இது ரொம்ப லேட்டு… வெற்றி தமிழருக்கு தோல்வியே!!!
ரொம்ப (எழுதப்பட்ட தேதியை வைத்து)பழைய பதிவு….இது தாங்க சோம்பேரித்தனம்….ஆனா விஷயம் இன்னைக்கு எழுதின மாதிரி தான் இருக்குது…
ஒரு வழியாய் தமிழக தேர்தல் முடிந்தது…மிச்சமிருப்பது அரசியல்வாதிகளின் வெற்றியே…கூட்டணி அமைந்த போதே தமிழர்களின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. கருணாநிதியும்,ஜெயலலிதாவும் மாறி மாறிக் கொள்ளையடிக்கும் வங்கியாகி போனது தமிழ்நாடு…மீனவனை காப்பாற்ற துப்பில்லை…தடையில்லா மின்சாரம் கொடுக்க துப்பில்லை…விலைவாசியை கட்டுபடுத்த துப்பில்லை… ஆனால் கழக ஆட்சி மட்டும் மீண்டும் மீண்டும் வேண்டும்.
பயங்கரவாதிகள் என்ற பெயரால் இலங்கையில் கொலைசெய்யப்பட்ட பல லட்சம் தமிழர்கள்…மனித உரிமை கொடி தூக்கும் ஐக்கிய நாட்டு சபையின் குள்ளநரித்தனம் அதன் நிபுணர் குழு அறிக்கையில் பட்டவர்த்தனமாகிவிட்டது. கொலைகாரன் கையிலே புலன்விசாரணை…என்ன ஒரு அநியாயம்… கோடி தமிழனை விட கோடி சிங்களவனை தூக்கி பிடிக்கும் இந்திய ராசதந்திரம்…அதில் அடங்கிய கருணாநிதியின் தமிழின உணர்வு… கொள்ளைக்காரனும்,கொள்ளைக்ககாரியும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வர தமிழன் ஒரு முட்டாளோ என்கின்ற நிலை தான் மேலெழுகிறது.
ரொம்ப ஆவேசமா எழுத ஆரம்பித்த பதிவு….இப்படி மொக்கையாய் போய்டுச்சு….என்ன செய்வது…
இனம் இனத்தோடு சேராது…
“ஈழ தமிழர்களின் தாயக விளங்கும் சோனியா காந்தி” நம்ம காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சொன்ன தங்கத்தில் பொறிக்கப்படவேண்டிய வார்த்தைகள், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் எப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.
“மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கஆரம்பித்தால் ஒரு அமைச்சர் கூட உருப்படியாக வேலை பார்க்க முடியாது” திமுக தலைவர் கருணாநிதி உதிர்த்த வார்த்தைகள் இவைகள் இவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் யாரும் ஒழுங்கில்லை அவர்களையும் சேர்த்து, மத்திய அரசாங்கத்தை சேர்ந்த அதிகாரியின் அறிக்கையை பொருட்படுத்த தேவையில்லை என்பவர் மாநில அரசாங்க அதிகாரிகளை எந்த விதம் நடத்துவார் என்பது சொல்ல தேவையில்லை.
“யாழ்ப்பாணம்(நாவட்குழி) பகுதியில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த நூற்றுக்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை அவர்களின் வீடுகளிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தது சிங்கள ராணுவம். நேற்று காலை முதல் அந்த இடங்களில் சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன” இந்த செய்தி நிச்சயம் படிக்கும் யாரையும் எந்த வித உணர்வுகளையும் எழுப்பப் போவது இல்லை, ஏனெனில் சிங்களவன் ஈழத்தமிழன் பிரச்னை அடுத்த நாட்டு பிரச்னை அதில் தலையிட ஏகா திபத்தியவாதிகள் சோனியா,மன்மோகன் சிங்,பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு மட்டுமே உரிமை சீட்டை தமிழக ஆளும் அரசாங்கம் கொடுத்துள்ளது. தமிழர்களின் நினைவுகளை பல திரைகளை போட்டு ஆட்டிவைக்கும் கருணாநிதியின் இனமான குடும்பம் இரக்கப்பட கூட ஈழ செய்திகளை இங்கு விடுவதில்லை.
உலகெங்கும் வாழும் தமிழர்களை பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. பல தேசங்களில் தமிழர்கள் அரக்க பரக்க போர்குற்றத்தை பற்றி பேசினால் இவர்களோ வாய் திறப்பது இல்லை…வாய் திறப்பவர்களையும் சும்மா விடுவதில்லை.
சோனியா – கருணாநிதி கூட்டணியால் இருவரும் அடைத்த லாபங்கள் கொஞ்ச நஞ்சமில்லை…தமிழர்கள் இழந்தவைகளை பட்டியலிட்டால் இந்த பதிவு போதாது…இலவசங்களை கொடுத்து தமிழக தமிழனை பிச்சைக்காரர்களாகி விட்டனர்….ஈழத்தமிழர்களை பரதேசியாக்கிவிட்டனர்…
எனக்கு தெரிந்து காங்கிரஸ் – திமுக கூட்டணி தமிழர்களை ஆளும் தகுதியை இழந்துவிட்டது.
நைந்துபோன நினைவுகள்
கடந்த சில மாதங்கள் எந்திரன் செய்திகளில் கரைந்தது…தமிழர் இணையத்தில் இறைந்து கிடந்த பல செய்திகளில் எந்திரனே நிரம்பி வழிந்தது. நானும் அதை பற்றி ஒரு பதிவை எழுதினேன்…சலித்து விட்டது…மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நாம் நம் நினைவுகளை இழந்து மிதந்து கொண்டிருக்கிறோம்… சமீபத்தில் வந்த “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வந்த பாடலை போல் (“தமிழர் காணும் துயரம் கண்டு…தலையை சுற்றும் கோளே அழாதே” ) தான் உள்ளது தமிழர்கள் நிலை. சாட்சி இல்லாமல் தமிழர்களை கொன்று குவித்தவனை ரத்தினக்கம்பளம் கொடுத்து வரவேற்று தமிழர்கள் தான் அனாதைகள் சிங்களவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் திமிர்தனத்தை என்னவென்று சொல்வது.
ஒரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவனை அந்த நாட்டின் பிரதம மந்திரியே மரியாதை செய்து விருந்து கொடுப்பது எங்கும் காணாத அநியாயம்…தமிழனாய் இருந்தால் இதையும் நாம் கண்டு கொள்ளக்கூடாது.

இவர்களுக்கு என்ன பாவம் செய்தார்கள் தமிழர்கள்…ஏன் இப்படி சிறுமைபடுத்துகின்றனர் கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை அது.
ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த அசினுக்கு எதிராக பல இயக்கங்கள் களம் இறங்கின…அவருக்கு பாதுகாப்பை கொடுத்து பூ போல காப்பற்றி அனுப்பி வைத்தார் நமது இளைய தளபதி…இனி மும்பையில் இருந்து அறிக்கைகள் பறக்கும் தமிழனாய் இருந்தால் இதையும் நாம் கண்டு கொள்ளக்கூடாது…
எனக்கு ஒன்று புரியவில்லை… சுப்ரமணிய சுவாமி என்கின்ற ஒரு அரசியல்வாதி அவருக்கு என்ன பிரச்னை… அந்த அரசியல்வாதியால் தமிழகத்திற்கோ அல்லது தமிழர்களுக்கோ எந்த ஒரு நன்மையையும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை. மதுரையில் இட்லிக் கடையை திறந்ததை வேண்டுமானால் பெரிய நன்மையாக அந்த கடைக்காரர் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பக்கம் இலங்கை அரசு விடுதலைபுலிகள் அழிந்துவிட்டனர் என்கிறது இந்த அரசியல்வாதியோ முண்டாவை தட்டுகிறார் விடுதலைப்புலிகளின் மீதான தடையை விலக்குவதற்கு. அவரும் மற்றும் அவர் நண்பர்களான ஹிந்து ராம்,துக்ளக் சோ,கருணாநிதி,தமிழ்நாடு காங்கிரஸ் அல்லக்கைகள் நினைத்தது போல் விடுதலைப்புலிகள் அழிந்து பல லட்சம் தமிழர்கள் மண்டுவிட்டனர்…ஆனால் இந்த இரக்கமற்ற ஜென்மங்களுக்கு மட்டும் இன்னும் என்ன வேண்டும் என்று தெரியவில்லை.
அ.தி.மு.க எழுந்திரு…விழித்திரு….
தமிழகம் கருணாநிதி குடும்பத்தின் இரும்பு பிடிக்குள் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க எனும் எதிர்கட்சி சற்றும் அசராமல் காங்கிரசை தன் பக்கம் இழுத்து திமுகவை ஆட்டம் காண வைத்திருக்க வேண்டும் ஆனால் இவர்கள் செய்தது என்ன…நான்கு வருடம் அதிமுகவினருக்கு ஓய்வு கொடுத்து விட்டு இன்று தேர்தல் சமயத்தில் அரசியல் சதுரங்கத்தில் காய்களை வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
பலமில்லாத எதிர்கட்சியின் ஆர்பாட்டங்களை எந்த பிரச்சனையையும் இல்லாமல் அறிக்கை மூலமே சமாளித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
தமிழக ஒட்டு வங்கியை பொறுத்தவரை திமுக அல்லது அதிமுகவை பின் தள்ளுவது என்பது நடவாத காரியம் ஆனால் வரிசையாக இருமுறை ஆட்சியை இழந்த கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்றில்லாமல் எல்லா தொண்டர்களுக்கும் ஓய்வு கொடுத்து விட்டு ஒரு பெரும்பான்மை இல்லாத கட்சி தமிழகத்தையே தன் குடும்ப பிடிக்குள் கொண்டு செல்லும் அளவிற்கு விட்டுவிட்டனர்.
திமுகவிற்கு அதிமுக சளைத்தவர்கள் இல்லை தான் ஆனால் ஒரு வலு இல்லாத எதிர்கட்சியினால் அரசாங்கத்தின் எதோச்சதிகாரம் எந்த அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு கருணாநிதியின் ஆட்சி ஒரு நல்ல உதாரணம்…
இன்றைய தமிழகத்தின் நிலை என்ன…கருணாநிதி குடும்பத்தினர்கள் மனது வைத்தால் தான் எந்த ஒரு விசயத்தையும் பார்கவோ,படிக்கவோ,கேட்கவோ முடியும் என்பதே நிஜம்….தேவையில்லாத பல செய்திகள் திணிக்கப்படுகின்றன… தேவையுள்ள பல விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. அரசியல்,பத்திரிகை,திரைப்படம்,கலாச்சார விழாக்கள் என்று அவர்கள் கரங்கள் நீளாத இடமே இல்லை எனலாம்.
அந்த காலத்தில் வாழ்ந்த அரசர்களுக்கு நிகராக கோலோச்சுகிறார் கருணாநிதி தன் குடும்ப பரிவாரங்களுடன்…இதற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்க அதிமுக என்ற மாற்று கத்தியை விட வேறு வழி இல்லை நமக்கு…அதற்காவது அதிமுக…எழுந்திரு…விழித்திரு….
அயோத்தி….இலங்கை…காங்கிரஸ்…
இதை எழுத ஆரம்பிக்கும் போதே உள்ளுணர்வு கவனம் கவனம் என்று இருமுறை என் சிந்தனைகளை மிரட்டியது. எல்லா மதங்களும் கருணையை மட்டும் போதித்து மனிதர்களை மிருகங்களாய் மாற்றி வைத்துள்ளது இது எப்படி சாத்தியம்… மனிதர்கள் என்ன அன்னப்பறவையா கெட்டவைகளை ஒதுக்கி விட்டு நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்வதற்கு.
ஏதோ ஒரு பதிவில் படித்ததாக ஞாபகம் “ராமன் தன் மனைவி ஒருத்தியை காப்பாற்றுவதற்காக பல்லாயிரம் உயிர்களை களையெடுத்தான் எப்படி அவன் கடவுளின் அவதாரம் ஆவான்” என்று கேள்வி எழுப்பி இருந்தார் அந்த பதிவர். இது போன்று பல கருத்துகள் உலவினாலும் இவை எல்லாம் தனிப்பட்ட கருத்துக்களே. விவாதத்தினால் ஒரு உண்மையான கருத்தை பொய்யாகவோ இல்லை ஒரு பொய்யை உண்மையாகவோ மாற்ற முடியும்…அந்த சக்தி விவாதிப்பவரின் பேச்சு திறமையை பொறுத்து…ஆகையால் அயோத்தி விசயத்தை விவாதிப்பதால் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை.
உதிரிகளாய் இருந்தாலும் நல்ல எதிர்கட்சிகளாய் இருந்த பல கட்சிகளை அழித்து பா.ஜா.க கட்சி உருவானது…இதே அயோத்தி பிரச்சனையை கையில் எடுத்து தான் அவர்கள் பூதகரமாக வளர்ந்தார்கள். இன்று என்றுமே இல்லாத அளவிற்கு இந்தியாவின் பலவீனமான எதிர்க்கட்சியாய் காலத்தை தள்ளிக் கொண்டுள்ளனர். அவர்கள் அன்று விதைத்த விஷ விதை இன்று சமூகத்தை விழுங்கும் ஆலமரமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
இறுதி தீர்ப்பு வந்து எவன் எவனை வெட்டினாலும் அதை விட கேவலமான செயல் உலகில் எதுவும் இருக்காது. திணிக்கப்பட்ட வன்முறையை அதுவும் மதத்திற்காக செய்கிறவன் முட்டாள் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
இராவணன் ஆண்ட இலங்கையும் ராமன் ஆண்ட அயோத்தியும் பற்றி எரிவதற்கு முதல் காரணம் மனித மனங்களில் ஒளிந்துள்ள ஆளுமை திமிரே…அதை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் செய்த தவறுக்கு இன்று அயோத்தி மக்கள் முகம் கொடுப்பது போல இன்று மிதிபடும் ஈழமக்கள் நாளை கிளர்ந்தெழும் போது இது போல் எத்தனையோ பிரச்சனை எழும் என்று எந்த சிங்களவனும் யோசிப்பது கிடையாது.
இந்தியாவின் மிக முக்கிய விஷயமான இந்த அயோத்தி பிரச்சனையில் பலனடைந்த பா.ஜ.க இறுதி தீர்ப்பை வைத்தும் ஏதேனும் பலனடைய முயற்சிக்கும் நேர்மையற்ற காங்கிரஸ் அரசாங்கம் வீணாக பொது மக்களை தான் வஞ்சிக்க போகிறது…
சிறுபான்மையினரை மதித்து அவர்களோடு சேர்ந்து நாட்டை உயர்த்தும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் இந்த உலகில் தான் இருக்கிறது…அதன் வளர்ச்சியை பற்றி பேசுபவர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்வது கிடையாது.
அயோத்தி தீர்ப்பு…. காங்கிரஸ் அரசாங்கம் வைக்கும் பெரிய ஆப்பு இந்திய மக்களுக்கு…
கரிசனையான ஒரு தமிழன் இல்லையா…
Filed under: அனுபவம், அரசியல், இந்தியஅரசியல், ஈழம், கட்டுரை, காங்கிரஸ், தமிழகம், தமிழீழம், போர்க்குற்றம்
கருணாநிதி பதில் : இல்லை.
என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி…தமிழ் நாட்டை சேர்ந்த பல கட்சிகளில் கரிசனையான ஒரு தமிழன் இல்லையா… இந்திய தூதுக்குழுவில் இடம் பெற…எப்போதுமே பிரிச்சனையின் ஆழம் தெரியாத நபர்களை தூதுக் குழுவில் அமைத்து கண்துடைப்பாக…இன்னும் எவ்வளவு நாட்கள் தமிழர்களை ஏமாற்ற போகிறார்கள்… முழு பலத்தையும் இழந்து அனாதரவாய் இருக்கும் அவர்களுக்கு உதவி செய்ய ஏன் தமிழ் நாட்டை ஆளும் கட்சிகளுக்கு சிறிது எண்ணம் கூட வரவில்லை…
பங்களாதேசை பிரிக்கும் பொழுது வங்காள மொழி பேசுபவர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக மேற்கு வங்காள மாநில முதல்வர் செய்த உதவிகள் சொல்லி மாளாது… தமிழ்…தமிழ் என்று பிழைப்பு நடத்தும் இந்த அரசுகள் வெட்கி தலை குனிய வேண்டும். இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை…இவர்கள் உதவுவதாக நடத்தும் நாடகங்கள் தான் நம்மில் கோபத்தை வர செய்கிறது.
அன்று புலிகளை சொல்லி அவர்களை ஒதுக்கினர்கள் இன்று அதே புலிகளை சொல்லி சிறுமை படுத்துகின்றனர்… என் தந்தையோ…தாயோ… எனக்கு இன உணர்வை ஊட்டவில்லை…நான் கற்ற தமிழ் எனக்கு இன உணர்வை ஊட்டியது… தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறோம்…ஆனால் ஒரு சிறு நாடு நம்மை சிறுமை படுத்துகிறது… நமது வீரத்தை பற்றி கேள்வி இல்லை… நமது விவேகம்…ஆழ்ந்து சிந்தித்தால்…நாம் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருக்கிறோம்…நமக்கு நாம் அரசனை போல் தான் வாழுகிறோம்…ஆனால் ஒரு இனமாக இன்று நாம் தாழ்ந்து இருக்கிறோம்… இது பலருக்கு புரிவதில்லை…ஒரு இனத்திற்கு உள்ளேயே மாநிலத்தை பிரிப்பதில் ஆந்திர மாநிலமே பற்றி எரிந்தது…வேறொருவன் நம்மனவனை நமக்கு தெரிந்தே நசுக்கினான்…நமது விவேகம் என்ன ஆனது… நம்மிடம் இந்தியாவை சார்ந்த எந்த இனத்தவரும் இறையாண்மையை பற்றி பேச தகுதியே கிடையாது…இனத்தை பலிகொடுத்து உலகிலயே முதல் இனமாக நாம் அல்லவா இறையாண்மையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்…
தமிழர்களே! இது தான் இன உணர்வோ…
இன்று நேற்றல்ல…இந்த நாடகங்கள்….
Filed under: அரசியல், ஈழம், தமிழகம், மனிதாபிமானம்
பேச்சுவார்த்தைக்காக தமிழகம் கிளம்பியது இலங்கை மீனவர் குழு
இந்த செய்தியை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது… பிரச்சனை எப்போதுமே இரு இனத்திற்கு தானே தவிர…மீனவர்களுக்குள் இல்லை. இன்று அவர்கள் கை ஓங்கி இருப்பதால் ஒரு சில சிங்கள மீனவர்கள் தவறி நடக்கலாம். இலங்கை கடற்படையினர் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களை திசை திருப்ப நடைபெறும் இது போன்ற பேச்சு வார்த்தைகள் எந்த வித பயனையும் அளிக்க போவது இல்லை.
தமிழக தமிழனுக்கே பாதுகாப்பு தர சிறிதும் எண்ணமில்லாத மாநில…மத்திய அரசுகளின் நிலைப்பாட்டை எங்கு போய் சொல்வது…அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றபின் நாம் கேட்கும் எல்லா கேள்விக்கும் அவர்கள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போவோம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை, இதை எழுதும் போது குறிஞ்சிப் பூவை பற்றி ஞாபகம் வருகிறது அதன் பன்னிரெண்டு வருட கர்ப்பக்காலம் அதன் மதிப்பை உயர்த்தியது….நாம் போடும் ஐந்து வருட ஓட்டோ நம்மை நடுத் தெருவிற்கு தான் அழைத்து வருகிறது.
எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கும் நம் அரசு மீனவர்களின் பாதுகாப்பையும் இலவசமாக கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்…
சற்று யோசித்து பார்த்தால் எவ்வளவு பிரச்சனைகளை மீனவர்கள் எதிர்கொள்கிறார்கள்…
அவர்களுக்குள்ளேயே முதலில் ஒற்றுமை கிடையாது…கடற்கரையை பங்கு போட்டு அடித்து கொள்கிறார்கள்…
கடலில் கொஞ்சம் உள்ளே சென்றால் கூட சிங்களவன் நாயை துரத்துவது போல் துரத்துகிறேன்…இப்போது சீனனும் இருப்பதாக சொல்கிறார்கள்…
இந்தியனிடம்(மாநில,மத்திய அரசு) சொன்னால் “நீ ஏன் கோட்டை தாண்டினாய் என்கிறான்…
இந்திய கடலோர காவல் படை ராஜபக்சேவுக்காக இரவும் பகலும் இல்லாத விடுதலைபுலிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்…கண்ணில் மாட்டும் அப்பாவி மீனவர்களை மிரட்டும் அளவிற்கு தைரியசாலிகள் அவர்கள்…
இன்னும் எவ்வளவோ….
மீனவர்களுக்காக நமது திராவிட கழகங்கள் மாறி மாறி நடத்தும் ஆர்பாட்டங்கள் கட்சி தொண்டர்களின் ஒரு நாள் பிரியாணியோடு முடிந்துவிடும்…அவர்களின் முழக்கங்கள் காற்றில் கரைவதற்குள் அனைவரும் வீடு போய் சேர்த்திருப்பார்கள்…
இன்று நேற்றல்ல…இந்த நாடகங்கள்….பல வருடங்கள் அரங்கேறுகின்றன… சளைக்காமல் எப்படி தான் நடத்துகிறார்களோ..
வெள்ளையனிடம் இருந்து வாங்கிய சுதந்திரம்….நம்மவனின் அதிகார போதையில் தள்ளாடுகிறது… மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு பெரிது…தமிழனாய் இருப்பதால்…அந்த மீனவர்கள் படும் தொல்லை சற்று அதிகம் தான்…
டாஸ்மாக்…
இன்று தமிழகமே…அரசாங்கத்தின் தயவில் போதையில் தள்ளாடுகிறது…நாம் மிக நுட்பமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது.
அரசியல்வாதிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கு நெருங்கியவர்களுக்கும் பெரும் பணம் ஈட்டும் இந்த வியாபாரத்தை மிக எளிதாக அரசாங்கம் ஏன், எப்படி எடுத்துக்கொண்டது. கருணாநிதி மிக மிக சாமர்த்தியசாலி அவர் வாரி இறைத்த தேர்தல் வாக்குறுதிகளை யோசித்து பாருங்கள்… ஒரு ரூபாய்க்கு அரிசி…இலவச தொலைக்காட்சி… பட்டியல் நீளும்…
தன் இன மக்களை குடிகாரர்களாய் மாற்றி அவர்களிடம் இருந்து பிடுங்கிய பணத்தில் வாரியிறைத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் புத்திசாலித்தனம் வேறு யாருக்கு வரும்…இந்த அளவிற்கு எல்லாம் ஜெயலலிதாவினால் யோசிக்கமுடியாது.
தமிழர்களை இலவசத்தின் சின்னங்களாய் உலகத்தின் முன் நிறுத்தி சிறுமைபடுத்திய பெருமை நம் இன மான தலைவருக்குத்தான் சேரும். நன்றி தலைவரே!!!
இன்று ஆட்சி முடியும் தருவாயில் மதுவிலக்கைப் பற்றி சிந்திப்பதாக… செயல்படுத்த போவதாக அறிவிப்பது எல்லாம் தங்கள் தேர்தல் நலம் கருதியே அன்றி….மக்கள் நலம் கருதி அல்ல…
பட்டதாரி இளைஞர்களை அரசாங்க வேலை என்ற பெயரில் டாஸ்மாக்கில் மதுபுட்டிகளுடன் உறவாடவைத்து இன்று அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளனர்.
தொலைதூர சிந்தனை இல்லாத திராவிட ஆட்சிகளின் அவலம்…இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியவில்லை…
இவர்களுக்கு தமிழன் என்றோ,சிறுபான்மையினர் என்றோ, ஏழைகள் என்றோ எந்த வித இரக்க உணர்வும் கிடையாது…இவர்கள் ஆட்சியின் பொற்காலம் எல்லாம் இவர்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான். அது ஜெயலலிதாவின் ஆட்சியாய் இருந்தாலும் சரி கருணாநிதி ஆட்சியாய் இருந்தாலும் சரி…என்றும் மாறப் போவது இல்லை.
திராவிடத்தில் தொலைந்த தமிழ் உணர்வைப் போல் திராவிட ஆட்சியில் தொலைத்த தமிழனை கண்டுபிடிப்பது எளிதல்ல…
இன்றைய தாழ்வு நிலை நிரந்தரம் இல்லை… தமிழ் உணர்வாளர்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்கும் நாள் வெகு தூரம் இல்லை…இன்று வானம் போல் உயர்ந்து இருப்பவர்கள் நாளை சேற்றில் நெளியும் போது உணர்வார்கள் அவர்கள் செய்த தவறை…
போர்க்குற்றம்… நல்ல நகைச்சுவை…
Filed under: அமெரிக்கா, அரசியல், கட்டுரை, போர்க்குற்றம், மனிதாபிமானம்
நடக்கும் சம்பவங்களை பார்த்தால் எந்த நாடுகளுக்கும் போர்க்குற்றத்தை பற்றி பேசாவோ விசாரிப்பதற்கு கோரிக்கை வைக்கவோ எந்த தகுதியும் இல்லை போல் தெரிகிறது…
அமெரிக்காவின், ஆப்கானிஸ்தான் மீதான போரில் மறைக்கப்பட்ட பல மனிதவுரிமை குற்றங்கள் சமீபத்தில் ஒரு இணையதளத்தில்( http://wardiary.wikileaks.org ) கசிந்த ராணுவ கோப்புகளில் பக்கம் பக்கமாக புதைந்து உள்ளது. கிட்டதட்ட 92,000 கோப்புகள் அத்தனையும் மனித உயிர்களை எதையோ போல் நினைத்து அமெரிக்க கூட்டு படைகள் நடத்திய கொடுமைகள்…
இதில் என்ன கொடுமை என்றால் அவர்களுக்கே தெரியாது எத்தனை அப்பாவி மனித உயிர்கள் பறிக்கப்பட்டது என்கின்ற விடயம். ராணுவ கோப்புகள் 2004 இருந்து 2010 வரையான காலகட்டத்தில் நடந்த பல நிகழ்வுகளை தவறுதலாக நடந்ததாக வகைப்படுத்தி உள்ளது. இதை விட மோசமான விடயம் இந்த ராணுவ ரகசியம் வெளியானதால் தங்கள் படைகளுக்கு என்ன வகையான தொல்லை ஏற்படும் என்பதே அவர்களுடைய இப்போதைய பெரிய கவலை…அமெரிக்க தலைவர்கள் கொடுக்கும் பேட்டிகளில் இருந்து தெரிய வரும் விடயமும் இது தான். ஒரு அமெரிக்கன் இறந்தால் ரத்த கண்ணீர் விடும் இவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த எதிரி உலகின் எந்த மூளையில் இருந்தாலும் கொடூரக் கரங்களால் கொன்று குவிக்க தயங்குவதில்லை.
இவர்களின் ரத்த பசிக்கு முக்கிய காரணம் தங்கள் ஆயுதங்களை சோதனை செய்யும் ஆய்வுக்கூடங்களாக எதிரி நாடுகளின் மக்களை நினைப்பதே. இவர்களிடம் போய் ஈழத்தின் போர்குற்றம் பற்றி பேசினால் என்ன கிடைக்கும்…
உலக வல்லாதிக்க சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடம் இருந்து நழுவிக் கொண்டிருக்கிறது. ஐரோபியர்கள் இத்தனை காலம் போட்டுவந்த ஆமாம் சாமியை இனி யோசித்து தான் செய்வார்கள். கூடவே இருக்கின்ற கூட்டமைப்பு நாடுகளையும் ஏமாற்றி வெற்றி என்பதை யோசித்து கூட பார்க்க முடியாத இந்த போரினால் என்ன பயன்…பல லட்சம் மனித உயிர்களை அழித்தது தான் மிச்சம்.
அமெரிக்க இராணுவத்தின் “பிடி அல்லது கொல்” என்கின்ற சித்தாந்தம் அவர்களால் தீவிரவாதி என்று சொல்லப்படுகிறவர்களுக்கு மட்டுமல்ல…அந்த நாடுகளில் வாழும் அப்பாவிகளுக்கும் சேர்த்தே…
கஷ்டமும் நஷ்டமும் நமக்குத்தான்…
Filed under: அரசியல், கட்டுரை, சமூக நீதி, தமிழகம், பதிவுலகம்
வல்லான் வகுத்ததே சட்டம்…இது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படும் உண்மை. பதிவர் சவுக்கு கைதும் உமாசங்கர் அவர்களின் தற்காலிக இடைநீக்கமும் உண்மைகளை எப்படியெல்லாம் அதிகாரம் படைத்தோர் அவலத்திற்கு தள்ளுகின்றனர் என்பதிற்கு எடுத்துகாட்டு.
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
-ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
மேலே குறிப்பிட்டுள்ள திருக்குறள் விளக்கவுரையை எழுதியது யாரும் இல்லை நமது முதல்வர் கருணாநிதி தான்…அவர் தமிழனிடம் இருந்து எவ்வளவு தூரம் சென்றுவிட்டார் என்பது அவரது விளக்கவுரைக்கும் அவரது செயலுக்கும் உள்ள தூரத்திலேயே தெளிவாக விளங்கும்.
சவுக்கு அவர்களின் பதிவை படித்தேன்…திரைபடங்களில் காட்டப்படும் அரசியல் வன்முறைகளுக்கும் நேரில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒரு சிறு வித்தியாசம் கூட இல்லை. எப்படி அதிகாரம் படைத்தவர்கள் துணிந்து விட்டார்களோ அவர்களுக்கு சற்றும் குறையாமல் நாங்கள் இருக்கிறோம்…என்று தங்கள் துணிவை காட்டிய பதிவர் சவுக்கு அவர்களையும் உமாசங்கர் அவர்களையும் நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். இருக்கும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்புகளை கூட தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு அதிகாரம் படைத்தவர்களின் பதவி சுகம் அவர்கள் கண்ணை மறைக்கிறது.
அதிகம் பேர் படித்து விட்டால் அறியாமை விலகி விடும் என்று மக்களுக்காக வாழ்ந்த சில தலைவர்கள் அதிக பள்ளிக் கூடங்களை காட்டினார்கள்…அவை எல்லாம் வெறும் பணம் செய்யும் கூட்டத்தை தான் வெளியேற்றி இருக்கிறது…பணத்தை தாண்டி சிந்திபவர்கள் வெகு சிலரே…இவர்கள் பணம் செய்வதை பற்றி குறை கூறவில்லை.. ஆனால் சமூகத்தை பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பதைத் தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இவர்கள் அடிமைகளாய் வாழ பழகிக் கொண்டு…சமூகத்தை சீர்திருத்த நினைபவர்களையும் வன்முறையாளனாய் சித்தரிக்க தயங்குவது இல்லை.
அதிகாரம் படைத்தவனும் நம்மில் ஒருவன் தான்…என்று என்றைக்கு உணர்கிறோமோ…அன்று தான் ஒரு சிறந்த சனநாயக நாட்டில் வாழ்வதாக அர்த்தம்…இல்லாவிட்டால்…ஆட்சி அதிகாரத்தில் அன்று வெள்ளையன் இன்று நம்மவன்…கஷ்டமும் நஷ்டமும் மாற்றமில்லாமல் எப்போதும் போல் தொடரத்தான் செய்யும்.
என்ன பிரச்சனை…
காங். கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புவோர் மதுரைக்கு வரலாம்-இளங்கோவன்
இவர் சொல்லும் இந்த வார்த்தையிலேயே தன் கட்சிக்கு இருக்கும் கோஷ்டி பலத்தை மெய்பிக்கிறார்…இவர் இங்கு அழைப்பது பொதுமக்களை அல்ல…இது தான் இவர் அறியாமை…என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறிக் கொட்டுவது.
ஆளும் கூட்டணியோட ஒத்து ஊதிக்கொண்டு தமிழக காங்கிரஸ் காலம் தள்ளிக் கொண்டிருகிறது. இதில் அடிகடி இளங்கோவன் மட்டும் எங்களுக்கு பதவி தரவில்லை… நாங்கள் முப்பத்தி ஆறு பேர் இருந்து என்ன புண்ணியம்…காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம்..அது இதுவென்று காது வழியாக ரத்தம் வரும் அளவிற்கு மேடையில் பேசுகிறார், அறிக்கை விடுகிறார்.
சமீபத்தில் அவரது ஒரு வாசகம் தங்க எழுத்துகளில் பொறிக்கப்படவேண்டும்…தி.மு,க ஆட்சியின் சாதனைகள் வரும் தேர்தலில் தெரியும் என்றிருக்கிறார். ஆளும் கட்சியுடன் இருந்து கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் பேசும் பேச்சுக்கள் பதவி ஒன்றை மட்டுமே குறிகோளாக செயல்படுவது போல் உள்ளது. நீர்த்து போன காங்கிரஸ் மற்றும் திராவிட கொள்கைகள் இனி எந்த வகையிலும் தமிழனை உயர்த்தாது. அது திண்ணம்.
அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமிக்கு அடுத்த வாரிசு இளங்கோவன் என்பது போல் உள்ளது அவரது பேச்சுக்களும் செயல்பாடுகளும் ஒரு நல்ல பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த இவர் திடமான சிந்தனை…திடமான பேச்சு என்றில்லாதிருப்பது என்னவென்று சொல்வது…
ப.சிதம்பரம் தோற்றதாக அறிவித்துவிட்டு சில மணி நேரங்களில் சில ஓட்டுக்களில் வெற்றி பெற்றதாக அறிவித்ததில் இருந்தே காங்கிரஸ் எந்த அளவிற்கு துணியும் சனநாயக கடமையை நிறைவேற்றுவதில் என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் காமராஜர் ஆட்சி என்று காதில் பூ சுற்றுவதை இளங்கோவன் நிறுத்திக் கொள்வது நல்லது.
எனக்கு வந்த மிரட்டல்கள்…
நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமாக வந்த பல நண்பர்களின் கருத்துகள்…கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளது…முதலமைச்சர்,எதிர் கட்சி தலைவர்…யாராக இருந்தாலும் மக்கள் மறுத்தால் நாளை நடுத்தெருவில் தான் அவர்கள் அதிகாரமும், மரியாதையும்… நான் மிக கவனமுடன் எழுதிய பதிவு அது தனி நபர் தாக்குதல் இன்றி அவர்கள் செய்யும் செயல்களை மட்டும் தான் விமர்சித்திருந்தேன்…
தாக்குதல் தொடுக்கப்பட்ட பதிவுகள்….
ஜெ – தேர்தல் – முதல்வர்
மாண்புமிகு முதல்வர் அவர்களே எப்போது திருந்துவீர்
இட ஒதுக்கீடு…ஓட்டு போடுங்க சாமி
கணினி பயன்பாடு தெரிந்தவர்…பின்னூட்டமிடுகிறார்..என்றால்…படித்தும் இவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்?
என் எழுத்துகள் யார் மிரட்டினாலும்…தலை வணங்கி போகாது என்பதை இந்த பதிவின் மூலம் என் எழுத்துகளை எதிரியாக நினைக்கும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்…
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
-தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.
( பி.கு – வந்த பின்னூட்டங்களின் தரம் கருதி மட்டறுத்துவிட்டேன். )
இட ஒதுக்கீடு…ஓட்டு போடுங்க சாமி…
Filed under: அரசியல், இந்தியஅரசியல், கட்டுரை, சமூக நீதி, தமிழகம்
உயர் ஜாதி ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு-மத்திய அரசு திட்டம்
இட ஒதுக்கீடு என்பதே உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தை குறைக்கத்தான் வந்தது… மத்திய அரசின் இந்த திட்டம் மேலோட்டமாக நல்ல திட்டம் போல தெரிந்தாலும்( ஏழைகள் என்று சொல்லிவிட்டனரே ) இதனால் ஏற்படப் போகும் விளைவுகள்…பயனாளர்கள்…ஒரு பெரிய குழப்பம் தான். ஆனால் இனி வேறு வழியில்லை எவ்வளவு நாள் தான் சிறுபான்மையினர்…ஒடுக்கப்பட்டவர்களின்… பாதுகாலவர்கள் போல் வேடம் போட முடியும். அதிகாரம் கையில் இருப்பதால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது ஒன்றும் சிரமம் இல்லை. கருணாநிதி போன்றோர் சத்தம் எழுப்பினால் இருக்கவே இருக்கின்றது மத்திய அமைச்சர் பதவி…அவர் குடும்பத்தில் நேற்று பிறந்த குழந்தைக்கு இன்று முன்பதிவு செய்து விடலாம் சோனியா காந்தியிடம்.
மாயாவதி சத்தம் போட்டால் அவர் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தினால் அவர் இருக்கும் இடம் தெரியாது…ராகுல் காந்தியை அழைத்து விருந்து கூட கொடுப்பார் விசாரணையின் காலத்தை கடத்த.
லாலு , முலாயம் சிங்….ஒடுக்கப்பட்டவர்களின் நலன் காக்கும்(?) தலைவர்கள்… பட்டியல் நீளம் தான்…இவர்களுக்கும் காங்கிரஸ்,பிஜேபி தலைவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்… ஓடுக்கப்பட்டவர்கள் இவர்களை நம்புவது மட்டும் தான்…மற்றபடி வேறொன்றும் இல்லை…அச்சு அசல் அவர்கள் செய்யும் அத்தனை அயோக்கிய தனங்களையும் இவர்களும் எந்த வித வித்தியாசமும் இன்றி செய்கிறார்கள். சொல்ல மறந்து விட்டேன் இந்த நீண்ட பட்டியலில் உள்ள முக்கால்வாசி தலைவர்கள் மீது பல தரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. சொல்லத் தேவை இல்லை எப்படி இந்த திட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றும் என்று.
ஆடும் வரை ஆடுங்கள்…
உமாசங்கர் சஸ்பெண்ட் ஆக போலி சாதி சான்றிதழ் காரணம்…
இது எப்படி இருக்கிறது என்றால்… தயாநிதி மாறனை வைத்து விளையாடியது தான் ஞாபகம் வருகிறது…ஆனால் உமாசங்கர் அவர்கள் குடும்ப உறுப்பினர் இல்லையே…
ஆடும் வரை ஆடுங்கள் இன்று உங்கள் காட்டில் மழை…தூக்கி ஏறியப்படும் போது கண்டிப்பாய் வலிக்கும்…நல்லதும் பிடிக்காது நல்லது செய்பவர்களையும் பிடிக்காது..பேசுபவர்களையும் பிடிக்காது இவர்களை எதிர்த்து எழுதுபவர்களையும் பிடிக்காது…
நண்பர் K.R.P செந்தில் சொன்னது போல் நாம் ஓட்டுக்காக பணத்தை வாங்க ஆரம்பித்த பிறகு இதற்கு எல்லாம் எதற்க்கு கவலை பட வேண்டும்…
வாழ்க கலைஞர்..வளர்க அவரது குடும்ப உறவுகள்…
நமக்கு அடுத்த பிரச்சனை தயாராக உள்ளது… அதுதாங்க… பணம் பண்ணுவது….எந்த வழியில வரும்னு சிந்திப்போம். மத்த விடயம் எல்லாம் எதுக்கு…. மக்கள் ஊமையாக இருக்கும் வரை அவர்கள் பாடு கொண்டாட்டம் தான்.
ஜெ – தேர்தல் – முதல்வர்…
Filed under: அனுபவம், அரசியல், ஈழம், கட்டுரை, தமிழகம், தமிழீழம், மனிதாபிமானம்
சில நாட்களாய் வருகின்ற செய்திகளை(அறிக்கைகளை) பார்க்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது. நான், நிறைய பள்ளி மாணவர்களை பார்த்திருக்கிறேன் வருடம் முழுவதும் ஆட்டம் பாட்டம் என்று இருந்து விட்டு தேர்வு நேரத்தில் விழுந்து விழுந்து படிப்பார்கள். தேர்வு அறையில் அவர்கள் படும் பாடு நல்ல வேடிக்கை தான். அந்த நிலையை ஒத்து இருக்கிறது ஜெ-வின் சமீபத்திய அறிக்கைகளும் போரட்டங்களும்.
அவரது அறிக்கையில் உள்ள சில பகுதிகள்:
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத் தள்ளிய இலங்கை போர் ஓர் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.
வீடுகளை இழந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள், இலங்கை ராணுவ முகாம்களில் முள் கம்பிகளால் ஆன வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்குள்ள இளைஞர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேக முத்திரையுடன் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இன்று கூட மீதமுள்ள மற்றவர்களின் கதி என்ன வாயிற்று என்பது நிச்சயமற்ற நிலையில் தான் இருக்கிறது.
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் அனைத்து விதமான கொடுமைகளுக்கும், அவமானங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க தந்தையர்களும், கணவர்களும், சகோதரர்களும் இல்லாத சூழ்நிலையில், இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில், வெட்ட வெளியில், இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைமைக்கும், குளிக்க வேண்டிய நிலைமைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தப் பெண்களில் பலர் உணவிற்காக ராணுவ வீரர்களின் சிற்றின்பத்திற்கு இறையாகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த விடயங்கள் எதுவுமே இவருக்கு இத்தனை நாட்கள் தெரியாத இல்லை சமயம் வரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காத்திருந்தாரா… இன்னும் சிலநாட்களில் நம் தமிழக அரசியல்வாதிகளுக்கு தமிழ் தேசிய சுரம் பிடித்துவிடும்… தேர்தல் முடியும் வரை அவர்கள் நடத்தபோகும் தமிழ் தேசிய நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல… இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் கிடையாது.
ஜெ. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சருக்கு பிறகு மக்கள் கவனிக்கும் முதல் தலைவர் ஆனால் அவரது செயல் பாடுகள்,அறிக்கைகள்,போரட்டங்கள் எல்லாம் சட்டசபை தேர்தலையும், முதலமைச்சர் நாற்காலியை மனதில் கொண்டே முடிவு செய்யப்படுகின்றன. நான் மீண்டும் மீண்டும் தமிழீழத்தை பற்றி எழுதுவதாக யாரும் எண்ணாதீர்கள் நாம் செய்த மிகப் பெரிய தவறு ஈழத்தை காப்பாற்றாமல் விட்டது ஈழ மக்களை குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் கதறவிட்டது. இன்று அந்த மிக மோசமான நிகழ்வை ஊருகாய் போன்று இவர் பயன்படுத்த நினைப்பது மிக மிக வேதனையான விடயம்.
இந்நேரம், இந்த அறிக்கைக்கு நிச்சயம் பதில் அறிக்கை தயாராய் இருக்கும் அறிவாலயத்தில், வேறு என்ன செய்ய முடியும் அவர்களால் குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு அஞ்சி சண்டை சச்சரவுகளில் அமைதியனவர்களை பார்திருக்கிறோம் நம் தலைவரோ அவர்களின் பதவிகளுக்காக ரத்தமும் சதையுமாய் வீழ்ந்த ஈழ மக்களின் சண்டையை வேடிக்கை பார்த்தவர்.
யார் வேண்டுமானாலும் ஆட்சியை பிடியுங்கள்…நடத்துங்கள்…தயவு செய்து தமிழர்களை பற்றியோ…தமிழ் மொழியை பற்றியோ… தாங்கள் தான் அதை காப்பற்ற வந்த கடவுளாக அப்பாவி தமிழர்களை ஏமாற்றாதீர்கள்…திராவிடத்தில் தொலைந்த தமிழினத்தை கொஞ்சமேனும் வளரவிடுங்கள்.
வெட்கமாய் இருக்கிறது…ஏன் இப்படி…
வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தாள் அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு.
ஒரு துரதிர்ஷ்டவசமான அழைப்பு…
அருமைத் தமிழர்களே… இன்னும் எத்தனை நாட்கள் நாம் இப்படி இருக்கப்போகிறோம்… தமிழர்கள் என்றால் தேசியம் பேசுவார்கள்… தேசம் கேட்பவர்கள்…பயங்கரவாதிகள்…என்று ஒரு மேகவலயம் நம்மை சுற்றி இருக்கும் இந்த காலகட்டத்தில் பதவியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு தமிழினத்தின் ஒரு கூட்டத்தை நோக்கி இப்படி ஒரு அழைப்பு விடப்படுகிறது இது எந்த விதத்தில் நியாயம் என்பது அவருக்கு தான் வெளிச்சம்…
அன்புமணிக்கு முதல் அமைச்சர் பதவி கொடுத்துவிட்டால் என்ன மாற்றம் நிகழப் போகிறது…
வெளிமாநிலங்களுக்கு மின்சாரத்தை சத்தமில்லாமல் கொடுத்து விட்டு…போராடித் தண்ணீர் வாங்குவதை…மாற்றப் போகிறாரா…
அது நிச்சயம் நடக்கப் போவதில்லை….
ஏற்கனவே ஒற்றுமை இல்லாமல் சிதறிப் போய்…இந்திய காங்கிரசும்…இலங்கை ராஜபக்ஷேவும் விளையாடும் மைதானம் ஆகிவிட்டது தமிழ் சமுதாயம்…இதில் இன்னொரு விரிசலை ஏன் இவர் வெற்று பதவி சுகத்திற்காக செய்ய நினைக்கிறார்…
ஆக மொத்தம் தமிழனை ஒன்று சேர்க்கும் எந்த ஒரு தலைவனும் இன்று இல்லை…வெறும் அறிக்கை தலைவர்களையும்,அரசியல் வியாபாரிகளையும் வைத்துக்கொண்டு நாம் கூச்சல் போட்டு கொண்டிருக்கிறோம்…
அரசியல் கட்சிகள் போடும் எலும்புத்துண்டுகளுக்கு அந்தந்த கட்சியின் தொண்டர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்…அவர்களும் சாமான்ய மக்கள் தான் என்பதை அவர்கள் மறந்து வெகு காலம் ஆகிவிட்டது.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
-செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்
மிகவும் கவனமாக தமிழர்கள் இருக்கவேண்டிய கால கட்டத்தில்…தமிழின தலைவர்கள்(? அப்படி தான் சொல்கிறார்கள் ) அதுபற்றி யோசிப்பார்களா…
தரம் கெட்ட மனிதர்கள் 5% சதவிகிதம்…
நித்யானந்தாவுக்கு தங்கச் செருப்பு காணிக்கை! பக்தைகள் பாதயாத்திரை – இது செய்தி…
என்ன சொல்றதுன்னு தெரியல மொத்ததுல புத்திக்கெட்ட சனங்கள், இவர்கள் எல்லாம் படித்து என்ன பிரேசனம்…
ஊழலில் சிறை சென்ற அரசியல்வாதிகள்…
பஞ்சமா பாதகமான படுகொலையை அரங்கேற்றிய சமய தலைவர்கள்…
விளையாட்டை தேசியத்தின் பெயரால் அவமானப் படுத்தியவர்கள்…
தன் இனம் அழித்தவனுடன் கொஞ்சிக் குலாவியவர்கள்…
இன்னும் எத்தனை..எத்தனை தரம் கெட்ட மனித புழுக்கள்…
மொத்த மக்கள்தொகை சதவிகிதத்தில் 5 சதவிகிதம் கூட இல்லாத இவர்கள் தான் இன்று நம் பொழுதுகளை தீர்மானிக்கிறார்கள்…
நாம் பேசும் அதிக விடயங்களில் இவர்கள் தான் ஆக்கிரமிக்கிறார்கள்….நமக்கு தெரியாமலே…
சற்று யோசித்து பாருங்கள்… இந்த மனப்பகுவதிலேயே நம் மனது…வளர்ந்தது…வளரப்போகிறது…இது எங்கு போய் சேர்க்கும் நம் புதிய தலைமுறையை…
நம் சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவுகளும் மேலை நாடுகளை பின்பற்றுவதிலேயே குறியாய் இருக்கிறது…வெளி உலகிற்கு எப்படி இருந்தாலும் அந்தந்த நாடுகளில் உயிருக்கு உத்தரவாதம் மிக மிக குறைவு…காரணம் அனைவரின் கையிலும் துப்பாக்கி…
எங்கோ கேள்விபட்ட ஒரு விடயம்… ஒரு நாட்டின் தொலைகாட்சியில், அன்றைய செய்திகளில் முதலில் சொல்லப்படுவது அந்த நாட்டிற்கு பயன் தரும் நல்ல விடயங்களே, செய்தியின் இறுதியில் தான் விபத்து,கொலை,களவு போன்ற விடயங்கள்….அவர்களின் அணுகுமுறையை பாருங்கள்…
பார்வையாளர்களின் வரவை அதிகரிக்க அல்லது தக்க வைக்க நித்யானந்தாவின் செய்தியை பரபரப்பாக ஒளிபரப்பியதை என்னவென்று சொல்வது…இவர்களிடத்தில் எதை எதிர்பார்ப்பது…
“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்”
-தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை
உண்மை வள்ளுவரே…உண்மை…உண்மை…
இந்திய நாடு…ஜனநாயக நாடு…நாங்கள் வைத்தது தான் சட்டம்…
இந்திய நாடு என்று பெயர் ஆனால் இந்தி பேசுபவர்களுக்கு தான் இங்கு மதிப்பு. இது வெளிநாட்டிலும் பரவியுள்ளது. இந்தியன் என்று சொன்னாலே தலைப்பாகை கட்டினவன் என்கின்ற போக்கு தான் வெளிநாட்டினர் மத்தியில் இருக்கிறது. நேற்று வெளியிடப்பட்ட இந்திய ரூபாயின் குறியீடில் சமஸ்கிருத மொழியின் தாக்கம் நிரம்பி வழிகிறது.
நான் வேற்றுமையை விதைப்பதாக யாரும் எண்ண வேண்டாம். எந்த வகையிலும் தென் இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டை மதிக்கும் வகையில் காரியங்கள் நடை பெறவில்லை என்பதே என் ஆதங்கம். தனித் தனியே இருந்திருந்தால் ஒரு நாட்டிற்கு இருக்கும் மதிப்பே வேறு, அவ்வாறு இல்லாமல் ஒரே நாடு என்ற பக்குவத்தில் இருக்கும் மாநிலத்திற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையை என்னவென்று சொல்வது.
மத்தியில் அவர்கள் துணை இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்கின்ற ஒரே காரணத்திற்காக, இன்று தமிழகத்தை தன் குடும்பமாக பார்க்கும் கருணாநிதி, அவர்கள் போடும் தாளத்திற்கு தமிழகத்தை ஆடவைக்கிறார். “பல தேசிய இனங்களின் கொட்டடி” என்று இந்தியாவை சொல்வார்கள்…நாம் அப்படி தான் நடத்த படுகிறோம்… பணம் படைத்த நேரு தான் நம் முதல் பிரதமர்… அன்று உயரேப் போன அதிகாரம் இன்று வரை கீழே வரவில்லை.
செய்வதை எல்லாம் செய்து விட்டு வேற்றுமையில் ஒற்றுமை என்று கபட நாடகம் அருமையாக நடக்கிறது. அவர்கள் சொல்வது இது போல் தான் இருக்கிறது “இந்திய நாடு…ஜனநாயக நாடு…நாங்கள் வைத்தது தான் சட்டம்…
பல சிறுபான்மை இனத்தை, பணம் மற்றும் அதிகாரம் படைத்த ஒரு பெரும்பான்மை இனம் ஆண்டாண்டு காலமாய் ஆட்டி வைத்துக் கொண்டிருகிறது.
சிங்களவனோடு செய்யப்போகும் வியாபாரத்திற்காக தமிழனின் உயிரை அவர்கள் நினைப்பது…சொல்வதற்கே வாய் கூசுகிறது…
நான் அறியாத வயதில் இருந்து கேட்டுக் கொண்டிருகிறேன்…இலங்கை பிரசனையை…இவர்களால் மாநிலத்திற்குள்ளும் ஒற்றுமையை கொண்டு வர முடியவில்லை…அண்டை நாடுகளுடனும் ஒரு நல்லுறவை ஏற்படுத்த முடியவில்லை ஆனால் ஆட்சி மட்டும் அவர்கள் கையில் இருந்து கொண்டிருக்க வேண்டும்…
மக்கள் போராட்டத்தின்…அடிநாதமாய்…இவர்கள் எடுக்கும் முடிவுகள் அமைந்து கொண்டிருகின்றன…தூக்கி ஏறியப்படும் வரை யாரும் நிகழ்வுகளை உணர்வதில்லை…
( பின்குறிப்பு: இந்த குறியீட்டை வடிவமைத்தவர் ஒரு தமிழர்…வெட்கக்கேடு …)
இது ஒரு தலைப்பு ஆர்வத்தை தூண்டியதால் படித்தேன்…
பாஜக சட்டமன்ற உறுப்பினரை அடித்து உதைத்த காவல்துறையினர்
இது ஒரு தலைப்பு ஆர்வத்தை தூண்டியதால் படித்தேன்…
நடந்த விஷயம் இது தான் – அந்த சட்டமன்ற உறுப்பினர் போக்குவரத்து விதி முறையை மதிக்காமல் சென்றுள்ளார் விரட்டி பிடித்த காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்து சண்டை போட்டுள்ளார். நம்ம காவல் துறை சும்மாவா அவரை நடு சாலையில் துவைத்து எடுத்து காவல் நிலையம் தூக்கி சென்றுள்ளனர்… அடுத்த விஷயம் மிகவும் கவனிக்கத்தக்கது நம் பாரத நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்றால் சாதரணமா…அவர் தொண்டர(வு)டிகள் காவல் நிலையத்தை நொறுக்கி அவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்…
இந்த விசயத்தில் அந்த அரசியல்வதிக்கும் புத்தி இல்லை…காவல் துறையினருக்கும் புத்தி இல்லை…
ஆனால் நமது ஆங்கில செய்தி நிறுவனங்களுக்கு நல்ல தீனி…
நாம் எப்பொழுதும் போல் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு நம்ம வேலைய பார்ப்போம்…
ஒரு குற்றம் செய்த நபரை எப்படி அணுக வேண்டும் என்பது அந்த காவல் துறையினருக்கு கற்று கொடுக்கபடவில்லை…
அரசியல் என்றால் என்ன என்று அந்த அரசியல்வாதிக்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை…
இந்த நிகழ்வுகள் எல்லாம் எப்பொழுது மாறும் என்பதை விட… இன்னும் என்ன என்ன கருமத்தை எல்லாம் பார்க்க அல்லது கேட்க இருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது தான் கவலையாக இருக்கிறது…
வாழ்க பாரத தேசம்… வளர்க… அதன் உயர்ந்த குடிமக்கள்(அரசியல்வாதி,காவல் துறை).
மாண்புமிகு முதல்வர் அவர்களே எப்போது திருந்துவீர்…
உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காக பாடுபடுவர்கள் என்னை உணருவார்கள்-கருணாநிதி
ஐயா,
உங்கள் தமிழ் நேசம் என்னை இம்சிக்கிறது…நீங்கள் உண்மையில் தமிழர்களுக்காக உழைத்தால் சந்தோஷப்படும் முதல் மனம் என்னுடையதுதான்…
ஆனால் நிச்சயம் இப்போது தமிழர்களுக்காக போராடவில்லை.. என்பதே என் எண்ணம்…
செம்மொழி மாநாடு உங்கள் குடும்ப விழாவாக இனிதே முடிவடைந்தது…
ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு உண்மையில் இப்போது பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களின் துயரை துடைக்க தமிழ் மாநிலத்தை ஆளும் நீங்கள் நினைத்தால் அது சில நொடி போதும்…
தயவு செய்து உங்கள் குடும்பத்தை… உங்கள் அல்லகைகளை மறந்து… தமிழோடு உறவாடிய நிமிடங்களை எண்ணிப்பா ருங்கள்..நிச்சயம் அந்த சில நிமிடங்கள் உங்கள் தமிழ் நேசம் குறித்தான ஆவலை..சற்றும் துரோகி\க்காமல்… நிச்சயம் நிலைநிறுத்தி இருக்கும்…
தமிழனை கொன்று தமிழை வளர்க முடியாது ஐயா…
உங்களை மன்னராக பார்க்கவில்லை சக மனிதனாக எண்ணி அருகில் வருகிறேன்..
பொய்யுறைத்து காலம் தள்ளாதீர்…






















