ராசராசசோழன் மொழிவது…
எல்லாருமே அமைதியா இருந்தாலும் சீமான் இருக்கமாட்டாருனு நினைகிறேன்…
அவரு போசுறதுல எனக்கு எதுவும் தப்பு இருக்குற மாதிரி தெரியல…உளவுத்துறைன்னு ஒன்னு இருக்குங்க…அது செய்ற வேலை கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க… சராசரி மனிதனுக்கு அவ்வளவா புரியாது… உள்நாட்டு பாதுகாப்பு, வல்லரசு ஆகனும் என்கின்ற வெறியில அண்டை நாட்டுல செய்ற அட்டுழியம்…எதுவும் சொல்றதுக்கு இல்ல… என்ன சித்தாந்தம்னா…அடுத்தவனுக்கு தொல்லை கொடுத்தா அத சமாளிக்கவே அவன் நேரம் சரியா இருக்கும்…நம்ம நிம்மதியா இருக்கலாம் என்கின்ற தப்பு கணக்கு தாங்க…அதாவது பரவால.. அடுத்த நாடு…. தன் நாட்டு மக்களையே போட்டு பாக்குறது தான் தாங்க முடியல…அதுவும்… கருணாநிதி, தமிழ் நாடு காங்கிரஸ் அவங்க தான் தமிழர்னு நெனசுகிட்டு அவங்க செய்ற கூத்து….ரொம்ப கஷ்டம்…
சீமான் என்ன சொல்றார்னு கேளுங்க…
————————————————————————————————————-
ரயில் பாதை தகர்ப்பு: பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதி-சீமான்
விழுப்புரம் குண்டுவெடிப்புச் சம்பவம் முழுக்க முழுக்கபிரபாகரன்
ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதியே, என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதியே, என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி நாம்தமிழர் இயக்க தலைவர் சீமான் இன்று கூறியதாவது:
தமிழர்கள் எவரும் இது போன்ற காரியத்தை செய்ய மாட்டார்கள். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்ற துண்டு பிரசுரம் கிடந்ததாக போலீஸ் சொல்கிறது.
பிரபாகரனே வன்முறைக்கு எதிரானவர்தான். 30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் மீது ஒரு அரசு ஏவிய பயங்கரவாதத்தை எதிர்த்துதான் போரிட்டார் அவரது எதிரிகள் சிங்கள ராணுவமும் ராணுவ தளவாடங்களும்தான். சிங்கள மக்கள் அல்ல. பலாலி விமான தளம் மீதுதாக்குதல்
நடத்திய போது பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடத்தை தாக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான தமிழ் பெண்களை சிங்களர்கள் பாலியல் பலாத்காரம் செய்த போதும் கூட, பதிலுக்கு ஒரு சிங்கள பெண்ணின் தாவணியை கூட தொட்டு இழுக்கவில்லை.
நடத்திய போது பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடத்தை தாக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான தமிழ் பெண்களை சிங்களர்கள் பாலியல் பலாத்காரம் செய்த போதும் கூட, பதிலுக்கு ஒரு சிங்கள பெண்ணின் தாவணியை கூட தொட்டு இழுக்கவில்லை.
அப்படிப்பட்டவரின் பெருமையை கொச்சைப்படுத்துவதாக இந்த துண்டு காகிதம் உள்ளது. ஈழ விடுதலைக்கு போராடுபவர்களை தலை குனிய வைக்கவும் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்பு போல் காட்டி முடக்கி போடவும் நடந்துள்ள சதித் திட்டமாகவே இது படுகிறது. ராஜபக்சேவை திருப்திப்படுத்த அரசுகளின் ஆதரவுடன் நடந்த சதி இது என்கிறேன்.
ஈழத்தில் போரை நிறுத்த சொல்லி இங்கு தமிழர்கள் போராட்டம்
நடத்தியபோது ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லையே. மழையில் நனைந்தும், பட்டினி கிடந்ததும் முத்துக்குமார் போல் எரிந்தும் தன்னைத்தானே வருத்துகிற நிகழ்வுகள்தான் நடந்தன. கடும் மன அழுத்தத்தில் கூட வன்முறையில் ஈடுபடவில்லை. மொழிப் போராட்டத்தில் கூட தங்களை தாங்களே மாய்த்தனர்.
நடத்தியபோது ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லையே. மழையில் நனைந்தும், பட்டினி கிடந்ததும் முத்துக்குமார் போல் எரிந்தும் தன்னைத்தானே வருத்துகிற நிகழ்வுகள்தான் நடந்தன. கடும் மன அழுத்தத்தில் கூட வன்முறையில் ஈடுபடவில்லை. மொழிப் போராட்டத்தில் கூட தங்களை தாங்களே மாய்த்தனர்.
தமிழர்கள் முழு ஜனநாயகவாதிகள். பிரபாகரன் தம்பிகள் வன்முறையில் காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல. தேசிய இன விடுதலை மீது பற்று கொண்ட போராளிகள்.
தொடர் வண்டி தண்டவாள குண்டு வெடிப்பில் இருப்பு பாதை மரக்கட்டைகள் உருக்குலைந்துள்ளன. ஆனால் பிரபாகரன் தம்பிகள் என்ற துண்டுப் பிரசுரம் மட்டும் எவ்வித சேதமும் இல்லாமல் புத்தம் புதிதாகக் கிடந்தது. அது மட்டுமல்ல… விபத்து குறித்து முதலில் வந்த செய்திகளில் துண்டுப் பிரசுரம் குறித்து தகவலே இல்லை. இதற்கு காரணம் யார் என போலீஸார் தேடி வருகிறார்கள் என்று மட்டும்தான் சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் துண்டுப் பிரசுரம் வந்திருக்கிறது. எப்படி என்றுதான் புரியவில்லை!
பெரும் காற்று வீசும் வனப்பகுதியில் துண்டு பிரசுரம் பறக்காமல் கிடக்குமா அதன் மேல் கல் வைத்திருந்தால் கூட அழுக்குப் படிந்திருக்கும். அப்படி இல்லாமல் காகிதம் பளிச்சென்று உள்ளது. இதில் மறைந்துள்ள சதி… உள்நோக்கம் நம்மைவிட அரசுகளுக்கே நன்கு தெரியும். அவர்கள்தான் விளக்க வேண்டும்..” என்றார்.
————————————————————————————————————-
நல்ல வேளை தமிழ் நாட்டில் நான் இல்லை…
நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை…
ஒரு
உணர்வற்ற தலைவன்
குடும்பத்தோடு
ஆட்சி கட்டிலில்
கும்மாளம் அடிப்பதை
காண்பதற்கு….
நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை…
தன்
இனம்
அழித்தவனை
ஆரத்தழுவும்
அருவருப்பை
காண்பதற்கு….
நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை…
அரசியல்
என்றால்
கண்ணில்
ஆட்சி மட்டும்
பளபளக்கும்
தமிழ்
அரசியல்வாதி குமுட்டைகளை
காண்பதற்கு….
நல்ல வேளை
தமிழ் நாட்டில்
நான்
இல்லை…
ஐயோ
என் தமிழ் நாட்டில்
நான் இல்லை…
முத்துக்குமார் போன்று
சிறு பொறியாய்…
என்
இனமே
துரோகி கூட்டங்களால்
தூள் தூளாகி போனயே!
மரணத்தை
வென்ற மாவீரர்கள்
புகைபடங்களில்
துரோக கூட்டங்கள்
மனதை
அம்மணமாக்கி
அம்பலத்தில்….
நெருப்பு என்றல் சுடும்…
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ஈழ தமிழர் பற்றி… பொதுவா தமிழர்களிடம் ஒற்றுமையை எதிர்பார்ப்பது மிக பெரிய முட்டாள்தனம் ஆனால் ஈழ தமிழர்களின் ராணுவ வளர்ச்சி, என் எண்ணம் தவறு என்ற முடிவுக்கு வந்தேன். கடந்த வருட புலிகளின் தோல்வி மனதை ரொம்ப பதித்தது கொஞ்சம் நேரத்தை செலவழித்து இலங்கை பற்றி ரொம்ப படித்தேன்.எனக்கு தெரிந்த வரை அவர்களின் தோல்விக்கு ஒற்றுமை என்ற ஒன்றை உலக அளவில் தமிழர்கள் மறந்துவிட்டதே காரணம், பல கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தின் தென்பகுதி உரக்க கத்தினால் கேட்டாலும் கேட்டுவிடும் அவ்வளவு தூரம் தான் ஆனால் போர் சமயத்தில் கதறி அழுதும் அசரவில்லை நம் தமிழக மக்கள்… அதை விட கொடுமை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து அவர்களை ஏமாற்ற நினைத்தது…
புலிகளை தீவிரவாதி என்று முத்திரை குத்தி ஒழித்துவிட்டனர்… புரட்சிக்கு கொடி பிடித்த காலம் போய் புரட்சி என்றலே தீவிரவாதம் என்கின்ற நிலை இப்போது… அமெரிக்காவின் 9/11க்கு பின்பான உலக மாற்றத்தில் இனி அடிமையாய் மட்டுமே வாழ பழகி கொள்ள வேண்டும் போல…
எனது அலுவலக தோழர் ஒருவர் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்… வெள்ளை மாளிகையின் அருகில் கலாச்சார விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்ததாம் ஓவ்வொரு இன மக்களுக்கும் தனி தனியே இடம் ஒதுக்கி உள்ளனர். இவருக்கோ நல்ல பசி அந்த சமயம் பார்த்து பஞ்சாப் இன மக்களின் இடம் வர இவரும் போய் கைக்குலுக்கி அன்பை பரிமாறியுள்ளார் இந்தியர் என்ற முறையில் அவர்களும் வரவேற்று உணவை உண்ண கொடுத்துள்ளனர் நண்பருக்கோ நல்ல பசி வேகவேகமாய் அருந்தி கொண்டிருக்கும் போது ஒருவர் மேடையில் அறிவித்துக்கொண்டிருக்கிறார் இப்படி “இந்தியாவால் ஆக்கிரமிக்கபட்ட காலிஸ்தான் தேச உணவு இங்கே பரிமாறப்பட்டுக் கொண்டிருகிறது” என்றாராம் நண்பருக்கு வந்ததே கோபம் கொடுத்த உணவை பசி இருந்தும் திரும்ப கொடுத்துவிட்டு நடையை கட்டியுள்ளார். அந்த நண்பர் ஓரு தமிழரும் கூட, மற்றந்தாய் மனபான்மையில் வடஇந்தியர் நம்மை நடத்தினாலும் நாம் என்னமோ என்றும் இந்தியர் என்ற எண்ணத்தை மாற்றியதில்லை. ஆனால் முதலில் நான் ஒரு மனிதன், அடுத்து ஒரு ஆண், அடுத்து ஒரு தமிழன், ஒன்றுபட்ட தேசத்தில் வசிப்பதால் நான் ஒரு இந்தியன்… இப்படி இருக்க நிலத்தால் வேறுபட்டு மொழியால் ஒன்று பட்டவன் மீது அதுவும் அடிமைககளாய் அடக்க பட்டுகொண்டிருப்பவனை கண்டு இரக்கப்பட்டால் தவறு என்று கச்சை கட்டும் காங்கிரஸ் மற்றும் பல தமிழ் இன துரோகிகளை என்ன செய்யலாம்…
அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தே உலக நாடுகளை அடக்கி கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இப்போது வேறுபாடு ஒன்றும் இல்லை. தன் மக்கள் தொகையில் 6 கோடிக்கும் மேல் இருக்கும் ஜனத்திரளின் கோபத்தை துச்சமாக நினைத்து சர்வதேச சபையில் (U.N) எதிரி நாடுகளுடன் சேர்ந்து இலங்கைக்கு ஓட்டளித்தது எந்த வகை நியாயம்…
ராஜபக்சேயின் போர்குற்றதை பற்றி நான் பேச போவது கிடையாது…அவனை மட்டும் தூக்கில் போட்டாள் அந்த பாவம் கரையாது… அதற்கு பல பங்குதாரர்கள்…இந்திய உட்பட… அதை பற்றி பேசினால் நமக்கு நாமே சேர் அள்ளி பூசுவதற்கு சமம்…ஆனால் நிச்சயம் நமக்கு தண்டனை உண்டு…அதுவும் இந்திய தமிழராய் இருந்தால் ஒருக்காலும் நான் அப்பாவி என்று தப்பிக்க முடியாது…





