று.

நான் ஒரு சராசரி தமிழன், சமூகத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு நம்மிடம் நல்ல தலைவர்கள் இல்லை என்பதை எந்த வித குழப்பமும் இன்றி என்னால் தெளிவாக சொல்ல முடியும். என்னுடைய பல பதிவுகளில் அனைத்து கட்சிகளையும் சாடி எழுதி இருக்கிறேன். ஆளும் கட்சியை சற்று பலமாக விமர்சித்து உள்ளேன்… நான் எந்த கட்சியையும் சாராதவன்…சிறு வயதில் என் தந்தை அரசியல் பற்றி பேசும் பொழுது “நான் சோத்து கட்சி” என்று கூறுவார் , என்னவென்றால் உணவு தானியங்களை மக்களுக்கு எளிதாக கிடைக்க செய்யும் எந்த கட்சியும் எனது கட்சி என்று அர்த்தம். ஆனால் இன்றைய நிலை என்ன…எழுதி எழுதி கை தான் வலிக்கிறது. உணவு பண்டங்களின் விலை குறைந்த பாடு இல்லை.

கணிபொறியும்…கணிபொறியோடு சேர்ந்த தொழில் புரட்சியால் இன்று நமது நாடு அதிக அளவு பணக்காரர்களை உற்பத்தி செய்துள்ளது… முக்கால்வாசி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பல குடும்பங்களில் இன்று பணம் கொழிக்கிறது…ஆனால் என்ன பயன்… புதிதாய் பணக்காரர்கள் ஆனவர்கள்…எப்படி பணத்தை பாதுகாக்கவேண்டும் என்று தெரியாமல் நுகர்வு கலாச்சாரத்தால் பல இளைஞர்கள் கடன் அட்டையில் அதிக வட்டியை கட்டிக் கொண்டுள்ளனர். ஏழைகள் பாடு சொல்லவே வேண்டாம்…பொருளாதார ஏற்ற தாழ்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. ஒரு அளவிற்கு மேல் சென்று கொண்டிருக்கும் அந்த வித்தியாசம் எப்படி எல்லாம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறது என்று எந்த ஒரு அரசியல்வாதியும் கவலைப் பட்டதாக தெரியவில்லை… விளைவுகளை பற்றி தெரியாமல் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே அவர்கள் குறிகோளாக இருகிறார்கள்.

இவையெல்லாம் என் மனதினில் நெருப்பாக இருந்தது…பதிவுலகம் திறந்த கதவு வழியே எழுத்துகளாக அள்ளி வீசுகின்றேன்…அதன் சிறு பொறி பட்டு ஏதேனும் மாற்றம் நிகழாத என்கின்ற ஒரு சிறு ஆசையே…

என் பதிவுகளை இன்றுவரை இடைவிடாது படித்துக் கொண்டிருக்கும் நண்பர் krpsenthil அவர்களுக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..ஆத்மார்த்தமான நன்றி…

ஒரு சிறு வேண்டுகோள் தமிழுணர்வு கொண்ட என் நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆரம்பித்துள்ள இனியதமிழ் திரட்டிக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். பதிவர்கள் சம்பந்த பட்ட பல சேவைகள் அவர்கள் பரிசீலனையில் உள்ளது உங்கள் ஆதரவு அவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்

கரிசனையான ஒரு தமிழன் இல்லையா…

கேள்வி : இலங்கை செல்லும் தூதுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது இடம் பெறுவார்களா?

கருணாநிதி பதில் : இல்லை.

என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி…தமிழ் நாட்டை சேர்ந்த பல கட்சிகளில் கரிசனையான ஒரு தமிழன் இல்லையா… இந்திய தூதுக்குழுவில் இடம் பெற…எப்போதுமே பிரிச்சனையின் ஆழம் தெரியாத நபர்களை தூதுக் குழுவில் அமைத்து கண்துடைப்பாக…இன்னும் எவ்வளவு நாட்கள் தமிழர்களை ஏமாற்ற போகிறார்கள்… முழு பலத்தையும் இழந்து அனாதரவாய் இருக்கும் அவர்களுக்கு உதவி செய்ய ஏன் தமிழ் நாட்டை ஆளும் கட்சிகளுக்கு சிறிது எண்ணம் கூட வரவில்லை…

பங்களாதேசை பிரிக்கும் பொழுது வங்காள மொழி பேசுபவர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக மேற்கு வங்காள மாநில முதல்வர் செய்த உதவிகள் சொல்லி மாளாது… தமிழ்…தமிழ் என்று பிழைப்பு நடத்தும் இந்த அரசுகள் வெட்கி தலை குனிய வேண்டும். இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை…இவர்கள் உதவுவதாக நடத்தும் நாடகங்கள் தான் நம்மில் கோபத்தை வர செய்கிறது.

அன்று புலிகளை சொல்லி அவர்களை ஒதுக்கினர்கள் இன்று அதே புலிகளை சொல்லி சிறுமை படுத்துகின்றனர்… என் தந்தையோ…தாயோ… எனக்கு இன உணர்வை ஊட்டவில்லை…நான் கற்ற தமிழ் எனக்கு இன உணர்வை ஊட்டியது… தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறோம்…ஆனால் ஒரு சிறு நாடு நம்மை சிறுமை படுத்துகிறது… நமது வீரத்தை பற்றி கேள்வி இல்லை… நமது விவேகம்…ஆழ்ந்து சிந்தித்தால்…நாம் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருக்கிறோம்…நமக்கு நாம் அரசனை போல் தான் வாழுகிறோம்…ஆனால் ஒரு இனமாக இன்று நாம் தாழ்ந்து இருக்கிறோம்… இது பலருக்கு புரிவதில்லை…ஒரு இனத்திற்கு உள்ளேயே மாநிலத்தை பிரிப்பதில் ஆந்திர மாநிலமே பற்றி எரிந்தது…வேறொருவன் நம்மனவனை நமக்கு தெரிந்தே நசுக்கினான்…நமது விவேகம் என்ன ஆனது… நம்மிடம் இந்தியாவை சார்ந்த எந்த இனத்தவரும் இறையாண்மையை பற்றி பேச தகுதியே கிடையாது…இனத்தை பலிகொடுத்து உலகிலயே முதல் இனமாக நாம் அல்லவா இறையாண்மையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்…

தமிழர்களே! இது தான் இன உணர்வோ…

ஓட்டு விழவில்லை…எழுதமாட்டேன்…

அண்மையில் ஒரு பதிவரின் பதிவை படித்த போது அதிர்ந்துவிட்டேன். அவரின் பல பதிவுகள் களவாடப்பட்டு வேறு வேறு தளங்களில் பிரபலமாக்கப்பட்டு இருந்தது…அவர் அதை குறையாக சொல்லி மேலும் அவரின் பல நல்ல பதிவுகளுக்கு சரியான ஓட்டு விழவில்லை என்று பெரிய குறையாக எழுதி இருந்தார்…

அடுத்தவரின் உழைப்பை இப்படி தன் படைப்பாக போடுவது மிக மிக கேவலமான ஒரு விஷயம்…இப்படி செய்து தான் பதிவுலகில் நிற்க முடியும் என்று அவர்கள் நினைத்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பதிவுலகில் இன்று இருக்கும் வலுவான போட்டியில் பிரபல பதிவர்களே சற்று தடுமாறும் பொழுது வளர்ந்து வரும் பதிவர்கள் சற்று நிதானமாக செயல்படவேண்டும்.

பதிவுலகம் என்பது மட்டைபந்து விளையாட்டை ஒத்து இருக்கிறது…இங்கு நிலையாக நிற்கவேண்டும் என்றால் பொறுமை மிக மிக தேவை…. என்ன தான் பிரபல பதிவராக இருந்தாலும் நண்பர்கள் ஒத்துழைத்தாலும் பதிவிற்கு பதிவு வித்தியாசத்தை காட்டவில்லை என்றால் நிலைத்து நிற்பது சுலபமில்லை.

ஓட்டு விழவில்லை என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்…நண்பரே ஓட்டு விழுவதை எல்லாம் கணக்கில் கொண்டால் அது சிறுபிள்ளைத்தனமாகத்தான் முடியும். என்னுடைய பல பதிவுகள் மூன்று ஓட்டுகளை தாண்டியதில்லை…ஆனால் அன்று தான் அதிகம் பேர் படித்து இருப்பார்கள். படிக்கும் எல்லோருமே ஓட்டு போடவேண்டும் என்று ஒரு பதிவர் நினைப்பது எப்படி சரியாக இருக்கும்.

