அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

13 Nov

இனம் இனத்தோடு சேராது…

Posted in அரசியல் on 13.11.10

sonia-karunanidhi

“ஈழ தமிழர்களின் தாயக விளங்கும் சோனியா காந்தி”  நம்ம காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சொன்ன தங்கத்தில் பொறிக்கப்படவேண்டிய வார்த்தைகள், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

“மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கஆரம்பித்தால் ஒரு அமைச்சர் கூட உருப்படியாக வேலை பார்க்க முடியாது” திமுக தலைவர் கருணாநிதி உதிர்த்த வார்த்தைகள் இவைகள் இவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் யாரும் ஒழுங்கில்லை அவர்களையும் சேர்த்து, மத்திய அரசாங்கத்தை சேர்ந்த  அதிகாரியின் அறிக்கையை பொருட்படுத்த தேவையில்லை என்பவர் மாநில அரசாங்க அதிகாரிகளை எந்த விதம் நடத்துவார் என்பது சொல்ல தேவையில்லை.

“யாழ்ப்பாணம்(நாவட்குழி) பகுதியில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த நூற்றுக்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை அவர்களின் வீடுகளிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தது சிங்கள ராணுவம். நேற்று காலை முதல் அந்த இடங்களில் சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன” இந்த செய்தி நிச்சயம் படிக்கும் யாரையும் எந்த வித உணர்வுகளையும் எழுப்பப் போவது இல்லை, ஏனெனில் சிங்களவன் ஈழத்தமிழன் பிரச்னை அடுத்த நாட்டு பிரச்னை அதில் தலையிட ஏகா திபத்தியவாதிகள் சோனியா,மன்மோகன் சிங்,பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு மட்டுமே உரிமை சீட்டை தமிழக ஆளும் அரசாங்கம் கொடுத்துள்ளது. தமிழர்களின் நினைவுகளை பல திரைகளை போட்டு ஆட்டிவைக்கும் கருணாநிதியின் இனமான குடும்பம் இரக்கப்பட கூட ஈழ செய்திகளை இங்கு விடுவதில்லை.

உலகெங்கும் வாழும் தமிழர்களை பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. பல தேசங்களில் தமிழர்கள் அரக்க பரக்க போர்குற்றத்தை பற்றி பேசினால் இவர்களோ வாய் திறப்பது இல்லை…வாய் திறப்பவர்களையும் சும்மா விடுவதில்லை.

சோனியா – கருணாநிதி கூட்டணியால் இருவரும் அடைத்த லாபங்கள் கொஞ்ச நஞ்சமில்லை…தமிழர்கள் இழந்தவைகளை பட்டியலிட்டால் இந்த பதிவு போதாது…இலவசங்களை கொடுத்து தமிழக தமிழனை பிச்சைக்காரர்களாகி விட்டனர்….ஈழத்தமிழர்களை பரதேசியாக்கிவிட்டனர்…

எனக்கு தெரிந்து காங்கிரஸ் – திமுக கூட்டணி தமிழர்களை ஆளும் தகுதியை இழந்துவிட்டது.


tags:

View Comments

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker