திரும்பிப் பார்க்கிறேன்…

September 30, 2010 by · 3 Comments
Filed under: அனுபவம் 

endlessroad

நான் பதிவுலகில் நுழைந்து எனக்கென ஒரு இடத்தை பிடிதுள்ளேனா…என்று தெரியாது ஆனால் தினந்தோறும் வரும் நூற்றுக்கணக்கான வருகையாளர்களை பார்க்கும் பொழுது கொஞ்சம் சவுரியமாக இருக்கிறது. எழுத ஆரம்பித்த புதிதில் எதுவும் வரைமுறை இல்லாமல் எழுதினேன்…ஆனால் சமீப காலமாக எழுத உட்கார்ந்தாலே நடக்கும் கொடுமைகளை பற்றி தான் எழுத தோன்றுகிறது…

என்னுடைய பல பதிவுகளை படித்தவர்கள் ஈழத்தை பற்றி நான் அதிகம் எழுதுவதாக நினைக்கலாம் அது என் தவறு கிடையாது இனி எந்த காலத்திலும் என் மனதை இந்த விசயத்தில் மாற்றமுடியாது என்பது திண்ணமாக என் எழுத்துகளில் வெளிப்படுகிறது… தமிழக தமிழர்களாய் நாம் செய்த தவறு அப்படி. சில வாரங்களுக்கு முன்னாள் இதே தளத்தில் ஒரு ஒளிநாடவை இணைத்திருந்தேன்…சிங்க கூட்டங்களில் சிக்கிய ஒரு காட்டெருமை குட்டியை அதன் பெற்றோர்கள் தன் இனத்தை அழைத்து வந்து காப்பாற்றிய விதம் என் மனதை வெகுவாக பாதித்தது. ஒரு விலங்கு கூட்டத்திற்கு இருந்த வேகம் ஏன் நமக்கு இல்லாமல் போயிற்று…இதற்கு காரணமாக எத்தனையோ விசயங்களை பகிர்ந்தாலும் இன்று உலக அளவில் தமிழினம் ஒரு தோல்வி அடைந்த இனம் தான். நம்மை பார்த்து சிரிப்பவர்கள்…நம் முன்னே சிரிப்பது இல்லை…

இன்று தமிழில் பல திரட்டிகள் வந்துவிட்டன ஆனால் அவற்றின் தன்மைகள் என்னவோ ஒன்று தான். ஒரு வித்தியாசமும் இன்றி அனைத்தும் நகல் போல தான் உள்ளது இதனால் தான் இன்ட்லி மற்றும் தமிழ்மணத்திற்கு போட்டியாக இந்த ஒரு திரட்டியையும் சொல்ல முடியாத நிலை இன்று உள்ளது. பதிவர்களும் எதை பற்றியும் யோசிக்காமல் அனைத்து திரட்டிகளிலும் இணைக்கும் நிலை உள்ளது. ஆங்கில படங்களுக்கும் தமிழ் படங்களுக்கும் உள்ள வித்தியாசம் போல தமிழ் திரட்டிகள் குறிப்பிட்ட பதிவுகளை மட்டும் அனுமதிக்காமல் எந்த வகை பதிவாய் இருந்தாலும் ஒரே திரட்டியில் இணைத்து திக்கு முக்காட செய்கிறார்கள். சமீபமாய் இன்ட்லி புகைபடங்களுக்கு தனி திரட்டியும் தமிழ்மணம் திரையுலக செய்திகளுக்கு தனி திரட்டியும் கொண்டு வந்ததை நிச்சயம் பாரட்ட வேண்டும்…என்னடா இனியதமிழை பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நீங்கள் நினைக்கலாம்…உண்மை எதுவெனில் இன்ட்லி மற்றும் தமிழ்மணத்திற்கு நிகராக பேசும் அளவிற்கு இனியதமிழ் வளரவில்லை…ஆனால் குறுகிய காலத்தில் தமிழ் பதிவர்கள் அதற்கு கொடுத்த இடம் நிச்சயம் அதன் வெற்றியை பிரதிபலிக்கிறது. தமிழ் ஆர்வம் மிக்க ஒரு குழுவாய் இனியதமிழ் நண்பர்கள் செயல்படும் விதம் என்னை ஆச்சரியத்தில் தள்ளியது…குறுகிய காலத்தில் அவர்கள் கொண்டு வந்த

இனியதமிழ் திரட்டி
இனியஇதழ்
இனியபட்டியல்

அவர்களின் இரவுபகல் பாராத உழைப்பு அவர்களுக்கு நிச்சயம் தமிழ் பதிவர்களின் ஆதரவினை பெற்று தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

என்னிடம் இருக்கும் பெரிய குறையே எதையோ எழுத ஆரம்பித்து எங்கெங்கோ போய்விடுவேன்…சரி விசயத்திற்கு வருவோம் நிறைய திரட்டிகள் வரவேண்டும் ஒவ்வொரு திரட்டியும் குறுப்பிட்ட பதிவுகளுக்காய் இருந்தால் தமிழ் பதிவுலகம் மென்மேலும் வளர்ச்சி பெறும்.

நான் எழுதிய கவிதைகள்,கதைகள்,அரசியல் விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள்,சமூக விமர்சனங்கள் இவைகளில் அதிகம் ஓட்டுக்களை பெற்றது அரசியல் விமர்சனங்கள் தான். நான் எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் இந்த எண்ணம் வந்து விளையாடும் அதன் போக்கிலே விட்டதால் இன்று திரும்பி பார்த்தால் திகட்ட திகட்ட அரசியல் விமர்சனங்கள் தான் சமீப காலமாய்…இந்த பதிவே என்னை.. என் எழுத்துகளை மீள் பரிசீலனை செய்யும் நோக்கத்தோடு தான் எழுதினேன்…

இதை தான் கவனம் கவனம் என்று சொல்வார்களோ நம் பெரியவர்கள்…திரும்பிப் பார்பதால் தான் எவ்வளவு நன்மைகள் ….

அயோத்தி….இலங்கை…காங்கிரஸ்…

September 29, 2010 by · Leave a Comment
Filed under: அரசியல் 

supremecourt

இதை எழுத ஆரம்பிக்கும் போதே உள்ளுணர்வு கவனம் கவனம் என்று இருமுறை என் சிந்தனைகளை மிரட்டியது. எல்லா மதங்களும் கருணையை மட்டும் போதித்து மனிதர்களை மிருகங்களாய் மாற்றி வைத்துள்ளது இது எப்படி சாத்தியம்… மனிதர்கள் என்ன அன்னப்பறவையா கெட்டவைகளை ஒதுக்கி விட்டு நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்வதற்கு.

ஏதோ ஒரு பதிவில் படித்ததாக ஞாபகம் “ராமன் தன் மனைவி ஒருத்தியை காப்பாற்றுவதற்காக பல்லாயிரம் உயிர்களை களையெடுத்தான் எப்படி அவன் கடவுளின் அவதாரம் ஆவான்” என்று கேள்வி எழுப்பி இருந்தார் அந்த பதிவர். இது போன்று பல கருத்துகள் உலவினாலும் இவை எல்லாம் தனிப்பட்ட கருத்துக்களே. விவாதத்தினால் ஒரு உண்மையான கருத்தை பொய்யாகவோ இல்லை ஒரு பொய்யை உண்மையாகவோ மாற்ற முடியும்…அந்த சக்தி விவாதிப்பவரின் பேச்சு திறமையை பொறுத்து…ஆகையால் அயோத்தி விசயத்தை விவாதிப்பதால் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை.

உதிரிகளாய் இருந்தாலும் நல்ல எதிர்கட்சிகளாய் இருந்த பல கட்சிகளை அழித்து பா.ஜா.க கட்சி உருவானது…இதே அயோத்தி பிரச்சனையை கையில் எடுத்து தான் அவர்கள் பூதகரமாக வளர்ந்தார்கள். இன்று என்றுமே இல்லாத அளவிற்கு இந்தியாவின் பலவீனமான எதிர்க்கட்சியாய் காலத்தை தள்ளிக் கொண்டுள்ளனர். அவர்கள் அன்று விதைத்த விஷ விதை இன்று சமூகத்தை விழுங்கும் ஆலமரமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஒளிந்து கொண்டிருக்கிறது.

இறுதி தீர்ப்பு வந்து எவன் எவனை வெட்டினாலும் அதை விட கேவலமான செயல் உலகில் எதுவும் இருக்காது. திணிக்கப்பட்ட வன்முறையை அதுவும் மதத்திற்காக செய்கிறவன் முட்டாள் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

இராவணன் ஆண்ட இலங்கையும் ராமன் ஆண்ட அயோத்தியும் பற்றி எரிவதற்கு முதல் காரணம் மனித மனங்களில் ஒளிந்துள்ள ஆளுமை திமிரே…அதை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் செய்த தவறுக்கு இன்று அயோத்தி மக்கள் முகம் கொடுப்பது போல இன்று மிதிபடும் ஈழமக்கள் நாளை கிளர்ந்தெழும் போது இது போல் எத்தனையோ பிரச்சனை எழும் என்று எந்த சிங்களவனும் யோசிப்பது கிடையாது.

இந்தியாவின் மிக முக்கிய விஷயமான இந்த அயோத்தி பிரச்சனையில் பலனடைந்த பா.ஜ.க இறுதி தீர்ப்பை வைத்தும் ஏதேனும் பலனடைய முயற்சிக்கும் நேர்மையற்ற காங்கிரஸ் அரசாங்கம் வீணாக பொது மக்களை தான் வஞ்சிக்க போகிறது…

சிறுபான்மையினரை மதித்து அவர்களோடு சேர்ந்து நாட்டை உயர்த்தும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் இந்த உலகில் தான் இருக்கிறது…அதன் வளர்ச்சியை பற்றி பேசுபவர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்வது கிடையாது.

அயோத்தி தீர்ப்பு…. காங்கிரஸ் அரசாங்கம் வைக்கும் பெரிய ஆப்பு இந்திய மக்களுக்கு…

எந்திரன் என்ற மாயை…

September 26, 2010 by · 1 Comment
Filed under: கவிதை 

Rajini

படித்ததில் பிடித்தது (http://tamil.webdunia.com/entertainment/film/article/1009/22/1100922049_1.htm)

அக்டோபர் 1ஆம் தேதி எந்திரன் வெளியாகிறது. ர‌ஜினி நடித்தப் படங்கள் வெளியாகும் போது வழக்கத்துக்கு மாறான பரபரப்பும், ஆர்ப்பாட்டமும் இருக்கும். இது அவரது மாஸ் இமே‌ஜ் மற்றும் ரசிகர்களால் ஏற்படுவது.

பாபா வெளிவந்த போதும் மிகப்பெ‌ரிய அளவில் மீடியாக்கள் கொட்டி முழ‌ங்‌கின. பாபா பக்கம் என்று தனிப் பகுதி ஒதுக்கியவர்கள் படம் வெளியான பிறகு ர‌ஜினி ஏமாற்றிவிட்டதாகவும், அரைத்த மாவையே அரைத்திருப்பதாகவும் அங்கலாயத்துக் கொண்டனர். ர‌ஜினி ஒரு நல்ல படத்தை தரவில்லை என்ற ஆதங்கத்தைவிட, நமது ஓவர் பில்டப் வாசகர் முன் சாயம் இழந்துவிட்டதே என்ற கோபம்தான் அவர்களை விமர்சனத்தில், அரைத்த மாவு என்று நெ‌ளிய வைத்தது.

எந்திரன் வெளிவரும் இந்த காலகட்டத்தில் விளம்பரம், வர்த்தகம் என அனைத்துமே மாற்றமடைந்துவிட்டது. ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்களின் கதையில்லா படங்களையும் விளம்பரம் மூலம் ஓட வைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். தொலைக்காட்சியும், அச்சு ஊடகமும் கையிலிருந்தால் எதையும் விற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சியின் ஆபத்து குறித்துப் பேசும் சமூகவியலாளர் பியர் பூர்தியூ முக்கியமான ஒரு விஷயத்தை தெ‌ளிவுப்படுத்துகிறார். தொலைக்காட்சி என்பது யதார்த்தத்தை காண்பிப்பது என்பதைத் தாண்டி யதார்த்தத்தை போலியாக உருவாக்குவதாக குற்றம்சாற்றுகிறார்.

உதாரணமாக, குஷ்பு கற்பு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெ‌ரிவித்து நடந்த போராட்டத்தில் பதினைந்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஒரு தெருவைக்கூட சலசலப்புக்கு உள்ளாக்காத இந்த போராட்டத்தை குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்று மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்பியது, தனது அச்சு ஊடகத்தில் தலைப்புச் செய்தியாக்கியது. தமிழ்நாட்டில் அன்றைய தேதியில் அதுதான் மிகப் பெ‌ரிய பிரச்சனையாக ஊதி பெ‌ரிதாக்கப்பட்டது.

குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி இந்த செய்திக்கு அளவுக்கு மீறிய அழுத்தத்தை கொடுக்காமல் இருந்திருந்தால் தமிழர்களின் கவனத்தில் அது பதியாமலே போயிருக்கும், நமக்கு ஒரு ‘திடீர்’ அரசியல்வாதியும் கிடைத்திருக்க மாட்டார்.

எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொள்வது, எதை ஊதிப் பெ‌ரிதாக்குவது என்பது மட்டுமின்றி எதை பிரச்சனைக்குள்ளாக்குவது என்பதுவரை தொலைக்காட்சிகளை நிர்வகிக்கும் தனி மனிதர்களால்தான் முடிவு செய்யப்படுகிறது. இன்னும் ச‌ரியாகச் சொன்னால் நாம் எதை பார்க்க வேண்டும், எதை பார்க்கக் கூடாது என்பதையே இந்த தனி மனிதர்கள்தான் முடிவு செய்கிறார்கள். இதைதான் பியர் பூர்தியூ தொலைக்காட்சியின் அபாயம் என்று குறிப்பிட்டார்.

24 மணி நேர செய்தி சேனல்கள் பெருகிய பிறகு செய்திகளின் தேவை அதிகமாகிவிட்டது. செய்தி சேனல்கள் அகோரப் பசியுடன் பிரேக்கிங் நியூஸுக்காக அலைகின்றன. அவைகளின் பசியின் பெரும் பகுதியை தீர்த்து வைப்பவர்கள் செலிபி‌ரிட்டிகள் எனப்படும் பிரபலமானவர்கள். ஐஸ்வர்யாராய் சேலை கட்டினால் அதை நாள் முழுவதும் காண்பிக்க செய்திச் சேனல்கள் கூச்சப்படுவதில்லை. இதனால் நாம் எதிர்பார்க்காத திசையிலிருந்தெல்லாம் செலிபி‌ரிட்டிகள் முளைத்து வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகப்பெ‌ரிய செலிபி‌ரிட்டி ர‌ஜினிகாந்த். இந்த செலிபி‌ரிட்டி எல்லோரையும்விட அதிகமாக ரசிகர்களுக்கு தேவைப்படுகிறார். தான் யாருக்கு ரசிகராக இருக்கிறோமோ அவர்தான் உலகின் ஆகச் சிறந்த பிரபலமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனுமே விரும்புகிறான்.

இந்த செலிபி‌ரிட்டி ஷங்கருக்கு மிகவும் தேவைப்படுகிறார். எந்திரன் போன்ற காஸ்ட்லியான கனவை நனவாக்க கடைநிலை செலிபி‌ரிட்டியாலோ, இடைநிலை செலிபி‌ரிட்டியாலோ முடியாது.

இந்த செலிபி‌ரிட்டி சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனத்துக்கு மிக மிகத் தேவை. 150 கோடியை முதலீடு செய்து அதைவிட பல மடங்கை அறுவடை செய்ய நாக்க முக்க செலிபி‌ரிட்டிகளால் முடியவே முடியாது. ர‌ஜினி போன்ற மெகா செலிபி‌ரிட்டிதான் வேண்டும்.

இன்று தமிழக மக்கள் அனைவரும் எந்திரன் எனும் தேவதூதனை எதிர்நோக்கி நோன்பு இருப்பதான சித்திரத்தை தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. இந்த மிகை யதார்த்தத்திற்குள்தான் இன்று தமிழகம் மிதந்து கொண்டிருக்கிறது. எந்திரனை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதே ஒரு மனிதனின் ஆகப்பெ‌ரிய கடமை போலவும், அதுவே மாபெரும் கௌரவம் போலவும் தினம் மந்தி‌ரித்துக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இந்த மந்திரத்துக்கு கட்டுப்பட்டு முதல் நாள் ஐந்தாயிரம் பத்தாயிரம் பணம் கொடுத்து படம் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் நூற்றைம்பது கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையினால்தான் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் பல கோடி ரூபாய்க்கு எந்திரன் பெட்டியை வாங்கியிருக்கிறார்கள்.

எந்திரன் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பர வெளிச்சம் தமிழகத்தின் கண்களை கூசச் செய்கிறது. பியர் பூர்தியூவின் வார்த்தைகளில் சொன்னால், மீடியாக்களின் அதிகாரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும், எந்திரனே எல்லாம் என்ற மிகை யதார்த்த உலகில்தான் இன்று தமிழகம் இருக்கிறது.

முதல் நாளே எந்திரனை பார்க்கும் வேட்கையில் பல்லாயிரம் ரூபாயை காவு கொடுக்க நாம் தயாரானால், நம்மை அறியாமலே நாம் மீடியாவின் மிகை யதார்த்த வலையில் சிக்கிக் கொண்டோம் என்று அர்த்தம்.

ஐநூறும், ஐந்தாயிரமும் கொடுத்து விட்டில் பூச்சி ஆகப்போகிறோமா? இல்லை, இரண்டு வாரங்கள் பொறுத்திருந்து திரையரங்கு கட்டணத்தை மட்டுமே செலுத்தி நமது சுய கௌரவத்தை மீட்டெடுக்கப் போகிறோமா?

முடிவு தனி மனிதர்களின் கையில்தான் இருக்கிறது.

விளையாட்டு விபரீதம்…

DelhiCommonweathgames

அதாங்க நம்ம மானத்த காத்துல பறக்க விட்டாங்களே…காமன்வெல்த் விளையாட்டு போட்டி அதை பற்றி தான். உலகிற்கே இந்தியாவின் ஊழல் கலாச்சாரம் புதிது அல்ல என்றாலும் சின்ன விசயத்தையும் பெரிதாக பேசும் மேற்குலகு நாடுகளுக்கு இது அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது. அவர்கள் நாட்டில் எத்தனையோ மேம் பாலங்கள் சரிந்திருக்கின்றன…கட்டுமான பணிகளில் இதையெல்லம் கட்டுப்படுத்தலாம் ஆனால் நிகழாமல் தவிர்க்க முடியாது. உலக அளவில் இன்றைய தலைப்பு செய்தியே இந்தியா எப்படி காமன்வெல்த் விளையாட்டு போட்டியை விலை கொடுத்து வாங்கியது மற்றும் எவ்வளவு கேவலமாக விளையாட்டு கிராமத்தை நிர்மாணித்துள்ளது என்பதை பற்றி தான். அயல் நாடுகளில் வாழும் இந்தியர்கள் கூனிக் குறுகித் தான் இந்த விசயத்தை பேச வேண்டி இருக்கிறது.

இந்த லட்சணத்தில் மன்மோகன் சிங்கிற்கு சிறந்த நிர்வாகி என்ற பட்டம் வேறு எங்கு போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. எங்களால் எதையும் செய்ய முடியும் என்று உலக நாடுகளுக்கு தம்பட்டம் அடித்து கொள்ளும் வகையில் நடத்தப்படுவதே இந்த மாதிரியான விளையாட்டுப் போட்டிகள் ஆனால் என்ன ஆயிற்று இப்போது பெருத்த அவமானம் தான் மிச்சம். இந்தியர்கள் என்றாலே அழுக்கானவர்கள்…சுத்தத்திற்கும் அவர்களுக்கும் வெகு தூரம் என்று கேலி செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டனர்.

உலக அளவில் பெயர் அடிபடும் விளையாட்டு போட்டிக்கு இவர்கள் கொடுத்துள்ள கவனம் பல கேள்விகளை நம்மில் எழுப்புகிறது. இவர்கள் நாட்டின் மற்ற முக்கிய விசயங்களில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று சொல்லத் தேவையில்லை. இவர்கள் கண்ணில் தெரிவது எல்லாம் நாட்டின் முரண்பாடான பொருளாதார வளர்ச்சி….தொழிலதிபர்களின் மனம் கோணாமல் எப்படி அவர்களுக்கு ஒத்துழைப்பது, அவர்களின் சொர்க்க பூமியாக இந்தியாவை எப்படி மாற்றுவது என்று தான் மற்ற விஷயங்கள் எல்லாம் அரசாங்கத்தின் பொழுதுபோக்கு அவ்வளவு தான்.

ரஜினியாய் இருந்தாலும் சரி…கமலாய் இருந்தாலும் சரி…

tamileelam

எனக்கு ஒன்று புரியவில்லை, நம் தமிழ் திரையுலகம் ஒரு காலத்தில் தமிழுணர்வாளர்களால் நிரம்பி வழிந்திருந்தது..எல்லோரும் தமிழ் தமிழ் என்று இருந்தனர். ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை. மிகவும் சொற்பமானவர்கள் தான் தமிழ் மொழியை பற்றி தமிழர்களை பற்றி சிந்திகின்றனர்…இது நல்ல அறிகுறி இல்லை என்றாலும் அது தான் உண்மை.

அண்மைய காலங்களில் விஜய்,சூர்யா,கருணாஸ்,அசின்,அஜித் தற்போது கார்த்தி என்று பலரும் ஈழத் தமிழர்கள் விசயத்தில் கவனமாக நடந்து கொள்ளவில்லை என்று ஊடகங்களில் அவ்வப்போது ஏதேனும் செய்திகளில் அடிபடுகிறார்கள்.

ஈழப்போர் நடந்த நேரம் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஏர்டெல் நிறுவனம் சாதகமாக இருந்ததாகவும், அதன் படுகொலைகளை மறைக்க உதவியதாகவும் தமிழ் உணர்வாளர்கள் ஏற்கனவே ஏர்டெல் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்கள் இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு தற்போது கார்த்தி விளம்பர தூதரக ஒப்பந்தம் செய்துள்ளார். இதை ஒரு குறையாக தமிழ் உணர்வாளர்கள் கூறி இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழ் உணர்வாளர்கள், ஏன் போயும் போயும் நடிகர், நடிகைகளிடம் தமிழ் உணர்வை எதிர்பார்கிறார்கள் என்று தெரியவில்லை. பணம் சம்பாரித்தாலும் கொஞ்சமேனும் சமூகத்தை திருத்தும் கருத்துகளை பரிமாறியவர்கள் இப்போது அங்கு இல்லை…முயற்சிப்பவர்களுக்கும் அந்த இடம் முகவரி கொடுப்பது இல்லை. ஈழம் பற்றிய அனைத்து செய்திகளும் திரையுலகில் இருக்கும் நிறைய பேருக்கு என்னவென்றே தெரியாது…அதனால் அவர்களிடம் இல்லாத ஒன்றை வலுகட்டாயமாக வரவழைக்க நினைப்பது சரியாய் இருக்காது.

இலங்கைத் தமிழர்கள்

௧. என்ன செய்தாலும் சிங்களவன் தான் என்றிருக்கும் கொழும்பு தமிழர்கள்(அரைவாசி சிங்களவர்கள்)

௨. வன்னி மக்களை எப்போதுமே தவறான கண்ணோட்டத்தில் பார்த்து ஒரு முடிவையும் சரியாய் எடுக்க தெரியாத கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள்

௩. அயல் நாடுகளில் இருந்து வரும் சொந்த பந்தங்களின் பணத்தை வைத்து சீரழிந்து கொண்டிருக்கும் யாழ்பாண தமிழர்கள்

௪.கடைசிவரை புலிகளுடன் இருந்ததால் கூண்டில் அடைக்கப்பட்டு அல்லல் படும் வன்னித் தமிழர்கள்.

௫. இன்னும் இலங்கை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளப்படாத மலையக தோட்ட தொழிலாளிகள்(இந்திய, இலங்கை அரசாங்கங்களினால் உலக அனாதைகள் ஆனவர்கள்).

௭. ராஜபக்ஷேவுக்கு கூஜா தூக்கும் முன்னால் தமிழ் தேசியவாதிகள்.

இன்றைய இலங்கை தமிழர்களின் பல நிலைகள் இது தான்…இப்படி பிரிந்து அல்லது சூழ்ச்சிகளால் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் இவர்களை பற்றி ஒரு விவரமும், அது ரஜினியாகட்டும்,கமலாகட்டும் யாருக்கும் தெரியாது அல்லது தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் சொல்லும் “தமிழ்” “தமிழ்” என்கின்ற வார்த்தைகள் எல்லாம் அவர்கள் திரைபடத்தை பற்றி தான் ஆனால் தமிழ் உணர்வாளர்கள் வீணாக ஏதேதோ கற்பனை செய்து கொண்டு அவர்களின் உயிரை வாங்குவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள்

௧. கருணாநிதி குடும்பம் மற்றும் அவர்களின் விசுவாசிகள்(அடிமைகள்,கூட்டணி தர்மபிரபுக்கள் )

௨. ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பம் அவர்களின் விசுவாசிகள்(அடிமைகள்,கூட்டணி தர்மபிரபுக்கள்)

௩. திரைநட்சத்திர கோஷ்டிகள் (ரஜினி,கமல்,விஜயகாந்த்,சரத்குமார், விஜய்,அஜித்………..பெரிய பட்டியல், நடிகையருக்கு கோவில் கட்டும் தர்மவான்கள்)

௪. தமிழ் உணர்வாளர்கள் (இந்த பட்டியல் கொஞ்சம் குழப்பமானது…அவ்வளவு எளிது அல்ல…அரசாங்கதை சேர்ந்த மிதவாதிகள் (சுபவீரபாண்டியன்,கீ.வீரமணி…..) அரசாங்கத்தை எதிர்க்கும் தீவிரவாதிகள் (சீமான்,குளத்தூர் மணி, வினவு….))

௫. தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள் (இதுவும் பெரிய பட்டியல்…நகைச்சுவை என்னவென்றால் இவர்களும் தமிழர்கள் தான் அல்லது தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் – சோ, ஹிந்து ராம்,சுப்ரமணிய சுவாமி, தமிழ்நாடு காங்கிரசின் வஞ்சனை இல்லாமல் அனைத்து கோஷ்டிகளும் இதில் அடக்கம்)

௬. கூட்டணி கிடைக்காமல் அல்லல் படும் தமிழர்கள் (ப,மா.க கட்சியினர், தமிழ்நாடு கம்யுனிஸ்ட் கட்சியினர்…பெயரே கேட்டறியாத சிறு கட்சிகள் )

இப்படி பிரிந்து கிடக்கும் தமிழர்களை வைத்துக் கொண்டு நாமகெல்லாம் எவ்வளவு துணிச்சல் அயல் நாட்டை (ஈழம்) பற்றி பேசுவதற்கு…நம் ஊடகங்களும் நம்மை “தமிழன்” , “தமிழன்” என்று உசுப்பேத்தி, உசுப்பேத்தி ஈழத்தை ரணகளமாக்கிவிட்டனர்.

ஒரு இடைவெளி கொடுத்து சிறிது சிந்தியுங்கள்….எல்லாம் புரிய வரும்…

நான் சொல்வதெல்லாம் உண்மை…

எல்லோரையும் போல் நானும் பள்ளியில் படிக்கும் போது “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று கூட்டத்தோடு கூட்டமாக பாடியிருக்கிறேன்.

இன்றும் பல பள்ளிகளில் குழந்தை செல்வங்கள் நாம் புகுத்தும் பொய்யினை பாடிக் கொண்டிருப்பார்கள் வயது முதிரும் வரை நம்பிக் கொண்டிருப்பார்கள் உண்மையென்று.

வயது ஏற ஏற நாம் பள்ளிகளில் கற்ற பல விஷயங்கள் நடைமுறை வாழ்கையில் பின்பற்றப்படவில்லை என்கின்ற ஏமாற்றம் மற்றும் இயல்பாய் நம்மிடம் இருக்கும் சகிப்பு தன்மை நம்மை அறியமேலே நம்மை போலியானவர்களாய் மாற்றி விடுகிறது.

எழுதியவை எல்லாம் ஏட்டு படிப்புக்கு மட்டும் தான் என்கின்ற எண்ணத்தில் நாமும் தவறுகளை தாறுமாறக செய்ய ஆரம்பித்து விடுகிறோம். கொடுமை என்னவென்றால் நம்மை எப்படி ஏமாற்றினர்களோ அதே போல் நம் குழந்தைகளுக்கும் ஏமாற்றத்தை நாமே எந்த கூச்சமும் இன்றி விதைக்கின்றோம்.

இதையெல்லாம் யோசிக்கின்ற அளவிற்கு நம்முடைய நடைமுறை வாழ்கை நேரம் தருவதில்லை. இதை பற்றி யோசிக்க வேண்டியவர்களும் இந்த விசயங்களை தூக்கி எறிந்து விட்டு நாளைய அவர்களின் தலைமுறைக்கு பணம் பண்ணுவதில் குறியாய் இருகின்றனர்.

ஜாதியை தூக்கி எறிந்து விட்டு ஏழை பணக்காரன் என்கின்ற இரு நிலையை மட்டும் கணக்கில் கொண்டு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடோ அல்லது எந்த ஒரு உதவியையோ அரசாங்கங்கள் செய்ய முயற்சித்தால் அதுவே நாட்டிற்கு நலம் பயக்கும்… ப.மா.க நிறுவனர் ராமதாஸ் துடிப்பது போல் ஜாதிவாரி கணக்கெடுப்பு எல்லாம் ஒன்று ஜாதி பலத்தை நிருபிக்க உதவும் அல்லது நொடிந்த ஜாதிகளை எளிய வழியில் தேர்தல் விளையாட்டில் ஒதுக்கி வைக்க உதவும்…அதை தான் இவர்கள் சாதிக்க நினைக்கிறார்களா…

இன்றைய நிலைக்கு, என்ன இருந்தாலும் “நான் உயர்ந்த ஜாதி” என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் ஆங்கிலேயனிடம் அடிமைகளாய் இருந்த தங்கள் மூதாதையர்களை ஒரு நிமிடம் எண்ணி பார்த்துக் கொள்ளவேண்டும். அன்று உலகையே தன் இரும்பு கரங்களால் அடக்கி ஆண்டவன் இன்று அமெரிக்காவிற்கு கூஜா தூக்குகிறான்… கால சுழற்சியில் எத்தனையோ விஷயங்கள் மாற்றம் அடையும் போது தென் தமிழகத்தில் இன்றும் கடைபிடிக்கப்படும் தீண்டாமை எனும் கொடிய நோய்…சிறு வயதில் தமிழ்நாடு அரசின் பள்ளி புத்தகங்களில் நான் படித்த “தீண்டாமை பற்றிய பாடல்” இன்று நகைப்புக்கு உரிய விசயமாய் எனக்குப் படுகிறது. நான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பதையும் ஒரு வித வலியோடு உணர்கிறேன்.

சமுதாயத்திற்கு பிடித்த சாபம்… குஷ்பு…

September 17, 2010 by · 4 Comments
Filed under: அனுபவம் 

சிலருக்கு எப்போதுமே செய்திகளில் தன் பெயர் அடிபடவேண்டும் என்கின்ற அரிப்பு இருக்கும் அதற்கு நல்ல உதாரணம் குஷ்பூ.

அவர் என்று திரையுலகில் நுழைந்தாரோ அன்றிலிருந்து இன்று வரை எதாவது ஒரு செய்திகளில் அடிபடுகிறார்… ஆரம்பத்தில் இருந்த அப்பாவித்தனம் குறைந்து என்ன செய்கிறோம் என்று கூட தெரியாத அளவிருக்கு அவரது ஆசை அலையவிட்டிருக்கிறது.

மந்திராபேடிக்கு பிறகு இவருடைய ஆடை அலங்காரங்கள் தான் சென்னை போன்ற பெருநகரங்களில் பேச்சாக இருக்கிறது. நான் இவரை விமர்சிப்பதை வைத்து ஆணாதிக்கவாதி என்று எண்ணாதீர்கள். எத்தனையோ பெண்கள் படு மோசமாக ஆடைகளை உடுத்திக் கொண்டு உலா வந்தாலும் அது பெரிய அளவில் பேசப்படாது ஆனால் பிரபலமான ஒருவர் சிறிய அளவில் எதை செய்தாலும் அது பெரிதாக ஊடகங்களில் செய்தியாகிவிடும் இது ஒரு சிறிய விஷயம் இது கூடவா குஷ்பூவிற்கு தெரியாது.

எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று நீங்கள் நினைப்பதை உணர்கிறேன் ஆனால் கடந்த பல வருடங்களாய் சத்தமாய் யாரிடமாவது கொட்டவேண்டும் என்று சேகரித்த விசயங்களில் இதுவும் ஒன்று.

இவர் ஜாக்பாட் என்றொரு நிகழ்ச்சியை நடத்தினார்… என் அகன்ற தொலைகாட்சி பெட்டியில் இந்த நிகழ்ச்சியை ஏன் பார்க்கிறோம் என்று நினைக்கும் அளவிற்கு இல்லாத கவர்ச்சியை பகிரங்க படுத்தி நிகழ்ச்சியின் தன்மையை கேள்விக்குறியாக்கினார்.

கலை சேவை முடித்து இப்போது மக்கள் சேவை செய்ய அரசியலில் நுழைந்துள்ளார்…தமிழர்களின் கலாச்சாரத்தில் புகுந்து கரைகண்டவர் என்ன செய்தால் பிரச்னையை குறைக்கலாம் என்று யோசிக்காமல் பிரச்சனையின் ஆரம்ப மையமாக இருந்து கொண்டிருக்கிறார்.

ஏதோ தென் இந்தியாவில் தான் கொஞ்சமேனும் தாலிக்கு சிறு மரியாதை இருக்கிறது அதையும் விளையாட்டுப் பொருளாக்கி ஒரு புது பிரச்சனைக்கு வழி செய்கிறார்.

இன்னும் என்ன என்ன கண்றாவிகளை எல்லாம் காணவேண்டுமோ….

நித்தியானந்த…தேவநாதன்… கள்ள காதலுக்காக தன் மகளுக்கே சூடு வைத்த தாய்…இரவில் தனித்து வந்த பெண்ணை கற்பழித்து அவள் குழந்தையை முட்புதரில் வீசிய காம மிருகங்கள்…சிறுபான்மையினரை கொன்று குவித்துவிட்டு ஐக்கிய நாட்டு சபைக்கு சிறிதும் அஞ்சாமல் சென்றிருக்கும் கொலைகாரன்… இதில் குஷ்பூ என்கிற சிறு தொல்லை வேறு…சமுதாயத்திற்கு பிடித்த சாபம்…

என்னடா சமுதாயத்தில் இது மட்டும் தான் நடக்கிறதா…நல்ல விசயங்களே இல்லையா என்றால்…நடக்கிறது…ஆனால் அதிகப்படியாய் ஊடகங்கள் பரப்புவது இது போன்ற விஷயங்களை தான். ஒன்று செய்பவர்கள் திருந்த வேண்டும் அல்லது ஊடகங்கள் இந்த நிகழ்வுகளை புறக்கணிக்க வேண்டும்…அப்படி எதுவும் நடக்கப்போவது இல்லை.

என்னங்க ஆச்சு குஷ்பூ கோவில்…வாழ்க தமிழ்நாடு…

இதயமே… இதயமே…

நான் பார்த்த படங்களில் இன்று வரை நினைவில் நிற்கும் ஒரு படம் இதயம். முரளி இறந்த விஷயம் அறிந்ததும் சில நிமிடங்கள் என்னை அறியாமல் ஒரு சோகம் அப்பிக் கொண்டது. அன்றைய கால கட்டத்தில் சென்னையில் இருந்த முக்கால்வாசி மனிதர்கள் தென் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தான் இப்பொழுதும் அப்படி தான் என்று நினைக்கிறேன். குறிப்பாக படிப்பதற்கு என்று வரும் இளைஞர்களின் சங்கடங்களை அவர்களின் அப்பாவி தனங்களை இதயம் படத்தில் இயக்குனர் கதிர் மிக அற்புதமாக முரளியின் ரூபத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.

என் நண்பர்கள் பலரை முரளியின் வடிவத்தில் அந்த படத்தில் பார்த்தேன். தாழ்வு மனப்பான்மையில் காதலை மனதிற்குள் சமாதி எழுப்பிக் கொண்டிருந்த பல நண்பர்களை என் கண் முன்னே பார்த்திருக்கிறேன் அதனால் தான் இந்த படம் என்னுள் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன்.

இளையராஜாவின் இதமான இசையில் பாடல்கள் இன்று கேட்ட போது கூட மனதில் சாரல் அடித்தது. குறிப்பாக ஜேசுதாஸ் அவர்களின் குரலில் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா” பாடல் மனதை ஏதோ செய்தது. இந்த பாடல் என் கணிபொறி மையத்தின் கலாச்சார விழாவில் பல பேர் மத்தியில் எந்த வித அச்சமும் இன்றி முதலும் கடைசியுமாக ஒரு மேடையில் பாடிய அனுபவத்தை பெற்றுத்தந்தது.

முரளியின் நடிப்பில் இந்த படம் ஒரு மைல் கல்…இந்த படத்திற்கு பிறகு வந்த பல படங்களில் அவர் நடிப்பில் இதயம் படத்தின் தாக்கத்தை தவிர்க்க முடியவில்லை. தமிழ் படங்களை பற்றி நடிகை ஹீராவிற்கு யாரும் சரியாக வழி காட்டவில்லை என்று நினைக்கிறேன். இந்த படத்தில் கிடைத்த நற்பெயரை மிக எளிதாக வீணடித்துக் கொண்டார்.

அந்த படத்தின் கதாபத்திரம் தான் அவர் நடித்த கடைசி படத்திலும் நகைச்சுவைக்காக அமைந்ததை என்னவென்று எடுத்துக் கொள்வது.

காலத்திற்கு ஒரு மணம் இருக்கும்…ஒவ்வொரு இனிய தருணங்களும் ஏதாவது ஒரு பாடல் அல்லது ஒரு படத்தின் தாக்கம் நிறைந்திருக்கும்…மற்றவர்களுக்கு எப்படியோ என் வாழ்க்கையின் பல கால கட்டங்கள் இப்படி தான் என் நினைவுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த படமும் அப்படி தான்… நான் அடிக்கடி பின்னோக்கி பயணிக்கும் பல இனிய தருணங்களில் இந்த படம் பிணைத்திருக்கும் சில இனிய நிகழ்வுகள் தொலை தூரம் கேட்கும் புல்லாங்குழல் இசையாய் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த பதிவை நான் எழுதி இருக்காவிட்டால் என் வாழ்கையில் நான் அனுபவித்த சில மணி நேர சந்தோசத்தை பகிர்ந்த மனிதர்களுக்கு செய்திருக்கும் துரோகமாய் இருந்திருக்கும். நடிகர் முரளி இறந்த இந்த காலப் பொழுதில் மீண்டும் ஒரு முறை பின்னோக்கி பயணித்தேன்…அவர் இறந்ததை நம்ப சற்று சிரமமாக தான் இருக்கிறது.

காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 11

September 10, 2010 by · Leave a Comment
Filed under: தொடர்கதை 


காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 01
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 02
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 03
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 04
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 05
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 06
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 07
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 08
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 09
காதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 10

கைபேசி வந்தவுடன் கூட்டாளிகளுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதை வாங்கினோம். ஓவ்வொன்றும் செங்கல் அளவு அழைப்பு வந்தாலும் இல்லை அழைப்பு கொடுத்தாலும் பணம் தண்ணீராய் செலவாகும்…இருந்தாலும் என்ன பிரச்சினை வெட்டி பந்தா அல்லவா முக்கியம்.

அந்த சமயம் பார்த்து என் கூட்டாளிகளில் ஒருவன் அவன் நண்பனை அறிமுகம் செய்தான். வாரத்தின் இறுதி தினங்களில் அந்த நண்பனின் வீட்டில் தான் கழிப்போம். ஒரு முறை நண்பனின் வீட்டு ஜன்னலோரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது எங்கேயோ பார்த்து பழகிய முகம் தூரத்தில் நிழலாடியது. மிக விரைவாக வந்த ஸ்கூட்டி வண்டியில் அவள் தான் அந்த வீட்டை கடந்து சென்றால், நான் சற்று சுதாரிப்பதற்குள் சிட்டாக பறந்து விட்டால்.

அந்த நொடியில் பிடித்த படபடப்பு அவளை அலைந்து தவித்து சந்திக்கும் வரை இருந்தது. ஒரு வேளை அவளை அந்த தினம் பார்த்திருக்காவிட்டால்…அவள் என் நினைவுக்குள் அமிழ்ந்திருப்பாள் என்று நினைக்கிறேன்.