இதில் உச்ச கட்ட சோகம் என்னவென்றால் அந்த பதிவர் எழுதுவதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அவரின் பல பதிவுகள் தொழில்நுட்ப பதிவுகள்… அனைத்தும் தேவையான பதிவுகள்…ஓட்டு விழவில்லை என்ற காரணத்திற்காக அவர் எழுதவதை நிறுத்துவதாக அறிவித்தது அவரின் அறியாமையா அல்லது அந்த அளவிற்கு பக்குவம் பெறவில்லையா பதிவுலகில் என்று தெரியவில்லை.

எழுத முடிந்தால்…எழுதுவதில் தீராத தாகம் இருந்தால் பதிவுலகில் எழுதுங்கள் மற்ற எந்த காரணங்களுக்காகவும் எழுதாதீர்கள்…

சிரிக்காதீர்…சிந்திப்பீர்…

August 18, 2010 by · Leave a Comment
Filed under: கவிதை 


மின்னும் நட்சத்திரங்கள்…
அலை அலையாய்
நிலவொளி…
இடம் பிரித்து
வழிதேடி
என் கால்தடங்கள்…

இறுமாப்பை
கேள்வி கேட்கும்
ஒரு இரவில்…
நீண்டு ஓடிய
மரக்கிளைகள்
நச்சு பாம்புகளாய்…
என் நிழலே
உயர பூதங்களாய்…
சவாலான ஒரு பயணம்…

இரவில்… கடந்து போன
பாதையினை…
கதிரவனை துணைக்கழைத்து
பார்வையிட்டேன்…
என்ன அதிசயம்…
நான் கண்ட எதுவும் அங்கில்லை…
சிரிக்காதீர்…சிந்திப்பீர்…

இன்று நேற்றல்ல…இந்த நாடகங்கள்….

பேச்சுவார்த்தைக்காக தமிழகம் கிளம்பியது இலங்கை மீனவர் குழு

இந்த செய்தியை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது… பிரச்சனை எப்போதுமே இரு இனத்திற்கு தானே தவிர…மீனவர்களுக்குள் இல்லை. இன்று அவர்கள் கை ஓங்கி இருப்பதால் ஒரு சில சிங்கள மீனவர்கள் தவறி நடக்கலாம். இலங்கை கடற்படையினர் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களை திசை திருப்ப நடைபெறும் இது போன்ற பேச்சு வார்த்தைகள் எந்த வித பயனையும் அளிக்க போவது இல்லை.

தமிழக தமிழனுக்கே பாதுகாப்பு தர சிறிதும் எண்ணமில்லாத மாநில…மத்திய அரசுகளின் நிலைப்பாட்டை எங்கு போய் சொல்வது…அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றபின் நாம் கேட்கும் எல்லா கேள்விக்கும் அவர்கள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போவோம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை, இதை எழுதும் போது குறிஞ்சிப் பூவை பற்றி ஞாபகம் வருகிறது அதன் பன்னிரெண்டு வருட கர்ப்பக்காலம் அதன் மதிப்பை உயர்த்தியது….நாம் போடும் ஐந்து வருட ஓட்டோ நம்மை நடுத் தெருவிற்கு தான் அழைத்து வருகிறது.

எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கும் நம் அரசு மீனவர்களின் பாதுகாப்பையும் இலவசமாக கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்…

சற்று யோசித்து பார்த்தால் எவ்வளவு பிரச்சனைகளை மீனவர்கள் எதிர்கொள்கிறார்கள்…

அவர்களுக்குள்ளேயே முதலில் ஒற்றுமை கிடையாது…கடற்கரையை பங்கு போட்டு அடித்து கொள்கிறார்கள்…
கடலில் கொஞ்சம் உள்ளே சென்றால் கூட சிங்களவன் நாயை துரத்துவது போல் துரத்துகிறேன்…இப்போது சீனனும் இருப்பதாக சொல்கிறார்கள்…
இந்தியனிடம்(மாநில,மத்திய அரசு) சொன்னால் “நீ ஏன் கோட்டை தாண்டினாய் என்கிறான்…
இந்திய கடலோர காவல் படை ராஜபக்சேவுக்காக இரவும் பகலும் இல்லாத விடுதலைபுலிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்…கண்ணில் மாட்டும் அப்பாவி மீனவர்களை மிரட்டும் அளவிற்கு தைரியசாலிகள் அவர்கள்…

இன்னும் எவ்வளவோ….

மீனவர்களுக்காக நமது திராவிட கழகங்கள் மாறி மாறி நடத்தும் ஆர்பாட்டங்கள் கட்சி தொண்டர்களின் ஒரு நாள் பிரியாணியோடு முடிந்துவிடும்…அவர்களின் முழக்கங்கள் காற்றில் கரைவதற்குள் அனைவரும் வீடு போய் சேர்த்திருப்பார்கள்…

இன்று நேற்றல்ல…இந்த நாடகங்கள்….பல வருடங்கள் அரங்கேறுகின்றன… சளைக்காமல் எப்படி தான் நடத்துகிறார்களோ..

வெள்ளையனிடம் இருந்து வாங்கிய சுதந்திரம்….நம்மவனின் அதிகார போதையில் தள்ளாடுகிறது… மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு பெரிது…தமிழனாய் இருப்பதால்…அந்த மீனவர்கள் படும் தொல்லை சற்று அதிகம் தான்…

எந்திரன்…ரசிக்க..விமர்சிக்க…

August 12, 2010 by · 8 Comments
Filed under: பதிவுலகம் 

எந்திரன் திரை இசை வெளியீட்டுக்கு பிறகு பல பதிவர்கள் தங்கள் கருத்துக்களை வலைப்பூக்களில் பரிமாறிக் கொள்கிறார்கள்… நான் படித்த பல பதிவுகளை பொறுத்தவரை… எல்லாவற்றையும் எதிர்பவர்கள் ஒரு வகை…தங்களுக்கு பிடிக்காதவைகளை மட்டும் விமர்சனம் செய்பவர்கள் ஒரு வகை…பொதுவுடைமை கொள்கைகளை சரிவர புரிந்து கொள்ளாமல் உளறிக் கொட்டுபவர்கள் ஒரு வகை…

ஷங்கர்,ரஜினி,ஏ.ஆர். ரகுமான்,கலாநிதிமாறன் – இவர்களின் கூட்டணி என்பதே முழுக்க முழுக்க திரைப்பட வியாபாரத்தை சார்ந்தது…விமர்சனம் செய்யவேண்டும் என்று நினைத்தால் எந்திரன் படத்தை தான் விமர்சனம் செய்ய வேண்டுமே தவிர…இவர்களை பற்றி அல்ல…

இவர்கள் யாரும் தங்களை காந்தி என்று சொல்லிக் கொள்ளவில்லை…இவர்களின் பங்கு அரசியலை பொறுத்தவரை சுழியம் தான்… என்ன தான் பிரமாண்டமாக படம் எடுத்தாலும் சமூகத்தில் உள்ள சில குறைகளை முக்கிய விசயமாக கையாளுவதால் ஷங்கரை நாம் சமூக சீர்திருத்தவாதியாக நினைத்தால் அது நம் அறியாமையே…

சில பதிவர்கள் எழுதுவது போல் இவர்கள் நினைத்தால் நல்ல விசயங்கள் நிறைய செய்யலாம்…அது அவர்களின் மனநிலையை பொறுத்தது…நாம் யார் அவர்களை நிர்பந்திக்க…

இவர்கள் தான் தமிழ் திரைபடத்தை உலகமறிய செய்திருக்கிறார்கள்…தமிழ் திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்திருக்கிறார்கள்…அவர்கள் தொழிலில் தங்கள் திறமை மூலம் சாதித்திருக்கிறார்கள்…அதை நாம் பாராட்ட வேண்டுமே தவிர…சம்பந்தமில்ல அளவுகோலில் அவர்களை அளக்க முயற்சிப்பது…வீண் வேலை.

நான் இங்கு எந்த புதிய பிரச்சனையையும் கிளப்ப தயாராய் இல்லை…இந்த பதிவு முழுக்க முழுக்க என் கண்ணோட்டமே… நான் யாருக்கும் அறிவுரை சொல்லவில்லை… குடிகாரர்களையும் எந்திரன் படம் பார்க்க போகிறவர்களையும் ஒரே தட்டில் வைப்பது நல்ல நகைச்சுவை… தயவு செய்து எழுதிய பதிவர் சிந்தித்து எழுதவேண்டும்…

தென்றல் துவைத்த என் மனம்…

August 11, 2010 by · 4 Comments
Filed under: இயற்கை, கவிதை 


குறுக்கும் நெடுக்குமாய்
மரக்கிளைகள்…

இயற்கை வாரி
இறைத்திருந்த
சருகுகள்… என் கால்தடம் எங்கும்…

உடலோடு உறவாடிய
மாலை நேர
மலைக்காற்று…

மலை முகடுகளில்
வெட்கத்தால்
முகம் பதுக்கிய
இளஞ்சிவப்பு கதிரவன்…

இயற்கை விரித்த
மாயக் கம்பளம்…
பிடியில்லாமல்
என் மனம்
ஊஞ்சள் ஆடியது…

என் உணர்வுகளின்
ஆழ்ந்த இறுக்கம்
சிறிது சிறிதாக விலகியது…

தென்றல் துவைத்த
என் மனதில் தான்
எவ்வளவு அழுக்குகள்…

மனம் குளித்து
உடல் சிலிர்த்து
நிமிடங்கள் வசமாகின…

புது உடல்
புது மனம்
பெயரோடு அடையளாம்
மட்டும் மாறவில்லை…

இனி
தினம் வருவேன்
என்னை புதுப்பிக்க…
மாலை நேர வெளிக்காடே…

டாஸ்மாக்…


இன்று மதுவிலக்கை பற்றி பேச்சு வந்து கொண்டிருக்கிறது ஆட்சியாளர்கள் மத்தியில், ஆட்சிக்கு வந்தவுடன் குடிமக்களை குடிகாரர்களாய் மாற்றி தெருவில் அலையவிட்டனர்…

இன்று தமிழகமே…அரசாங்கத்தின் தயவில் போதையில் தள்ளாடுகிறது…நாம் மிக நுட்பமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது.

அரசியல்வாதிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கு நெருங்கியவர்களுக்கும் பெரும் பணம் ஈட்டும் இந்த வியாபாரத்தை மிக எளிதாக அரசாங்கம் ஏன், எப்படி எடுத்துக்கொண்டது. கருணாநிதி மிக மிக சாமர்த்தியசாலி அவர் வாரி இறைத்த தேர்தல் வாக்குறுதிகளை யோசித்து பாருங்கள்… ஒரு ரூபாய்க்கு அரிசி…இலவச தொலைக்காட்சி… பட்டியல் நீளும்…

தன் இன மக்களை குடிகாரர்களாய் மாற்றி அவர்களிடம் இருந்து பிடுங்கிய பணத்தில் வாரியிறைத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் புத்திசாலித்தனம் வேறு யாருக்கு வரும்…இந்த அளவிற்கு எல்லாம் ஜெயலலிதாவினால் யோசிக்கமுடியாது.

தமிழர்களை இலவசத்தின் சின்னங்களாய் உலகத்தின் முன் நிறுத்தி சிறுமைபடுத்திய பெருமை நம் இன மான தலைவருக்குத்தான் சேரும். நன்றி தலைவரே!!!

இன்று ஆட்சி முடியும் தருவாயில் மதுவிலக்கைப் பற்றி சிந்திப்பதாக… செயல்படுத்த போவதாக அறிவிப்பது எல்லாம் தங்கள் தேர்தல் நலம் கருதியே அன்றி….மக்கள் நலம் கருதி அல்ல…

பட்டதாரி இளைஞர்களை அரசாங்க வேலை என்ற பெயரில் டாஸ்மாக்கில் மதுபுட்டிகளுடன் உறவாடவைத்து இன்று அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளனர்.

தொலைதூர சிந்தனை இல்லாத திராவிட ஆட்சிகளின் அவலம்…இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியவில்லை…

இவர்களுக்கு தமிழன் என்றோ,சிறுபான்மையினர் என்றோ, ஏழைகள் என்றோ எந்த வித இரக்க உணர்வும் கிடையாது…இவர்கள் ஆட்சியின் பொற்காலம் எல்லாம் இவர்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான். அது ஜெயலலிதாவின் ஆட்சியாய் இருந்தாலும் சரி கருணாநிதி ஆட்சியாய் இருந்தாலும் சரி…என்றும் மாறப் போவது இல்லை.

திராவிடத்தில் தொலைந்த தமிழ் உணர்வைப் போல் திராவிட ஆட்சியில் தொலைத்த தமிழனை கண்டுபிடிப்பது எளிதல்ல…

இன்றைய தாழ்வு நிலை நிரந்தரம் இல்லை… தமிழ் உணர்வாளர்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்கும் நாள் வெகு தூரம் இல்லை…இன்று வானம் போல் உயர்ந்து இருப்பவர்கள் நாளை சேற்றில் நெளியும் போது உணர்வார்கள் அவர்கள் செய்த தவறை…

தன்னம்பிக்கை கை கொடுக்கும்…

August 6, 2010 by · 2 Comments
Filed under: கவிதை 


என் நிழலை சுற்றி
ஒரு கருவலயம்…

என் கனவை சுற்றி
ஒரு கருமேகம்…

எதிர்ப்பில்லாமல்
வாழ்கை இல்லை…

அளந்து வாழ
வாழ்கை…
ஒரு
அவலமா…என்ன!
திறக்காத மனதைக் கொண்டு…
வடித்து வைக்கும்
ஓவியங்கள்
மனிதர்களாய் இங்கே…
பாதையோரம்
மக்காமல்
கிடக்கும் பாலித்தீன் பைகளே…
திறன்கள் மறைந்து கிடக்கும்…
திட்டியவனை மறந்து விடுங்கள்…
ஒரு நாள்
வழி நெடுக
பூ சொறிவார்…திட்டியவனும்
புன்னகைப்பான்…

கை பிடித்து எழுந்திடுகள்…
உங்கள்
தன்னம்பிக்கை
கை கொடுக்கும்…

எந்திரன் முன்னோட்டக் காட்சி…

August 2, 2010 by · 2 Comments
Filed under: திரைப்படம் 


எந்திரன் முன்னோட்டம்…






எந்திரன் பாடல் – ராசராசசோழன் பார்வையில்…


எப்போதும் போல் இந்த முறையும் முதலில் கேட்கும் போது என்னவோ போல் இருந்தது… மீண்டும் மீண்டும் கேட்க…ஒவ்வொரு பாடலாக புரிய மற்றும் பிடிக்க ஆரம்பித்துள்ளது….

கிளிமாஞ்சாரோ…பாடல் முணுமுணுக்க வைக்கிறது…அரிமா அரிமா…பாடலில் வரும் சிறு சிறு சத்தங்கள் கிறங்க வைக்கின்றன…

புதிய மனிதா..பாடல் எஸ்.பி.பி குரலில்…கண்டிப்பாய் உற்சாகம் பற்றிக் கொள்ளும்…

பூம் பூம் ரோபோடா.. பாடல்… இசையில்…தொழில்நுட்பத்தை பிழிந்து எடுத்துள்ளார்கள்…

இரும்பிலே ஓர் இருதயம்… பாடல்….ஏ.ஆர்.ரகுமானின் குரலில்…அருமை….

முழு பாடல்களையும் இன்னும் நன்கு கேட்க வேண்டும்…விரிவாய் எழுத்துவதற்கு…

ஆனால் நிச்சயம் இது ஒரு சாதனை படைக்கப் போகும் படைப்பு தான்….

எந்திரன் பாடல் – 1
எந்திரன் பாடல் – 2


எந்திரன் பாடல்…II

எந்திரன் பாடல் – I

August 1, 2010 by · 2 Comments
Filed under: திரைப்படம் 

எந்திரன் பாடலை ரசியுங்கள்….

Enthiran Song1


Enthiran Song2


Enthiran Song3


எந்திரன் பாடல் – II