அறுபட்ட சமாதானம்
அறுபட்ட சமாதானம்,
மாயமாய் ஒரு போரரங்கம்…
உலகமே ஒன்றிணைந்து,
அசிங்கமாய் ஒரு அவமானம்…
விடுதலை சவத்தின், மேல்
உலகம் தூவிய அனுதாபம்…
ஆண்டுகள் அழிந்தாலும்
அமிழாத நினைவுகளாய்….
அஹிம்சையும் வழியிலந்து
வீரமும் ஒளியிழந்து
இடைமறித்த துயரங்கள்
இனி,
விலாசம் தேட வைக்க
இனி ஒரு விதி செய்வோம்…
உலகமே வியக்கும் வண்ணம்…
தமிழ் இன உணர்வுடன்…
கொஞ்சம் ஒற்றுமையுடன்…
எந்திரன் என்ன ஆச்சு – ரஜினி விசாரணை…
முன்பெல்லாம் பத்து தியேட்டர்ல படங்கள் ரிலீஸ் ஆகும். அது நூறு நாட்கள் ஓடும். இப்போது நூறு தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகுது. அதனால் பத்து நாட்கள்தான் ஓடுது. இரண்டும் ஒன்றுதான் என்கிறார் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் ஆடுகளம் படத்தின் இயக்குனர்.
இந்த அதிக தியேட்டர் குழப்பத்தில் நம்ம படம் ஹிட்டா? பிளாப்பா? என்றே புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆணானப்பட்ட ரஜினிக்கே அந்த குழப்பம் வந்திருப்பதுதான் ஆச்சர்யம். தமிழ்சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு சில தினங்களுக்கு முன் போன் அடித்தாராம் சூப்பர் ஸ்டார். எந்திரன் படம்
எந்திரன் என்ற மாயை…
படித்ததில் பிடித்தது (http://tamil.webdunia.com/entertainment/film/article/1009/22/1100922049_1.htm)
பாபா வெளிவந்த போதும் மிகப்பெரிய அளவில் மீடியாக்கள் கொட்டி முழங்கின. பாபா பக்கம் என்று தனிப் பகுதி ஒதுக்கியவர்கள் படம் வெளியான பிறகு ரஜினி ஏமாற்றிவிட்டதாகவும், அரைத்த மாவையே அரைத்திருப்பதாகவும் அங்கலாயத்துக் கொண்டனர். ரஜினி ஒரு நல்ல படத்தை தரவில்லை என்ற ஆதங்கத்தைவிட, நமது ஓவர் பில்டப் வாசகர் முன் சாயம் இழந்துவிட்டதே என்ற கோபம்தான் அவர்களை விமர்சனத்தில், அரைத்த மாவு என்று நெளிய வைத்தது.
எந்திரன் வெளிவரும் இந்த காலகட்டத்தில் விளம்பரம், வர்த்தகம் என அனைத்துமே மாற்றமடைந்துவிட்டது. ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்களின் கதையில்லா படங்களையும் விளம்பரம் மூலம் ஓட வைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். தொலைக்காட்சியும், அச்சு ஊடகமும் கையிலிருந்தால் எதையும் விற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தொலைக்காட்சியின் ஆபத்து குறித்துப் பேசும் சமூகவியலாளர் பியர் பூர்தியூ முக்கியமான ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்துகிறார். தொலைக்காட்சி என்பது யதார்த்தத்தை காண்பிப்பது என்பதைத் தாண்டி யதார்த்தத்தை போலியாக உருவாக்குவதாக குற்றம்சாற்றுகிறார்.
உதாரணமாக, குஷ்பு கற்பு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பதினைந்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஒரு தெருவைக்கூட சலசலப்புக்கு உள்ளாக்காத இந்த போராட்டத்தை குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்று மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்பியது, தனது அச்சு ஊடகத்தில் தலைப்புச் செய்தியாக்கியது. தமிழ்நாட்டில் அன்றைய தேதியில் அதுதான் மிகப் பெரிய பிரச்சனையாக ஊதி பெரிதாக்கப்பட்டது.
குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி இந்த செய்திக்கு அளவுக்கு மீறிய அழுத்தத்தை கொடுக்காமல் இருந்திருந்தால் தமிழர்களின் கவனத்தில் அது பதியாமலே போயிருக்கும், நமக்கு ஒரு ‘திடீர்’ அரசியல்வாதியும் கிடைத்திருக்க மாட்டார்.
எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொள்வது, எதை ஊதிப் பெரிதாக்குவது என்பது மட்டுமின்றி எதை பிரச்சனைக்குள்ளாக்குவது என்பதுவரை தொலைக்காட்சிகளை நிர்வகிக்கும் தனி மனிதர்களால்தான் முடிவு செய்யப்படுகிறது. இன்னும் சரியாகச் சொன்னால் நாம் எதை பார்க்க வேண்டும், எதை பார்க்கக் கூடாது என்பதையே இந்த தனி மனிதர்கள்தான் முடிவு செய்கிறார்கள். இதைதான் பியர் பூர்தியூ தொலைக்காட்சியின் அபாயம் என்று குறிப்பிட்டார்.
24 மணி நேர செய்தி சேனல்கள் பெருகிய பிறகு செய்திகளின் தேவை அதிகமாகிவிட்டது. செய்தி சேனல்கள் அகோரப் பசியுடன் பிரேக்கிங் நியூஸுக்காக அலைகின்றன. அவைகளின் பசியின் பெரும் பகுதியை தீர்த்து வைப்பவர்கள் செலிபிரிட்டிகள் எனப்படும் பிரபலமானவர்கள். ஐஸ்வர்யாராய் சேலை கட்டினால் அதை நாள் முழுவதும் காண்பிக்க செய்திச் சேனல்கள் கூச்சப்படுவதில்லை. இதனால் நாம் எதிர்பார்க்காத திசையிலிருந்தெல்லாம் செலிபிரிட்டிகள் முளைத்து வருகிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகப்பெரிய செலிபிரிட்டி ரஜினிகாந்த். இந்த செலிபிரிட்டி எல்லோரையும்விட அதிகமாக ரசிகர்களுக்கு தேவைப்படுகிறார். தான் யாருக்கு ரசிகராக இருக்கிறோமோ அவர்தான் உலகின் ஆகச் சிறந்த பிரபலமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனுமே விரும்புகிறான்.
இந்த செலிபிரிட்டி ஷங்கருக்கு மிகவும் தேவைப்படுகிறார். எந்திரன் போன்ற காஸ்ட்லியான கனவை நனவாக்க கடைநிலை செலிபிரிட்டியாலோ, இடைநிலை செலிபிரிட்டியாலோ முடியாது.
இந்த செலிபிரிட்டி சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனத்துக்கு மிக மிகத் தேவை. 150 கோடியை முதலீடு செய்து அதைவிட பல மடங்கை அறுவடை செய்ய நாக்க முக்க செலிபிரிட்டிகளால் முடியவே முடியாது. ரஜினி போன்ற மெகா செலிபிரிட்டிதான் வேண்டும்.
இன்று தமிழக மக்கள் அனைவரும் எந்திரன் எனும் தேவதூதனை எதிர்நோக்கி நோன்பு இருப்பதான சித்திரத்தை தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. இந்த மிகை யதார்த்தத்திற்குள்தான் இன்று தமிழகம் மிதந்து கொண்டிருக்கிறது. எந்திரனை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதே ஒரு மனிதனின் ஆகப்பெரிய கடமை போலவும், அதுவே மாபெரும் கௌரவம் போலவும் தினம் மந்திரித்துக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இந்த மந்திரத்துக்கு கட்டுப்பட்டு முதல் நாள் ஐந்தாயிரம் பத்தாயிரம் பணம் கொடுத்து படம் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் நூற்றைம்பது கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையினால்தான் திரையரங்கு உரிமையாளர்கள் பல கோடி ரூபாய்க்கு எந்திரன் பெட்டியை வாங்கியிருக்கிறார்கள்.
