அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

03 Sep

சிந்துசமவெளி – இது நாகரீகமா ?

Posted in திரைப்படம், திரைவிமர்சனம் on 03.09.10

சில நாட்களாக செய்திகளில் அடிபடும் சிந்துசமவெளி படத்தை பற்றி அரசால் புரசலாக வெளிவரும் அந்த படத்தின் கதை கொஞ்சம் அதிரவைக்கிறது. மனித உறவுகள், அதன் பரிணாம வளர்ச்சியே இன்று விலங்குகளிடம் இருந்து நம்மை பிரித்து காட்டுகிறது.

ஓரிரு கயமைத்தனமான ஆண்கள் முறை தவறி நடப்பதை திருத்துவதாக சொல்லி முழு சமுதயத்தை அதிர வைக்கும் இது போன்ற படங்கள் உண்மையில் தேவையா என்கின்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. திரைப்பட கண்ணோட்டத்தில் இதை ஒரு தைரியமான முயற்சி என்று ஒரு கூட்டம் ஆதரிக்கவும் முயற்சிக்கலாம்…ஆனால் இதை போன்ற படங்கள் சமுதாயத்தில் என்ன விதமான அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பது எளிதாக அனுமானிக்க முடியாது.

எவ்வளவோ விஷயங்கள் திருத்துவதற்கு இருக்கும் பொழுது அவ்வளவு எளிதாக நடக்க முடியாத விஷயத்தை விஷம் போல் சமுதாயத்தில் தெளிக்க நினைக்கும் இயக்குனரை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

என்ன தான் இயக்குனர் இந்த கதைக்கு சப்பை கட்டு கட்டினாலும் இது போன்ற படங்களை ஏற்க நம் மனநிலை ஒத்து கொள்வதில்லை.

இணையத்தில் கிடைத்த அந்த படத்தின் கதை இது தான் “இளம் காதல் ஜோடி திருமணத்திற்குப்பின் திடீர் என ஒரு கட்டத்தில் நாயகன் ஹரீஸ் காணாமல் போகிறார்.அவர் என்ன ஆனார்?உயிருடன் உள்ளாரா ,இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில் நாயகி அனகா மாமனார் (ராணுவ மேஜர் ரிட்டயர்டு) உடன் தொடர்பு ஏற்படுகிறது.திடீர் என காணாமல் போனதாகக்கருதபட்ட நாயகன் வருகிறான்.இப்போது நாயகியின் நிலை என்ன?யாருடன் ஜோடி சேர்கிறாள்?மாமனாருக்கு கிடைத்த தண்டனை என்ன?”

மனித மனங்களை விகாரமாக்கும் இது போன்ற படங்கள் நிச்சயம் புறக்கணிக்கப்படவேண்டும் என்பதே என் ஆவல்.


tags: ,

View Comments

  • Robin

    //மனித மனங்களை விகாரமாக்கும் இது போன்ற படங்கள் நிச்சயம் புறக்கணிக்கப்படவேண்டும் என்பதே என் ஆவல்.// Agreed

  • ananthi

    படம் இன்னும் பார்க்கலை..ஆனால் கேள்விபட்டேன்..உங்க ஆதங்கம் ரொம்ப சரி..கலாச்சார சீர்கேட்டில் இந்த மாதிரி படங்களும் காரணம் தான்.கூட கொஞ்சம் தூண்டி விடுறமாதிரி..i hate some bloody creaters(எப்புடி இங்கயும் blood வந்துருச்சா ??)

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker