நான் சொல்வதெல்லாம் உண்மை…
இன்றும் பல பள்ளிகளில் குழந்தை செல்வங்கள் நாம் புகுத்தும் பொய்யினை பாடிக் கொண்டிருப்பார்கள் வயது முதிரும் வரை நம்பிக் கொண்டிருப்பார்கள் உண்மையென்று.
வயது ஏற ஏற நாம் பள்ளிகளில் கற்ற பல விஷயங்கள் நடைமுறை வாழ்கையில் பின்பற்றப்படவில்லை என்கின்ற ஏமாற்றம் மற்றும் இயல்பாய் நம்மிடம் இருக்கும் சகிப்பு தன்மை நம்மை அறியமேலே நம்மை போலியானவர்களாய் மாற்றி விடுகிறது.
எழுதியவை எல்லாம் ஏட்டு படிப்புக்கு மட்டும் தான் என்கின்ற எண்ணத்தில் நாமும் தவறுகளை தாறுமாறக செய்ய ஆரம்பித்து விடுகிறோம். கொடுமை என்னவென்றால் நம்மை எப்படி ஏமாற்றினர்களோ அதே போல் நம் குழந்தைகளுக்கும் ஏமாற்றத்தை நாமே எந்த கூச்சமும் இன்றி விதைக்கின்றோம்.
இதையெல்லாம் யோசிக்கின்ற அளவிற்கு நம்முடைய நடைமுறை வாழ்கை நேரம் தருவதில்லை. இதை பற்றி யோசிக்க வேண்டியவர்களும் இந்த விசயங்களை தூக்கி எறிந்து விட்டு நாளைய அவர்களின் தலைமுறைக்கு பணம் பண்ணுவதில் குறியாய் இருகின்றனர்.
ஜாதியை தூக்கி எறிந்து விட்டு ஏழை பணக்காரன் என்கின்ற இரு நிலையை மட்டும் கணக்கில் கொண்டு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடோ அல்லது எந்த ஒரு உதவியையோ அரசாங்கங்கள் செய்ய முயற்சித்தால் அதுவே நாட்டிற்கு நலம் பயக்கும்… ப.மா.க நிறுவனர் ராமதாஸ் துடிப்பது போல் ஜாதிவாரி கணக்கெடுப்பு எல்லாம் ஒன்று ஜாதி பலத்தை நிருபிக்க உதவும் அல்லது நொடிந்த ஜாதிகளை எளிய வழியில் தேர்தல் விளையாட்டில் ஒதுக்கி வைக்க உதவும்…அதை தான் இவர்கள் சாதிக்க நினைக்கிறார்களா…
இன்றைய நிலைக்கு, என்ன இருந்தாலும் “நான் உயர்ந்த ஜாதி” என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் ஆங்கிலேயனிடம் அடிமைகளாய் இருந்த தங்கள் மூதாதையர்களை ஒரு நிமிடம் எண்ணி பார்த்துக் கொள்ளவேண்டும். அன்று உலகையே தன் இரும்பு கரங்களால் அடக்கி ஆண்டவன் இன்று அமெரிக்காவிற்கு கூஜா தூக்குகிறான்… கால சுழற்சியில் எத்தனையோ விஷயங்கள் மாற்றம் அடையும் போது தென் தமிழகத்தில் இன்றும் கடைபிடிக்கப்படும் தீண்டாமை எனும் கொடிய நோய்…சிறு வயதில் தமிழ்நாடு அரசின் பள்ளி புத்தகங்களில் நான் படித்த “தீண்டாமை பற்றிய பாடல்” இன்று நகைப்புக்கு உரிய விசயமாய் எனக்குப் படுகிறது. நான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பதையும் ஒரு வித வலியோடு உணர்கிறேன்.
Comments
-
Mugilan

![thanni_kudekkum_thalit[1]](http://i2.wp.com/www.striveblue.com/tawp/wp-content/uploads/2010/09/thanni_kudekkum_thalit1.jpg?resize=296%2C300)


