அடுத்தவரின் உழைப்பை இப்படி தன் படைப்பாக போடுவது மிக மிக கேவலமான ஒரு விஷயம்…இப்படி செய்து தான் பதிவுலகில் நிற்க முடியும் என்று அவர்கள் நினைத்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பதிவுலகில் இன்று இருக்கும் வலுவான போட்டியில் பிரபல பதிவர்களே சற்று தடுமாறும் பொழுது வளர்ந்து வரும் பதிவர்கள் சற்று நிதானமாக செயல்படவேண்டும்.
பதிவுலகம் என்பது மட்டைபந்து விளையாட்டை ஒத்து இருக்கிறது…இங்கு நிலையாக நிற்கவேண்டும் என்றால் பொறுமை மிக மிக தேவை…. என்ன தான் பிரபல பதிவராக இருந்தாலும் நண்பர்கள் ஒத்துழைத்தாலும் பதிவிற்கு பதிவு வித்தியாசத்தை காட்டவில்லை என்றால் நிலைத்து நிற்பது சுலபமில்லை.
ஓட்டு விழவில்லை என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்…நண்பரே ஓட்டு விழுவதை எல்லாம் கணக்கில் கொண்டால் அது சிறுபிள்ளைத்தனமாகத்தான் முடியும். என்னுடைய பல பதிவுகள் மூன்று ஓட்டுகளை தாண்டியதில்லை…ஆனால் அன்று தான் அதிகம் பேர் படித்து இருப்பார்கள். படிக்கும் எல்லோருமே ஓட்டு போடவேண்டும் என்று ஒரு பதிவர் நினைப்பது எப்படி சரியாக இருக்கும்.
இதில் உச்ச கட்ட சோகம் என்னவென்றால் அந்த பதிவர் எழுதுவதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அவரின் பல பதிவுகள் தொழில்நுட்ப பதிவுகள்… அனைத்தும் தேவையான பதிவுகள்…ஓட்டு விழவில்லை என்ற காரணத்திற்காக அவர் எழுதவதை நிறுத்துவதாக அறிவித்தது அவரின் அறியாமையா அல்லது அந்த அளவிற்கு பக்குவம் பெறவில்லையா பதிவுலகில் என்று தெரியவில்லை.
எழுத முடிந்தால்…எழுதுவதில் தீராத தாகம் இருந்தால் பதிவுலகில் எழுதுங்கள் மற்ற எந்த காரணங்களுக்காகவும் எழுதாதீர்கள்…