அவள் கொடுத்த விலாசத்தை பல தடைகளை கடந்து கண்டுபிடிக்க முழுதாய் இரண்டு நாட்கள் பிடித்தது…என் நெருங்கிய நண்பனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். எனக்காக அவனும் நாயாய் பேயாய் அலைந்தான். சென்னை நகரத்தின் முகவரிகள் அப்படி…யாரும் எந்த விலாசத்தையும் எளிதாக கண்டுபிடிக்க கூடாது என்ற நோக்கத்துடனே சென்னை மாநகராட்சி, நகரத்தின் வரைபடங்களை தயாரித்திருப்பார்கள் போல்.

ஒரு வழியாய் ஒரு சுப யோக சுப தினத்தில் அவளை சந்தித்தேன்…அன்று வரை இல்லாத புது மணம் காற்றில் நிரம்பி வழிந்தது. எந்த கடுமையான விசயங்களுக்கும் என் முன்கோபம் எட்டிப் பார்க்கவில்லை. நொடிகள்…நிமிடங்கள்…நேரங்கள் எங்கும் இன்பம் மட்டுமே ததும்பி வழிந்தது. பல மாத இடைவெளிக்கு பிறகு நடந்த முதல் சந்திப்பு…அவளுக்கு எப்படி இருந்தது என்று தெரியவில்லை ஆனால் எனக்கு, புது மனிதனாய் பிறந்தது போல் இருந்தது. அந்த சந்திப்பில் நடந்த மிக முக்கிய விஷயம் என் கைபேசியின் எண்னை அவள் குறித்துக் கொண்டது தான்.

தொடரும்…

தடையை விலக்கியதற்கு நன்றி… இன்ட்லி!!!

என் பதிவுகளை தடை செய்வதற்கு முன் எனக்கு ஒரு அறிவிப்பு கடிதம் அனுப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்…எனினும் நன்றி.

நடந்தது இது தான்…இனியதமிழ் திரட்டியின் சில பதிவுகளை நண்பர் ஒருவர் இன்ட்லியில் இணைத்துள்ளார் அந்த தளமும் என் பதிவு தளமும் ஒரே சேவை(striveblue.com) மையத்தால் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதால் மொத்தமாக அந்த முகவரியையே இன்ட்லி தடை செய்துள்ளது. நான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதி தெரிந்து கொண்ட விஷயம் இது.

அந்த மின்சார வண்டியினில்…

September 8, 2010 by · Leave a Comment
Filed under: கவிதை 


நெருங்கி வரும்
நெடிய சாலைகள்…
விழி மூடி
திறக்கும்
முன்னே…
சிதறிய சூரிய வெளிச்சம்….
ஒட்டி விலகும்
சாலையோர மரங்கள்…
தாலாட்டு பாடும்
மின்சார வண்டியின்
அசைவு…
மெல்லிய காற்றாய்
வந்து போகும்
கடந்த கால
இனிய நினைவுகள்…
நம் காதல்
நாடகங்கள்
ஒவ்வொன்றாய்
மனதிற்குல்
அரங்கேற…
என் இதழோரம்
கள்ளச் சிரிப்பு …
நான் எழுதிய
வரிகளை
நீ படித்தாய்…
கவிதையே!!!
கரைந்து விட்டேன்
இனி
அடிக்கடி பயணிப்பேன்
அந்த மின்சார வண்டியினில்
உன் நினைவுகள்
அங்கு தான்
உலவிக்
கொண்டிருக்கும்
என் கவிதை
வாகனத்தில்…

சிந்துசமவெளி – இது நாகரீகமா ?

சில நாட்களாக செய்திகளில் அடிபடும் சிந்துசமவெளி படத்தை பற்றி அரசால் புரசலாக வெளிவரும் அந்த படத்தின் கதை கொஞ்சம் அதிரவைக்கிறது. மனித உறவுகள், அதன் பரிணாம வளர்ச்சியே இன்று விலங்குகளிடம் இருந்து நம்மை பிரித்து காட்டுகிறது.

ஓரிரு கயமைத்தனமான ஆண்கள் முறை தவறி நடப்பதை திருத்துவதாக சொல்லி முழு சமுதயத்தை அதிர வைக்கும் இது போன்ற படங்கள் உண்மையில் தேவையா என்கின்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. திரைப்பட கண்ணோட்டத்தில் இதை ஒரு தைரியமான முயற்சி என்று ஒரு கூட்டம் ஆதரிக்கவும் முயற்சிக்கலாம்…ஆனால் இதை போன்ற படங்கள் சமுதாயத்தில் என்ன விதமான அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பது எளிதாக அனுமானிக்க முடியாது.

எவ்வளவோ விஷயங்கள் திருத்துவதற்கு இருக்கும் பொழுது அவ்வளவு எளிதாக நடக்க முடியாத விஷயத்தை விஷம் போல் சமுதாயத்தில் தெளிக்க நினைக்கும் இயக்குனரை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

என்ன தான் இயக்குனர் இந்த கதைக்கு சப்பை கட்டு கட்டினாலும் இது போன்ற படங்களை ஏற்க நம் மனநிலை ஒத்து கொள்வதில்லை.

இணையத்தில் கிடைத்த அந்த படத்தின் கதை இது தான் “இளம் காதல் ஜோடி திருமணத்திற்குப்பின் திடீர் என ஒரு கட்டத்தில் நாயகன் ஹரீஸ் காணாமல் போகிறார்.அவர் என்ன ஆனார்?உயிருடன் உள்ளாரா ,இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில் நாயகி அனகா மாமனார் (ராணுவ மேஜர் ரிட்டயர்டு) உடன் தொடர்பு ஏற்படுகிறது.திடீர் என காணாமல் போனதாகக்கருதபட்ட நாயகன் வருகிறான்.இப்போது நாயகியின் நிலை என்ன?யாருடன் ஜோடி சேர்கிறாள்?மாமனாருக்கு கிடைத்த தண்டனை என்ன?”

மனித மனங்களை விகாரமாக்கும் இது போன்ற படங்கள் நிச்சயம் புறக்கணிக்கப்படவேண்டும் என்பதே என் ஆவல்.