பழனி பாத யாத்திரை…பயணம்… கொஞ்சம் காமெடி கூட… பயணம்-2

அப்படி இப்படினு ஒரு வழியா பத்து நாள் நடந்து பழனி வந்து சேர்த்தோம் மலை ஏற எல்லாம் தயாரா இருந்தாங்க… எனக்கா குதி காலில் தாங்க முடியாத வலி என்ன என்ன தவறு செய்தேனோ எல்லாம் கண்ணு முன்னாடி வந்துவிட்டு போச்சு… ஐயோ.. மலை ஏறலன பெரிய அசிங்கமா போய்டுமேனு ரொம்ப பீல் பண்ணி முருகன் கிட்ட வேண்டிகிட்டேன். ஒரு பத்து நிமிஷம் போச்சு கொஞ்சம் கொஞ்சம்மா வலி கொறைஞ்சது இதுல பெரிய விஷயம் என்னனா முருகன் உடனே மன்னுச்சுட்டாரு பாருங்க…என்ன தான் இருந்தாலும் நான் சின்ன பையன் தானே…
அந்த பயணத்த மனசுல வச்சுகிட்டு இப்ப போயிட்டு வரலாம்னு மாலைய போட்டாச்சு…ஏற்கனவே பல தவறுகள் செஞ்சு மலை ஏற முடியாம முருகன்கிட்ட புலம்புனது ஞாபகம் இருந்ததனால ரொம்ப ரொம்ப கவனமா விரதம் இருந்தேன். அந்த நாள் வந்துச்சு… திண்டுக்கல்ல இருந்து நடக்கிறதா முடிவு பண்ணி… நான் என் தம்பிக ரெண்டு பேரு அப்பறம் எங்க அப்பா அம்மா…எல்லாம் கிளம்பி திண்டுக்கல் வந்தாச்சு…
அனைவரும் அங்க இருந்த விநாயகர் கோயில்ல சாமிகும்பிட்டு எங்க பாதயாத்திரையை தொடங்கி ஐந்து நிமிசம் கூட ஆகல ஒரே வலி கால்ல… என்ன பிரச்சனைனா அப்பதான் புதுசா ரோடு போட்டுருகாங்க… அது மெயின் ரோடு வேற… ஓரம்மாத்தான் நடக்க முடியும்…அங்கபாத்து ரோடுக்கு போடுற சிமிண்டு ஜல்லி…சும்மா சொல்லகூடாது…ஊசிய ரோடு புல்லா நட்டுவச்ச மாதிரி ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியல… எங்க அம்மாவும் சின்ன தம்பியும் வேக வேகம முன்னாடி போக…மீதி மூனு பேரும்…கொஞ்சம் கொஞ்சம்மா பின்னாடி போய்கிட்டிருந்தும் அவங்க வேகத்துக்கு… நான் ஒரு மைல் கல்லையும் விடவில்லை…எல்லா மைல்க்கல்லிலையும் உட்கார்ந்து ஓய்வு எடுத்து சாதனை செய்தேன்…
தொடருங்க…

பழனி பாத யாத்திரை…பயணம்… கொஞ்சம் காமெடி கூட…




சின்ன வயசுல எங்க அப்பாத்தா, ஐயா,அப்பா கூட போயிஇருந்தேன்… நல்ல சந்தோஷமான பயண அனுபவம்… டிசம்பர் குளுருல போயிட்டு வந்த நினைவுகள் அப்படியே இருக்கு அப்ப எனக்கு 16 வயசு இருக்கும் காலை மாலை குளிக்கணும் அது ஒரு பெரிய பிரச்சனை… மாலை கூட பரவாயில்லை காலை தான் தொல்லை 5 மணிக்கு எங்க அப்பா எழுப்பி விடுவாரு ஆமாம் அவரும் மலைக்கு மாலை போடிருந்தாரு…  48 நாளு மிக கடுமையான விரதம் நான் இல்லை எங்க அப்பா.. நான் என்ன.. என்ன.. கோல்மால் செய்தேன்னு எனக்கு தான் தெரியம்… எங்க அம்மாவுக்கு நான்னா கொஞ்சம் பாசம் அதிகம்… அது போதாதா மூத்த பையன் வேற… என் அப்பா மட்டும் விரதம் இருக்க நான் யாருக்கும் தெரியாமல் ஹோட்டலில் போய் விரதத்தை முடித்துவிடுவேன்… முருகன் தப்பா எடுத்துக்கமாட்டார் சின்ன பையன் தானே….

அப்பறம் ஒரு பெரிய தொல்லை பொண்ணுங்க… எப்படிங்க அந்த வயசுல பாக்க கூடாதுன்னா.. முடியல… முருகனே ரொம்ப பீல் பண்ணிருப்பார் என்னோட சாரிய கேட்டு கேட்டு… அந்த கதைய விடுங்க… பழனிக்கு அப்ப போனது உண்மையாவே நல்ல அனுபவம்… ரோட்ல தூங்கி…ரோட்லயே சாப்பிட்டு..ரோட்டோராமா இருகிற குட்டைல குளிச்சு.. சில சமயம் பம்ப்பு செட்ல குளிச்சு… குன்றகுடில இருந்து பழனி வரைக்கும் அப்ப இருந்த சுமார் ரக ரோடுகள்…இருபக்கமும் பச்சை பச்சை என வயல் வெளியா சில சமயம் மட்டாந்தரையா சில சமயம்… காய்ந்து போன கிழக்கு தொடர்ச்சி மலையின் எச்சங்கள்… சும்மா சொல்ல கூடாது….அருமையான நினைவுங்க எழுதும் போதே சுகமா இருக்கு…

புதிதா ஆரம்பிச்ச பதிவா… நிறைய விஷயம் இருக்கு….இந்த இங்கிலீஷ்ல இருந்து தமிழா மாத்துவததுக்குள்ள தாவு தீந்திருது (“மாத்துவததுக்குள்ள” இத அடிக்க இது வருது “மத்ரதுகுள்ள” முடியல… இப்பவே கண்ண கட்டுது… நிறைய இருக்குங்க… எங்கயும் போய்டாதீங்க…வெகு விரைவில் உங்கள் அபிமான RSS Feed ல பார்ப்போம்…தொடருங்க… )