எந்திரன் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பர வெளிச்சம் தமிழகத்தின் கண்களை கூசச் செய்கிறது. பியர் பூர்தியூவின் வார்த்தைகளில் சொன்னால், மீடியாக்களின் அதிகாரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும், எந்திரனே எல்லாம் என்ற மிகை யதார்த்த உலகில்தான் இன்று தமிழகம் இருக்கிறது.
முதல் நாளே எந்திரனை பார்க்கும் வேட்கையில் பல்லாயிரம் ரூபாயை காவு கொடுக்க நாம் தயாரானால், நம்மை அறியாமலே நாம் மீடியாவின் மிகை யதார்த்த வலையில் சிக்கிக் கொண்டோம் என்று அர்த்தம்.
ஐநூறும், ஐந்தாயிரமும் கொடுத்து விட்டில் பூச்சி ஆகப்போகிறோமா? இல்லை, இரண்டு வாரங்கள் பொறுத்திருந்து திரையரங்கு கட்டணத்தை மட்டுமே செலுத்தி நமது சுய கௌரவத்தை மீட்டெடுக்கப் போகிறோமா?
முடிவு தனி மனிதர்களின் கையில்தான் இருக்கிறது.
அந்த மின்சார வண்டியினில்…

நெருங்கி வரும்
நெடிய சாலைகள்…
விழி மூடி
திறக்கும்
முன்னே…
சிதறிய சூரிய வெளிச்சம்….
ஒட்டி விலகும்
சாலையோர மரங்கள்…
தாலாட்டு பாடும்
மின்சார வண்டியின்
அசைவு…
மெல்லிய காற்றாய்
வந்து போகும்
கடந்த கால
இனிய நினைவுகள்…
நம் காதல்
நாடகங்கள்
ஒவ்வொன்றாய்
மனதிற்குல்
அரங்கேற…
என் இதழோரம்
கள்ளச் சிரிப்பு …
நான் எழுதிய
வரிகளை
நீ படித்தாய்…
கவிதையே!!!
கரைந்து விட்டேன்
இனி
அடிக்கடி பயணிப்பேன்
அந்த மின்சார வண்டியினில்
உன் நினைவுகள்
அங்கு தான்
உலவிக்
கொண்டிருக்கும்
என் கவிதை
வாகனத்தில்…
சிரிக்காதீர்…சிந்திப்பீர்…

மின்னும் நட்சத்திரங்கள்…
அலை அலையாய்
நிலவொளி…
இடம் பிரித்து
வழிதேடி
என் கால்தடங்கள்…
இறுமாப்பை
கேள்வி கேட்கும்
ஒரு இரவில்…
நீண்டு ஓடிய
மரக்கிளைகள்
நச்சு பாம்புகளாய்…
என் நிழலே
உயர பூதங்களாய்…
சவாலான ஒரு பயணம்…
இரவில்… கடந்து போன
பாதையினை…
கதிரவனை துணைக்கழைத்து
பார்வையிட்டேன்…
என்ன அதிசயம்…
நான் கண்ட எதுவும் அங்கில்லை…
சிரிக்காதீர்…சிந்திப்பீர்…
தென்றல் துவைத்த என் மனம்…

குறுக்கும் நெடுக்குமாய்
மரக்கிளைகள்…
இயற்கை வாரி
இறைத்திருந்த
சருகுகள்… என் கால்தடம் எங்கும்…
உடலோடு உறவாடிய
மாலை நேர
மலைக்காற்று…
மலை முகடுகளில்
வெட்கத்தால்
முகம் பதுக்கிய
இளஞ்சிவப்பு கதிரவன்…
இயற்கை விரித்த
மாயக் கம்பளம்…
பிடியில்லாமல்
என் மனம்
ஊஞ்சள் ஆடியது…
என் உணர்வுகளின்
ஆழ்ந்த இறுக்கம்
சிறிது சிறிதாக விலகியது…
தென்றல் துவைத்த
என் மனதில் தான்
எவ்வளவு அழுக்குகள்…
மனம் குளித்து
உடல் சிலிர்த்து
நிமிடங்கள் வசமாகின…
புது உடல்
புது மனம்
பெயரோடு அடையளாம்
மட்டும் மாறவில்லை…
இனி
தினம் வருவேன்
என்னை புதுப்பிக்க…
மாலை நேர வெளிக்காடே…
தன்னம்பிக்கை கை கொடுக்கும்…

என் நிழலை சுற்றி
ஒரு கருவலயம்…
என் கனவை சுற்றி
ஒரு கருமேகம்…
எதிர்ப்பில்லாமல்
வாழ்கை இல்லை…
அளந்து வாழ
வாழ்கை…
ஒரு
அவலமா…என்ன!
திறக்காத மனதைக் கொண்டு…
வடித்து வைக்கும்
ஓவியங்கள்
மனிதர்களாய் இங்கே…
பாதையோரம்
மக்காமல்
கிடக்கும் பாலித்தீன் பைகளே…
திறன்கள் மறைந்து கிடக்கும்…
திட்டியவனை மறந்து விடுங்கள்…
ஒரு நாள்
வழி நெடுக
பூ சொறிவார்…திட்டியவனும்
புன்னகைப்பான்…
கை பிடித்து எழுந்திடுகள்…
உங்கள்
தன்னம்பிக்கை
கை கொடுக்கும்…
மனதில் நீந்துகிறாய்…

நீட்டிய கைகளை
மடக்கினாய்
உன் இனிய பொழுதுகள்
என்னுள் பிரவாகம் எடுத்தது…
நேரம் போகாத நிமிடங்கள்
உன் நேசத்தில்
கரைகிறது.
மலர்ந்தும் மலராததுமாக
அந்த ஒரு நொடியில்
பூவாய் பூக்கிறாய்…
உன் விழி திறந்து
காதல் வெப்பம்
நீக்கமற பரப்புகிறாய்…
தத்தி நீந்தும்
மீன் குஞ்சாய்
என் இமையில்
வழுக்கி
மனதில் நீந்துகிறாய்…
வெளிச்சம் குன்றிய மனங்கள்…

நெடு நாளைய
கனவு ஒன்று
காகித கப்பலில்
பயணம் செய்ய
என்
மனதை ஏற்றினேன்
ஒரு
மழைப் பொழுதில்…
நீர்த் துளி
பல பட்டு
மூழ்கும்
வேளையில்
என்
மனதை
எடுத்துவிட்டேன்..
என்
கப்பல்
மூழ்கியது…
என்
கண் எதிரே
வெளிச்சம் குன்றிய
இரவுகள்
வஞ்சகரின்
மனங்களை போல்
இருள் பரப்பியது
என்
காகித கப்பல்
மட்டும்
எப்படியோ
கரை சேர்ந்தது…
கலங்கரை விளக்கின்றி
வெறும் காகிதமாய்….
இனி
தடுக்க
வழியில்லை…
ஒரு
மரக்கப்பல்
செய்திடுவேன்…
என்
பயணத்தில்
மழை வந்தால்…
என்
மனதை
நனைத்திடுவேன்…
நெஞ்சத்தில்
துணிவு உண்டு
யார் தடுப்பார்
என் பயணத்தை…
உன் அருகாமை இன்றி…
திறக்காத கதவு
வழியே
வருகின்ற காற்றைப்
போல
உன்
இடைப் பிடித்து
தழுவிய
தருணங்கள்
நினைவுகளின்
ஊடாக
வழியேடுத்து
வந்து
வருத்துகிறது…
நீ
கட்டிய
புடவையும்
காய்ந்து
விழுந்த
காதோர
ரோசாப் பூவும்
உன்
அருகாமை
இன்றி
வதங்கிக் கிடக்கின்றன…
மஞ்சள் மலரே!
நீ
நடந்து வர…
உன்
பாதையெங்கும்
என்
கவிதைகள்
கால் கடுக்க
காத்திருக்கும்….
உன்
கோபம்
அவை அறியா…
தமிழின்
வல்லினத்தை
பயன்படுத்தி
அவைகளை வையாதே…
உன்
கோப வசவுக்காய்
முற்றத்தில்
நான் இருப்பேன்…
என் காதலியே…
கனவு என்பது…
எங்கும்
பனிப்பொலிவு…
மெல்லிய
காற்றின் ஓசை…
உடல் நடுக்கும்
அதிகாலைக் குளிர்…
சயனத்திருக்கும்
மலராத மொட்டுகள்…
உதறித் தள்ளுங்கள்
உங்கள்
கவலைகளை
அவை காற்றுவெளியில்
அலையட்டும்
அனாதைகளாய்…
நினைவு பறித்து
சில நிமிடம்
உடலை
சிந்திக்க விடுங்கள்…
நீர் பிடித்த
புது
விதையாய்
உங்கள் உள்ளங்கள்
துளிர்விடட்டும்
நிரம்பட்டும்
இனிய தருணங்களாய்…
கனவு என்பது
கண்களுக்குள் இல்லை…
நீண்ட இரவுக்குள்
ஒளிந்திருக்கும்
இனம் புரியா
கவிதை அது…
பல சமயம்
பொழுது புலர்ந்தும்
நினைவு துகள்களில்
இடப்பெயர்ச்சி
செய்யும்
இனிய தருணங்களாய்…
இலக்கில்லா பயணம்…
நிழலுக்கு ஒதுங்கி
நின்றேன்
அது
வெயில் காலமில்லை…
குடையுடன்
நடந்து வந்தேன்
அது
மாரிக் காலமில்லை…
கால் இடறி
தரையில்
விழுந்தேன்…
சற்றே
நிழல் கலைந்தேன்…
நிமிடங்களை பொசுக்கி
என்
கவலைகள் பசியாறின…
ஆனால்
வயிற்றுப் பசி
மட்டும்
மணி மணியாய்
கழுத்தை நெறிக்க…
எதுவும்
நடக்கவில்லை…
நான் மட்டும்
நடக்கின்றேன்…
வாசல்கள் கடக்கின்றேன்…
இலக்கில்லா பயணம்…
ஒவ்வொரு நிறுத்தமும்
உறுத்தியது… மனதை
இது ஒரு
இலக்கில்லா பயணம்…
கனவின் ஓரத்திலே நிழலாடுகிறது …
கேள்வி மட்டுமே கேட்கும்
ஒருத்தன்
முதல் முறை
பதில்
சொன்னான்…
அந்த பதிலும்
கேள்வியாகி போனது…
அவன் பதில்
“மன்னிப்பாயா”
அவன் கேட்ட
கேள்வி
“நான் உன்னை காதலிக்கிறேன்”
உங்களுக்கு
அது
கேள்வியாக
தெரியாது…
அவளிடம் இருந்து
பதில் கிடைக்காத
அவனுக்கு தான் தெரியும்…
அந்த
கேள்வியின் வலி…
அவன் சொன்ன பதிலும்…
கனவின் ஓரத்திலே
நிழலாடுகிறது …
கொத்தடிமை கணிப்பொறியாளன்…
மனதுக்குள்
பொதிந்து கிடந்த
உண்மைகள் …
காற்று துகள்களில்
பரந்து திரியும்
என் மவுனங்கள்…
எல்லாம் சேர்ந்து
என் உணர்வுகளை
வந்து வாட்டியது…
நேற்று பார்த்த
அதே இரவு…
பகல் பொழுதை
கொன்ற மகிழ்ச்சியில்
நிலவினை
மிரட்டிக் கொண்டிருந்தது
என்னையும் சேர்த்துதான்…
இந்த
நடுநிசி வேளையில்
என் தூக்கத்தை
திருடிய
என் கவலைகளை
துரத்துகிறேன்…
நான்
ஒரு சராசரி…
மதுவும்…மருந்தாகிவிட்டது…
மருந்தை போல்
அதுவும்
தற்சமயம்
வேலை செய்யவில்லை…
உறக்கத்தை
தொலைத்துவிட்டேன்..
மருத்துவர் சொன்னார்
ஏதோ ஒரு
ஆங்கிலப் பெயர்
வியாதியாம்
தூக்கமே வராதாம்…
நான் ஒரு
கொத்தடிமை
கணிப்பொறியாளன்…
வேறொன்றும் சொல்வதற்கில்லை…
சன் தொலைக்காட்சியில்…
தமிழா…
நீ நடந்து போன
வனங்கள்
எல்லாம்
இன்று
வளர்ந்த நாடுகள்…
நீ உணர்ந்து
சொல்லும்
வார்த்தைகள்
எல்லாம்
மாற்றானுக்கு
வழிமுறை…
ஒற்றுமை என்னும்
ஒன்று மட்டும்
விலகி நிற்க…
தனித்துவம் இன்றி…
நானும் தமிழன் என்கிறாய்…
அறிவாளியாய்
இருந்து விட்டாய்…
சிறிது நேரம்
தமிழனாய் இருந்து பார்
இழந்த
பெருமை தெரியும்…
இளைத்து போன
தமிழனையும் தெரியும்….
தமிழனை தேடப்போய்
இன்று
தமிழன்னை நடு தெருவில்…
காணமல் போன
விளம்பரம்
சன் தொலைக்காட்சியில்…
எதுவும் நிரந்தரமில்லை…
வருகின்ற நேரமும்
போகின்ற நேரமும்
உன்னையே
பார்க்கிறேன்…
நீ
பிறந்து
ஒரு வருடம்
முடியவில்லை
அதற்குள் ஏகப்பட்ட
தழும்புகள்…
விடாமல் சுற்றும்
பூமியும், சூரியனும்
உன்னால் தான்
நினைவில்
சுழல்கிறார்கள்…
தினமும்
கிழிந்து
ஒன்றை மட்டும்
விடாமல்
சொல்கிறாய்…
எதுவும் நிரந்தரமில்லை…
தீர்மானங்களே… உடைபதற்கு தானே!!!
என்னை
நேற்று வரை யாரோ
என்று பார்த்த காதலி
இன்று
அதை கூட செய்யவில்லை …
அவள் கழுத்தில் புது தாலி
இதுவரை
மவுனமாய் அழுது
கொண்டிருந்த
என் மனது உடைந்து
அழுகையை
கொட்டி தீர்த்தது…
போதையில் எடுத்த
வாந்தியோடு
தீர்ந்தது…
இந்த காதல் கதை…
இனி
என் வாழ்வில்
காதல் இல்லை…
தீர்மானமாய் சொல்லுகிறேன்…
இரண்டு வாரம்
இனிதே கழிந்தன…
துக்கம்
சிறிதளவும் இல்லை…
மணி எத்தனை?
சீக்கிரம் போகவேண்டும்
பேருந்தை பிடிக்க…
ஆமாம்
நிச்சயமாய்
இனி
என் வாழ்வில்
காதல் இல்லை…
தீர்மானமாய் சொல்லுகிறேன்…
தீர்மானங்களே…
உடைபதற்கு தானே!!!
அடுத்த பயணத்தில்…

















